Check out the new design

ಪವಿತ್ರ ಕುರ್‌ಆನ್ ಅರ್ಥಾನುವಾದ - ತಮಿಳು ಅನುವಾದ - ಅಬ್ದುಲ್ ಹಮೀದ್ ಬಾಖವಿ * - ಅನುವಾದಗಳ ವಿಷಯಸೂಚಿ

XML CSV Excel API
Please review the Terms and Policies

ಅರ್ಥಗಳ ಅನುವಾದ ಅಧ್ಯಾಯ: ಅಲ್- ಬಕರ   ಶ್ಲೋಕ:
وَقَالَتِ الْیَهُوْدُ لَیْسَتِ النَّصٰرٰی عَلٰی شَیْءٍ ۪— وَّقَالَتِ النَّصٰرٰی لَیْسَتِ الْیَهُوْدُ عَلٰی شَیْءٍ ۙ— وَّهُمْ یَتْلُوْنَ الْكِتٰبَ ؕ— كَذٰلِكَ قَالَ الَّذِیْنَ لَا یَعْلَمُوْنَ مِثْلَ قَوْلِهِمْ ۚ— فَاللّٰهُ یَحْكُمُ بَیْنَهُمْ یَوْمَ الْقِیٰمَةِ فِیْمَا كَانُوْا فِیْهِ یَخْتَلِفُوْنَ ۟
113. இன்னும், ‘‘கிறிஸ்தவர்கள் எ(ந்த மார்க்கத்)திலுமில்லை'' என யூதர்கள் கூறுகின்றனர். (அவ்வான்ற) ‘‘யூதர்கள் எ(ந்த மார்க்கத்)திலுமில்லை'' எனக் கிறிஸ்தவர்களும் கூறுகின்றனர். ஆனால், இவ்விருவருமே (தங்களின் கூற்றுக்கு ஆதாரமாக பைபிளின் ‘பழைய ஏற்பாடாகிய' தவ்றாத் என்னும் ஒரே) வேதத்தை(த்தான்) ஓதுகிறார்கள். இவர்கள் கூறிக்கொள்வது போலவே (வேதத்தை) அறியாத (இணைவைத்து வணங்குப)வர்கள் (‘‘யூதர்களும் கிறிஸ்தவர்களும் எம்மார்க்கத்தையும் சேர்ந்தவர்கள் அல்ல'' எனக்) கூறுகிறார்கள். ஆனால், இவர்கள் செய்து கொண்டிருக்கும் இந்த தர்க்கத்தைப் பற்றி மறுமையில் அல்லாஹ் இவர்களுக்குத் தீர்ப்பளிப்பான்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَمَنْ اَظْلَمُ مِمَّنْ مَّنَعَ مَسٰجِدَ اللّٰهِ اَنْ یُّذْكَرَ فِیْهَا اسْمُهٗ وَسَعٰی فِیْ خَرَابِهَا ؕ— اُولٰٓىِٕكَ مَا كَانَ لَهُمْ اَنْ یَّدْخُلُوْهَاۤ اِلَّا خَآىِٕفِیْنَ ؕ۬— لَهُمْ فِی الدُّنْیَا خِزْیٌ وَّلَهُمْ فِی الْاٰخِرَةِ عَذَابٌ عَظِیْمٌ ۟
114. அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அவனுடைய பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயற்சிப்பவனைவிட பெரிய அநியாயக்காரன் யார்? அஞ்சியவர்களாகவே தவிர அவற்றில் நுழைய அவர்களுக்கு உரிமையே இல்லை. (அவ்வாறிருக்க அதற்கு மாறாக நடக்கும்) அவர்களுக்கு இவ்வுலகில் இழிவுதான். மறுமையிலோ கொடிய வேதனை உண்டு.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَلِلّٰهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ ۗ— فَاَیْنَمَا تُوَلُّوْا فَثَمَّ وَجْهُ اللّٰهِ ؕ— اِنَّ اللّٰهَ وَاسِعٌ عَلِیْمٌ ۟
115. கிழக்கு திசையும் மேற்கு திசையும் அல்லாஹ்வுக்கே (உரியன). ஆதலால், நீங்கள் எத்திசையை நோக்கினும் அங்கு அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்; மிக அறிந்தவன்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَقَالُوا اتَّخَذَ اللّٰهُ وَلَدًا ۙ— سُبْحٰنَهٗ ؕ— بَلْ لَّهٗ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— كُلٌّ لَّهٗ قٰنِتُوْنَ ۟
116. ‘‘அல்லாஹ் (தனக்கு) சந்ததி ஏற்படுத்திக் கொண்டான்'' என்றும் கூறுகின்றனர். அவ்வாறல்ல; அவனோ மிக்க பரிசுத்தமானவன். வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனுக்குரியனவே! இவை அனைத்தும் அவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்றன(வே தவிர சந்ததியாக ஆகக்கூடிய தகுதியில் எந்த ஒன்றுமே இல்லை).
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
بَدِیْعُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— وَاِذَا قَضٰۤی اَمْرًا فَاِنَّمَا یَقُوْلُ لَهٗ كُنْ فَیَكُوْنُ ۟
117. அவனே வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றியே படைத்தவன். அவன் ஒரு காரியத்தை முடிவு செய்துவிட்டால் அதை ‘ஆகுக!' எனக் கூறிய மாத்திரத்தில் உடனே அது ஆகிவிடும்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَقَالَ الَّذِیْنَ لَا یَعْلَمُوْنَ لَوْلَا یُكَلِّمُنَا اللّٰهُ اَوْ تَاْتِیْنَاۤ اٰیَةٌ ؕ— كَذٰلِكَ قَالَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ مِّثْلَ قَوْلِهِمْ ؕ— تَشَابَهَتْ قُلُوْبُهُمْ ؕ— قَدْ بَیَّنَّا الْاٰیٰتِ لِقَوْمٍ یُّوْقِنُوْنَ ۟
118. மேலும், கல்வி (அறிவு) இல்லாதோர் ‘‘அல்லாஹ் நம்முடன் (நேரடியாகப்) பேச வேண்டாமா? அல்லது (எழுதப்பட்ட) ஒரு வசனம் (நேராக) நமக்கு வரவேண்டாமா?'' எனக் கேட்கின்றனர். இவர்கள் கேட்டது போன்றே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (மூஸாவிடம்) கேட்டார்கள். (அவர்களுடைய உள்ளங்களை) இவர்களுடைய உள்ளங்கள் ஒத்திருக்கிறேன். (உண்மையை) நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நம் அத்தாட்சிகளை நிச்சயமாக நாம் தெளிவாக்கி இருக்கிறோம்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
اِنَّاۤ اَرْسَلْنٰكَ بِالْحَقِّ بَشِیْرًا وَّنَذِیْرًا ۙ— وَّلَا تُسْـَٔلُ عَنْ اَصْحٰبِ الْجَحِیْمِ ۟
119. (நபியே! நன்மை செய்பவர்களுக்கு) இவ்வேதத்தின் மூலம் நீர் நற்செய்தி கூறுபவராகவும், (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் (மட்டுமே) நிச்சயமாக நாம் உம்மை அனுப்பி வைத்திருக்கிறோம். ஆகவே, (அவர்கள் உமது சொல்லை நிராகரித்து நரகம் சென்றால், அந்)நரகவாசிகளைப் பற்றி நீர் கேட்கப்படமாட்டீர்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
 
ಅರ್ಥಗಳ ಅನುವಾದ ಅಧ್ಯಾಯ: ಅಲ್- ಬಕರ
ಅಧ್ಯಾಯಗಳ ವಿಷಯಸೂಚಿ ಪುಟ ಸಂಖ್ಯೆ
 
ಪವಿತ್ರ ಕುರ್‌ಆನ್ ಅರ್ಥಾನುವಾದ - ತಮಿಳು ಅನುವಾದ - ಅಬ್ದುಲ್ ಹಮೀದ್ ಬಾಖವಿ - ಅನುವಾದಗಳ ವಿಷಯಸೂಚಿ

ಅನುವಾದ - ಶೈಖ್ ಅಬ್ದುಲ್ ಹಮೀದ್ ಬಾಖವಿ

ಮುಚ್ಚಿ