Check out the new design

ಪವಿತ್ರ ಕುರ್‌ಆನ್ ಅರ್ಥಾನುವಾದ - ತಮಿಳು ಅನುವಾದ - ಅಬ್ದುಲ್ ಹಮೀದ್ ಬಾಖವಿ * - ಅನುವಾದಗಳ ವಿಷಯಸೂಚಿ

XML CSV Excel API
Please review the Terms and Policies

ಅರ್ಥಗಳ ಅನುವಾದ ಅಧ್ಯಾಯ: ಅಲ್- ಬಕರ   ಶ್ಲೋಕ:
فَلَمَّا فَصَلَ طَالُوْتُ بِالْجُنُوْدِ ۙ— قَالَ اِنَّ اللّٰهَ مُبْتَلِیْكُمْ بِنَهَرٍ ۚ— فَمَنْ شَرِبَ مِنْهُ فَلَیْسَ مِنِّیْ ۚ— وَمَنْ لَّمْ یَطْعَمْهُ فَاِنَّهٗ مِنِّیْۤ اِلَّا مَنِ اغْتَرَفَ غُرْفَةً بِیَدِهٖ ۚ— فَشَرِبُوْا مِنْهُ اِلَّا قَلِیْلًا مِّنْهُمْ ؕ— فَلَمَّا جَاوَزَهٗ هُوَ وَالَّذِیْنَ اٰمَنُوْا مَعَهٗ ۙ— قَالُوْا لَا طَاقَةَ لَنَا الْیَوْمَ بِجَالُوْتَ وَجُنُوْدِهٖ ؕ— قَالَ الَّذِیْنَ یَظُنُّوْنَ اَنَّهُمْ مُّلٰقُوا اللّٰهِ ۙ— كَمْ مِّنْ فِئَةٍ قَلِیْلَةٍ غَلَبَتْ فِئَةً كَثِیْرَةً بِاِذْنِ اللّٰهِ ؕ— وَاللّٰهُ مَعَ الصّٰبِرِیْنَ ۟
249. பின்னர், தாலூத் படைகளைத் திரட்டிக்கொண்டு புறப்பட்டபொழுது அவர் (தன் இராணுவத்தை நோக்கி) ‘‘நிச்சயமாக (நீங்கள் செல்லும் வழியில்) அல்லாஹ் ஓர் ஆற்றைக் கொண்டு உங்களைச் சோதிப்பான். (உங்களில்) எவர் அதிலிருந்து தனது கைக்கொண்டு ஒரு உள்ளங்கை அளவு நீரைவிட அதிகமாகக் குடிக்கவில்லையோ அவர்தான் என்னைச் சார்ந்தவர். எவர் அதிலிருந்து (அதற்கதிகமாகக்) குடிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்ல'' எனக் கூறினார். ஆனால், (ஆற்றைக் கடக்கவே) அவர்களில் சிலரைத் தவிர (பெரும்பாலோர்) அதிலிருந்து (அதிகமாகக்) குடித்து விட்டார்கள். பின்னர், அவர் (தம்முடன் இருந்த) நம்பிக்கையாளர்களுடன் அதைக் கடந்து சென்ற பொழுது, (அதிகமாகக் குடித்த அவர்கள்) ஜாலூத்துடனும் அவனுடைய இராணுவத்துடனும் ‘‘இன்று (போர் புரிய) எங்களுக்குச் சக்தியில்லை'' என்று கூறி (விலகி) விட்டார்கள். (ஆனால், அவர்களில்) எவர்கள் நிச்சயமாக அல்லாஹ்வைச் சந்திப்போம் என உறுதி கொண்டிருந்தார்களோ அவர்கள் மற்றவர்களை நோக்கி ‘‘(எவ்வளவோ) பெரும் கூட்டத்தினரை எத்தனையோ சிறு கூட்டத்தினர் அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு வெற்றி பெற்று இருக்கிறார்கள், அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்'' என்று கூறினார்கள்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَلَمَّا بَرَزُوْا لِجَالُوْتَ وَجُنُوْدِهٖ قَالُوْا رَبَّنَاۤ اَفْرِغْ عَلَیْنَا صَبْرًا وَّثَبِّتْ اَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَی الْقَوْمِ الْكٰفِرِیْنَ ۟ؕ
250. மேலும், அவர்கள் ஜாலூத்தையும் அவனுடைய படைகளையும் (போர்க்களத்தில்) எதிர்த்தபொழுது ‘‘எங்கள் இறைவனே! நீ எங்கள் மீது பொறுமையைச் சொரிவாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்தி வைப்பாயாக! மேலும், நிராகரிக்கும் இந்த மக்கள் மீது (வெற்றி பெற) எங்களுக்கு நீ உதவி புரிவாயாக!'' என்றும் பிரார்த்தனை செய்தார்கள்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
فَهَزَمُوْهُمْ بِاِذْنِ اللّٰهِ ۙ۫— وَقَتَلَ دَاوٗدُ جَالُوْتَ وَاٰتٰىهُ اللّٰهُ الْمُلْكَ وَالْحِكْمَةَ وَعَلَّمَهٗ مِمَّا یَشَآءُ ؕ— وَلَوْلَا دَفْعُ اللّٰهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ لَّفَسَدَتِ الْاَرْضُ وَلٰكِنَّ اللّٰهَ ذُوْ فَضْلٍ عَلَی الْعٰلَمِیْنَ ۟
251. ஆதலால், அவர்கள் அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு அவர்களை முறியடித்து விட்டார்கள். இதில் (எதிரிகளின் அரசனாகிய) ஜாலூத்தை (தாலூத்துடைய படையிலிருந்த) தாவூத் வெட்டினார். பின்னர், அவருக்கு அல்லாஹ் ஞானத்தையும், அரசாங்கத்தையும் அளித்து (போர்க்கவசம் செய்வது போன்ற) தான் விரும்பியவற்றை எல்லாம் அவருக்குக் கற்பித்துக் கொடுத்தான். (இவ்வாறு) மனிதர்களில் (தீங்கு செய்யும்) சிலரை மனிதர்களில் (நல்லவர்கள்) சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காவிட்டால் இப்பூமி அழிந்தேயிருக்கும். ஆயினும் நிச்சயமாக அல்லாஹ் உலகத்தார் மீது கருணையுடையவன் ஆவான்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
تِلْكَ اٰیٰتُ اللّٰهِ نَتْلُوْهَا عَلَیْكَ بِالْحَقِّ ؕ— وَاِنَّكَ لَمِنَ الْمُرْسَلِیْنَ ۟
252. (நபியே!) இவை அல்லாஹ்வுடைய வசனங்களாகும். நாம் அவற்றை உமக்கு உண்மையில் ஓதிக்காண்பிக்கிறோம். தவிர, நிச்சயமாக நீர் (நம்மால்) அனுப்பப்பட்ட தூதர்களில் ஒருவர்தான்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
 
ಅರ್ಥಗಳ ಅನುವಾದ ಅಧ್ಯಾಯ: ಅಲ್- ಬಕರ
ಅಧ್ಯಾಯಗಳ ವಿಷಯಸೂಚಿ ಪುಟ ಸಂಖ್ಯೆ
 
ಪವಿತ್ರ ಕುರ್‌ಆನ್ ಅರ್ಥಾನುವಾದ - ತಮಿಳು ಅನುವಾದ - ಅಬ್ದುಲ್ ಹಮೀದ್ ಬಾಖವಿ - ಅನುವಾದಗಳ ವಿಷಯಸೂಚಿ

ಅನುವಾದ - ಶೈಖ್ ಅಬ್ದುಲ್ ಹಮೀದ್ ಬಾಖವಿ

ಮುಚ್ಚಿ