លេខ​ទំព័រ:close

external-link copy
80 : 9

اِسْتَغْفِرْ لَهُمْ اَوْ لَا تَسْتَغْفِرْ لَهُمْ ؕ— اِنْ تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِیْنَ مَرَّةً فَلَنْ یَّغْفِرَ اللّٰهُ لَهُمْ ؕ— ذٰلِكَ بِاَنَّهُمْ كَفَرُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ ؕ— وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الْفٰسِقِیْنَ ۟۠

(நபியே!) நீர் அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக! அல்லது அவர்களுக்காக மன்னிப்புத் தேடாதீர்! அவர்களுக்காக நீர் எழுபது முறை மன்னிப்புத் தேடினாலும் அல்லாஹ் அவர்களை மன்னிக்கவே மாட்டான். அதற்குக் காரணம் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நிராகரித்தனர்; அல்லாஹ், பாவிகளான மக்களை நேர்வழி செலுத்தமாட்டான். info
التفاسير: |

external-link copy
81 : 9

فَرِحَ الْمُخَلَّفُوْنَ بِمَقْعَدِهِمْ خِلٰفَ رَسُوْلِ اللّٰهِ وَكَرِهُوْۤا اَنْ یُّجَاهِدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ فِیْ سَبِیْلِ اللّٰهِ وَقَالُوْا لَا تَنْفِرُوْا فِی الْحَرِّ ؕ— قُلْ نَارُ جَهَنَّمَ اَشَدُّ حَرًّا ؕ— لَوْ كَانُوْا یَفْقَهُوْنَ ۟

பின் தங்கியவர்கள், அல்லாஹ்வின் தூதருக்கு மாறாக(த் தங்கள் வீடுகளில்) தாங்கள் தங்கியதைப் பற்றி மகிழ்ச்சியடைந்தனர். அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வங்களாலும், தங்கள் உயிர்களாலும் போரிடுவதை வெறுத்தனர். (மற்றவர்களுக்கு) “வெயிலில் (போருக்குப்) புறப்படாதீர்கள்” என்று கூறினர். (நபியே!) “நரகத்தின் நெருப்பு வெப்பத்தால் மிகக் கடுமையானது” என்று கூறுவீராக. (இதை) அவர்கள் சிந்தித்து விளங்குபவர்களாக இருக்க வேண்டுமே! info
التفاسير: |

external-link copy
82 : 9

فَلْیَضْحَكُوْا قَلِیْلًا وَّلْیَبْكُوْا كَثِیْرًا ۚ— جَزَآءً بِمَا كَانُوْا یَكْسِبُوْنَ ۟

(இவ்வுலகில்) அவர்கள் குறைவாக சிரிக்கட்டும். அவர்கள் செய்து கொண்டிருந்ததற்கு கூலியாக (மறுமையில்) அதிகமாக அழட்டும்! info
التفاسير: |

external-link copy
83 : 9

فَاِنْ رَّجَعَكَ اللّٰهُ اِلٰی طَآىِٕفَةٍ مِّنْهُمْ فَاسْتَاْذَنُوْكَ لِلْخُرُوْجِ فَقُلْ لَّنْ تَخْرُجُوْا مَعِیَ اَبَدًا وَّلَنْ تُقَاتِلُوْا مَعِیَ عَدُوًّا ؕ— اِنَّكُمْ رَضِیْتُمْ بِالْقُعُوْدِ اَوَّلَ مَرَّةٍ فَاقْعُدُوْا مَعَ الْخٰلِفِیْنَ ۟

(நபியே!) அல்லாஹ் உம்மை (வெற்றி பெற்றவராக) அவர்களில் ஒரு கூட்டத்திடம் திருப்பி, (அடுத்த போரில் உம்முடன்) அவர்கள் வெளியேறுவதற்கு உம்மிடம் அனுமதி கோரினால், (நீர்) கூறுவீராக: “ஒருபோதும் என்னுடன் அறவே புறப்படாதீர்கள். என்னுடன் சேர்ந்து (எந்த) ஒரு எதிரியிடமும் அறவே போரிடாதீர்கள். நிச்சயமாக நீங்கள் முதல் முறை (வீட்டில்) உட்கார்ந்து விடுவதை விரும்பினீர்கள். ஆகவே, (இப்போதும்) பின் தங்கிவிடுபவர்களுடன் உட்கார்ந்து விடுங்கள்.” info
التفاسير: |

external-link copy
84 : 9

وَلَا تُصَلِّ عَلٰۤی اَحَدٍ مِّنْهُمْ مَّاتَ اَبَدًا وَّلَا تَقُمْ عَلٰی قَبْرِهٖ ؕ— اِنَّهُمْ كَفَرُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَمَاتُوْا وَهُمْ فٰسِقُوْنَ ۟

(நபியே!) அவர்களில் இறந்த ஒருவர் மீது ஒருபோதும் (ஜனாஸா தொழுகை) தொழாதீர். அவருடைய புதைகுழிக்கு அருகில் நிற்காதீர். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தனர். இன்னும் அவர்களோ பாவிகளாக இறந்தனர். info
التفاسير: |

external-link copy
85 : 9

وَلَا تُعْجِبْكَ اَمْوَالُهُمْ وَاَوْلَادُهُمْ ؕ— اِنَّمَا یُرِیْدُ اللّٰهُ اَنْ یُّعَذِّبَهُمْ بِهَا فِی الدُّنْیَا وَتَزْهَقَ اَنْفُسُهُمْ وَهُمْ كٰفِرُوْنَ ۟

அவர்களுடைய செல்வங்களும் அவர்களுடைய பிள்ளைகளும் உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம். அல்லாஹ் நாடுவதெல்லாம் அவற்றின் மூலம் உலகில் அவர்களை வேதனை செய்வதற்கும், அவர்கள் நிராகரித்தவர்களாக இருக்க அவர்களுடைய உயிர்கள் பிரிவதையும்தான். info
التفاسير: |

external-link copy
86 : 9

وَاِذَاۤ اُنْزِلَتْ سُوْرَةٌ اَنْ اٰمِنُوْا بِاللّٰهِ وَجَاهِدُوْا مَعَ رَسُوْلِهِ اسْتَاْذَنَكَ اُولُوا الطَّوْلِ مِنْهُمْ وَقَالُوْا ذَرْنَا نَكُنْ مَّعَ الْقٰعِدِیْنَ ۟

அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளுங்கள்; அவனுடைய தூதருடன் சேர்ந்து போரிடுங்கள் என்று ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டால் அவர்களிலுள்ள செல்வந்தர்கள் உம்மிடம் அனுமதிகோரி, “எங்களை விட்டுவிடுவீராக!; (போருக்கு வராமல் வீட்டில்) உட்கார்ந்தவர்களுடன் (நாங்களும்) இருக்கிறோம்” என்று கூறுகின்றனர். info
التفاسير: |