លេខ​ទំព័រ:close

external-link copy
123 : 9

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا قَاتِلُوا الَّذِیْنَ یَلُوْنَكُمْ مِّنَ الْكُفَّارِ وَلْیَجِدُوْا فِیْكُمْ غِلْظَةً ؕ— وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِیْنَ ۟

நம்பிக்கையாளர்களே! நிராகரிப்பாளர்களில் உங்களை அடுத்திருக்கின்றவர்களிடம் போரிடுங்கள். அவர்கள் உங்களிடம் ஒரு கடுமையைக் காணட்டும். நிச்சயமாக அல்லாஹ் (தன்னை) அஞ்சுபவர்களுடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். info
التفاسير: |

external-link copy
124 : 9

وَاِذَا مَاۤ اُنْزِلَتْ سُوْرَةٌ فَمِنْهُمْ مَّنْ یَّقُوْلُ اَیُّكُمْ زَادَتْهُ هٰذِهٖۤ اِیْمَانًا ۚ— فَاَمَّا الَّذِیْنَ اٰمَنُوْا فَزَادَتْهُمْ اِیْمَانًا وَّهُمْ یَسْتَبْشِرُوْنَ ۟

ஓர் (புதிய) அத்தியாயம் இறக்கப்பட்டால் “உங்களில் எவருக்கு இது நம்பிக்கையை அதிகப்படுத்தியது?” என்று கேட்பவர் அவர்களில் இருக்கின்றனர். ஆகவே, நம்பிக்கை கொண்டவர்களோ, அவர்களுக்கு (இது) நம்பிக்கையை அதிகப்படுத்தியது. அவர்களோ மகிழ்ச்சியடைகின்றனர். info
التفاسير: |

external-link copy
125 : 9

وَاَمَّا الَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ فَزَادَتْهُمْ رِجْسًا اِلٰی رِجْسِهِمْ وَمَاتُوْا وَهُمْ كٰفِرُوْنَ ۟

ஆகவே, எவர்களுடைய உள்ளங்களில் ஒரு நோய் இருக்கிறதோ அவர்களுக்கு அவர்களுடைய அசுத்தத்துடன் ஒரு அசுத்தத்தையே (அது) அதிகப்படுத்தியது! அவர்களோ நிராகரிப்பாளர்களாகவே இறந்தனர். info
التفاسير: |

external-link copy
126 : 9

اَوَلَا یَرَوْنَ اَنَّهُمْ یُفْتَنُوْنَ فِیْ كُلِّ عَامٍ مَّرَّةً اَوْ مَرَّتَیْنِ ثُمَّ لَا یَتُوْبُوْنَ وَلَا هُمْ یَذَّكَّرُوْنَ ۟

ஒவ்வோர் ஆண்டிலும் ஒரு முறையோ அல்லது இரு முறைகளோ நிச்சயமாக அவர்கள் சோதிக்கப்படுகின்றனர் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? பிறகும் அவர்கள் திருந்தவில்லை; அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதில்லை. info
التفاسير: |

external-link copy
127 : 9

وَاِذَا مَاۤ اُنْزِلَتْ سُوْرَةٌ نَّظَرَ بَعْضُهُمْ اِلٰی بَعْضٍ ؕ— هَلْ یَرٰىكُمْ مِّنْ اَحَدٍ ثُمَّ انْصَرَفُوْا ؕ— صَرَفَ اللّٰهُ قُلُوْبَهُمْ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا یَفْقَهُوْنَ ۟

ஓர் (புதிய) அத்தியாயம் இறக்கப்பட்டால், அவர்களில் சிலர் சிலரை (விரைக்கப்) பார்க்கிறார்களா? “உங்களை யாரும் பார்க்கின்றனரா?” என்று (கேட்டு விட்டு) பின்னர், (அங்கிருந்து) திரும்பி விடுகின்றனர். நிச்சயமாக அவர்கள் (சத்தியத்தை) அறியாத மக்களாக இருக்கும் காரணத்தால், அல்லாஹ்(வும்) அவர்களுடைய உள்ளங்களை திருப்பிவிட்டான். info
التفاسير: |

external-link copy
128 : 9

لَقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِیْزٌ عَلَیْهِ مَا عَنِتُّمْ حَرِیْصٌ عَلَیْكُمْ بِالْمُؤْمِنِیْنَ رَءُوْفٌ رَّحِیْمٌ ۟

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் சிரமப்படுவதை தன் மீது கடினமாக உணரக்கூடிய; உங்கள் மீது பேராசையுடைய; நம்பிக்கையாளர்கள் மீது பெரும் இரக்கமுள்ள; பெரும் கருணையுள்ள ஒரு தூதர் உங்களிலிருந்தே உங்களிடம் வந்துவிட்டார். info
التفاسير: |

external-link copy
129 : 9

فَاِنْ تَوَلَّوْا فَقُلْ حَسْبِیَ اللّٰهُ ۖؗ— لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ— عَلَیْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِیْمِ ۟۠

(நபியே) கூறுவீராக! அவர்கள் (உம்மை விட்டு விலகி) திரும்பினால் “எனக்குப் போதுமானவன் அல்லாஹ்தான்; அவனைத் தவிர அறவே வணக்கத்திற்குரிய (வேறு இறை)வன் இல்லை; அவன் மீதே நான் நம்பிக்கை வைத்துவிட்டேன்; அவன் மகத்தான ‘அர்ஷின்’ அதிபதி.” info
التفاسير: |