Check out the new design

ಪವಿತ್ರ ಕುರ್‌ಆನ್ ಅರ್ಥಾನುವಾದ - ತಮಿಳು ಅನುವಾದ - ಅಬ್ದುಲ್ ಹಮೀದ್ ಬಾಖವಿ * - ಅನುವಾದಗಳ ವಿಷಯಸೂಚಿ

XML CSV Excel API
Please review the Terms and Policies

ಅರ್ಥಗಳ ಅನುವಾದ ಅಧ್ಯಾಯ: ಅಲ್- ಬಕರ   ಶ್ಲೋಕ:
اَلَّذِیْنَ اٰتَیْنٰهُمُ الْكِتٰبَ یَعْرِفُوْنَهٗ كَمَا یَعْرِفُوْنَ اَبْنَآءَهُمْ ؕ— وَاِنَّ فَرِیْقًا مِّنْهُمْ لَیَكْتُمُوْنَ الْحَقَّ وَهُمْ یَعْلَمُوْنَ ۟ؔ
146. எவர்களுக்கு நாம் வேதம் கொடுத்திருக்கிறோமோ அவர்கள் தங்கள் பிள்ளை களை(ச் சந்தேகமற) அறிவதைப் போல் அ(ந்த மக்காவின் திசையளவில் நீங்கள் திரும்பித் தொழுவீர்கள் என்ப)தை அறிவார்கள். ஆனால், நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவினர் நன்கறிந்து கொண்டே (இந்த) உண்மையை மறைக்கின்றனர்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
اَلْحَقُّ مِنْ رَّبِّكَ فَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُمْتَرِیْنَ ۟۠
147. (நபியே! கிப்லாவைப் பற்றி) உமது இறைவனிடமிருந்து வந்த இதுதான் உண்மை(யான கட்டளை)யாகும். ஆதலால், நீர் சந்தேகிப்பவர்களில் ஒருவராக ஒரு சிறிதும் ஆகிவிட வேண்டாம்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَلِكُلٍّ وِّجْهَةٌ هُوَ مُوَلِّیْهَا فَاسْتَبِقُوْا الْخَیْرٰتِ ؔؕ— اَیْنَ مَا تَكُوْنُوْا یَاْتِ بِكُمُ اللّٰهُ جَمِیْعًا ؕ— اِنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
148. (நம்பிக்கையாளர்களே!) ஒவ்வொரு (கூட்டத்த)வருக்கும் ஒரு திசையுண்டு. அவ(ரவ)ர் அதன் பக்கம் முன்னோக்குவார். (திசை மட்டும் நோக்கமல்ல) நன்மையானவற்றை செய்வதில் நீங்கள் ஒருவரை ஒருவர் முந்திச் செல்லுங்கள். நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَمِنْ حَیْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ ؕ— وَاِنَّهٗ لَلْحَقُّ مِنْ رَّبِّكَ ؕ— وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ۟
149. ஆகவே, (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழும்போது மக்காவிலுள்ள) ‘மஸ்ஜிதுல் ஹராமின்' பக்கமே உமது முகத்தைத் திருப்புவீராக. நிச்சயமாக இதுதான் உமது இறைவனுடைய உண்மை(யான கட்டளை)யாகும். (ஆகவே, இதைப் பற்றி வீண் தர்க்கம் செய்பவர்களே!) நீங்கள் செய்வதைப்பற்றி அல்லாஹ் பராமுகமாயில்லை.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَمِنْ حَیْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ ؕ— وَحَیْثُ مَا كُنْتُمْ فَوَلُّوْا وُجُوْهَكُمْ شَطْرَهٗ ۙ— لِئَلَّا یَكُوْنَ لِلنَّاسِ عَلَیْكُمْ حُجَّةٌ ۗ— اِلَّا الَّذِیْنَ ظَلَمُوْا مِنْهُمْ ۗ— فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِیْ ۗ— وَلِاُتِمَّ نِعْمَتِیْ عَلَیْكُمْ وَلَعَلَّكُمْ تَهْتَدُوْنَ ۟ۙۛ
150. (நபியே!) நீர் எங்கு சென்றாலும் (தொழும்போது) ‘மஸ்ஜிதுல் ஹராமின்' பக்கமே உமது முகத்தைத் திருப்புவீராக. (நம்பிக்கையாளர்களே!) அவர்களில் வரம்பு மீறியவர்களைத் தவிர மற்ற மனிதர்கள் உங்களுடன் (வீண்) விவாதம் செய்ய எந்த ஆதாரமும் இருக்கக்கூடாது என்பதற்காக நீங்களும் எங்கிருந்தபோதிலும் ‘மஸ்ஜிதுல் ஹராமின்' பக்கமே உங்கள் முகங்களைத் திருப்புங்கள். ஆகவே, அவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம். எனக்கே நீங்கள் பயப்படுங்கள். (கிப்லாவைப் பற்றிய இக்கட்டளையின் மூலம்) என் அருட்கொடையை நான் உங்கள் மீது முழுமையாக்கி வைப்பேன். (அதனால்) நிச்சயமாக நீங்கள் நேரான வழியை அடைவீர்கள்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
كَمَاۤ اَرْسَلْنَا فِیْكُمْ رَسُوْلًا مِّنْكُمْ یَتْلُوْا عَلَیْكُمْ اٰیٰتِنَا وَیُزَكِّیْكُمْ وَیُعَلِّمُكُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَیُعَلِّمُكُمْ مَّا لَمْ تَكُوْنُوْا تَعْلَمُوْنَ ۟ؕۛ
151. அவ்வான்ற, உங்களுக்கு நம் வசனங்களை ஓதிக் காண்பித்து உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கவும், உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பித்து, நீங்கள் அறியாதவற்றையும் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கக்கூடிய ஒரு தூதரை உங்களிலிருந்தே நாம் அனுப்பிவைத்தோம்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
فَاذْكُرُوْنِیْۤ اَذْكُرْكُمْ وَاشْكُرُوْا لِیْ وَلَا تَكْفُرُوْنِ ۟۠
152. ஆகவே, நீங்கள் என்னை நினைத்துக் கொண்டேயிருங்கள். நானும் உங்களை நினைத்து (அருள் புரிந்து) வருவேன். நீங்கள் எனக்கு நன்றி செலுத்தி வாருங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اسْتَعِیْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ ؕ— اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِیْنَ ۟
153. நம்பிக்கையாளர்களே! (நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவதற்காக) பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
 
ಅರ್ಥಗಳ ಅನುವಾದ ಅಧ್ಯಾಯ: ಅಲ್- ಬಕರ
ಅಧ್ಯಾಯಗಳ ವಿಷಯಸೂಚಿ ಪುಟ ಸಂಖ್ಯೆ
 
ಪವಿತ್ರ ಕುರ್‌ಆನ್ ಅರ್ಥಾನುವಾದ - ತಮಿಳು ಅನುವಾದ - ಅಬ್ದುಲ್ ಹಮೀದ್ ಬಾಖವಿ - ಅನುವಾದಗಳ ವಿಷಯಸೂಚಿ

ಅನುವಾದ - ಶೈಖ್ ಅಬ್ದುಲ್ ಹಮೀದ್ ಬಾಖವಿ

ಮುಚ್ಚಿ