លេខ​ទំព័រ:close

external-link copy
112 : 9

اَلتَّآىِٕبُوْنَ الْعٰبِدُوْنَ الْحٰمِدُوْنَ السَّآىِٕحُوْنَ الرّٰكِعُوْنَ السّٰجِدُوْنَ الْاٰمِرُوْنَ بِالْمَعْرُوْفِ وَالنَّاهُوْنَ عَنِ الْمُنْكَرِ وَالْحٰفِظُوْنَ لِحُدُوْدِ اللّٰهِ ؕ— وَبَشِّرِ الْمُؤْمِنِیْنَ ۟

(அவர்கள் பாவத்திலிருந்து) திருந்தியவர்கள்; வணக்கசாலிகள்; (அல்லாஹ்வை) புகழ்பவர்கள்; நோன்பு நோற்பவர்கள்; (தொழுகையில்) குனிபவர்கள், சிரம் பணிபவர்கள்; நன்மையை ஏவக் கூடியவர்கள்; பாவத்தை விட்டுத் தடுக்கக்கூடியவர்கள்; அல்லாஹ்வுடைய சட்டங்களைப் பாதுகாப்பவர்கள் ஆவர். (இத்தகைய) நம்பிக்கையாளர்களுக்கு (சொர்க்கத்தின்) நற்செய்தி கூறுவீராக! info
التفاسير: |

external-link copy
113 : 9

مَا كَانَ لِلنَّبِیِّ وَالَّذِیْنَ اٰمَنُوْۤا اَنْ یَّسْتَغْفِرُوْا لِلْمُشْرِكِیْنَ وَلَوْ كَانُوْۤا اُولِیْ قُرْبٰی مِنْ بَعْدِ مَا تَبَیَّنَ لَهُمْ اَنَّهُمْ اَصْحٰبُ الْجَحِیْمِ ۟

நிச்சயமாக (இணைவைப்பவர்கள்) அவர்கள் நரகவாசிகள் என்று தங்களுக்குத் தெளிவாகிய பின்னர், அவர்கள் உறவினர்களாக இருந்தாலும் இணைவைப்பவர்களுக்காக மன்னிப்புக் கோருவது நபிக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் தகுந்ததல்ல. info
التفاسير: |

external-link copy
114 : 9

وَمَا كَانَ اسْتِغْفَارُ اِبْرٰهِیْمَ لِاَبِیْهِ اِلَّا عَنْ مَّوْعِدَةٍ وَّعَدَهَاۤ اِیَّاهُ ۚ— فَلَمَّا تَبَیَّنَ لَهٗۤ اَنَّهٗ عَدُوٌّ لِّلّٰهِ تَبَرَّاَ مِنْهُ ؕ— اِنَّ اِبْرٰهِیْمَ لَاَوَّاهٌ حَلِیْمٌ ۟

(நபி) இப்ராஹீம் தன் தந்தைக்கு மன்னிப்புக் கோரியது, அவர் அவருக்கு வாக்களித்த வாக்குறுதிக்காகவே தவிர (வேறு எதற்காகவும்) இருக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ்வுக்கு அவர் ஓர் எதிரி என அவருக்குத் தெளிவானபோது அவரிலிருந்து அவர் விலகிக்கொண்டார். நிச்சயமாக இப்ராஹீம் அதிகம் பிரார்த்திப்பவர், பெரும் சகிப்பாளர். info
التفاسير: |

external-link copy
115 : 9

وَمَا كَانَ اللّٰهُ لِیُضِلَّ قَوْمًا بَعْدَ اِذْ هَدٰىهُمْ حَتّٰی یُبَیِّنَ لَهُمْ مَّا یَتَّقُوْنَ ؕ— اِنَّ اللّٰهَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟

ஒரு கூட்டத்தை அவர்களை அல்லாஹ் நேர்வழிப்படுத்திய பின்னர் அவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டியவற்றை அவன் அவர்களுக்கு விவரிக்கும் வரை அவர்களை அவன் வழிகெடுப்பவனாக ஆகியிருக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன். info
التفاسير: |

external-link copy
116 : 9

اِنَّ اللّٰهَ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— یُحْیٖ وَیُمِیْتُ ؕ— وَمَا لَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ وَّلِیٍّ وَّلَا نَصِیْرٍ ۟

நிச்சயமாக அல்லாஹ், வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது! (அவனே) உயிர்ப்பிக்கிறான்; இன்னும் மரணிக்கச் செய்கிறான். அல்லாஹ்வை அன்றி உங்களுக்கு எந்த ஒரு பாதுகாவலரும் இல்லை; ஓர் உதவியாளரும் இல்லை. info
التفاسير: |

external-link copy
117 : 9

لَقَدْ تَّابَ اللّٰهُ عَلَی النَّبِیِّ وَالْمُهٰجِرِیْنَ وَالْاَنْصَارِ الَّذِیْنَ اتَّبَعُوْهُ فِیْ سَاعَةِ الْعُسْرَةِ مِنْ بَعْدِ مَا كَادَ یَزِیْغُ قُلُوْبُ فَرِیْقٍ مِّنْهُمْ ثُمَّ تَابَ عَلَیْهِمْ ؕ— اِنَّهٗ بِهِمْ رَءُوْفٌ رَّحِیْمٌ ۟ۙ

நபி இன்னும் சிரம காலத்தில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்கள், திட்டவட்டமாக அன்ஸாரிகள் மீது அல்லாஹ் மன்னித்தான் (தோழர்களாகிய) அவர்களில் ஒரு பிரிவினரின் உள்ளங்கள் வழிதவற நெருங்கிய பின்னர். பிறகு(ம்) அவர்களை மன்னித்தான். நிச்சயமாக அவன் அவர்கள் மீது இரக்கமுள்ளவன், பெரும் கருணையாளன் ஆவான். info
التفاسير: |