വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

പേജ് നമ്പർ:close

external-link copy
187 : 2

اُحِلَّ لَكُمْ لَیْلَةَ الصِّیَامِ الرَّفَثُ اِلٰی نِسَآىِٕكُمْ ؕ— هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَاَنْتُمْ لِبَاسٌ لَّهُنَّ ؕ— عَلِمَ اللّٰهُ اَنَّكُمْ كُنْتُمْ تَخْتَانُوْنَ اَنْفُسَكُمْ فَتَابَ عَلَیْكُمْ وَعَفَا عَنْكُمْ ۚ— فَالْـٰٔنَ بَاشِرُوْهُنَّ وَابْتَغُوْا مَا كَتَبَ اللّٰهُ لَكُمْ ۪— وَكُلُوْا وَاشْرَبُوْا حَتّٰی یَتَبَیَّنَ لَكُمُ الْخَیْطُ الْاَبْیَضُ مِنَ الْخَیْطِ الْاَسْوَدِ مِنَ الْفَجْرِ ۪— ثُمَّ اَتِمُّوا الصِّیَامَ اِلَی الَّیْلِ ۚ— وَلَا تُبَاشِرُوْهُنَّ وَاَنْتُمْ عٰكِفُوْنَ فِی الْمَسٰجِدِ ؕ— تِلْكَ حُدُوْدُ اللّٰهِ فَلَا تَقْرَبُوْهَا ؕ— كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ اٰیٰتِهٖ لِلنَّاسِ لَعَلَّهُمْ یَتَّقُوْنَ ۟

நோன்புடைய இரவில் நீங்கள் உங்கள் மனைவிகளுடன் சேர்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடை ஆவர். நீங்கள் அவர்களுக்கு ஆடை ஆவீர்கள். நிச்சயமாக நீங்கள் உங்களை ஏமாற்றுகிறீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான். ஆகவே, உங்கள் பிழை பொறுப்பை ஏற்று உங்களை மன்னித்தான். ஆகவே, இப்போது நீங்கள் அதிகாலையில் கருப்பு நூலிலிருந்து வெள்ளை நூல் உங்களுக்குத் தெளிவாகும் வரை அவர்களுடன் சேருங்கள்; அல்லாஹ் உங்களுக்கு விதித்திருப்பதைத் தேடுங்கள்; உண்ணுங்கள்; பருகுங்கள். பிறகு, இரவு வரை நோன்பை முழுமையாக்குங்கள். நீங்கள் மஸ்ஜிதுகளில் (இஃதிகாஃப்) தங்கி இருக்கும்போது அவர்களுடன் (மனைவிகளுடன்) சேராதீர்கள். இவை அல்லாஹ்வுடைய (தடை) சட்டங்களாகும். எனவே, அவற்றை நெருங்காதீர்கள். அல்லாஹ் மனிதர்களுக்குத் தன் வசனங்களை இவ்வாறு தெளிவுபடுத்துகிறான், அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக. info
التفاسير:

external-link copy
188 : 2

وَلَا تَاْكُلُوْۤا اَمْوَالَكُمْ بَیْنَكُمْ بِالْبَاطِلِ وَتُدْلُوْا بِهَاۤ اِلَی الْحُكَّامِ لِتَاْكُلُوْا فَرِیْقًا مِّنْ اَمْوَالِ النَّاسِ بِالْاِثْمِ وَاَنْتُمْ تَعْلَمُوْنَ ۟۠

உங்களுக்கு மத்தியில் உங்கள் செல்வங்களைத் தவறாக உண்ணாதீர்கள் (அனுபவிக்காதீர்கள்). நீங்கள் (பாவம் என்று) அறிந்திருந்தும் மக்களுடைய செல்வங்களில் ஒரு பகுதியைப் பாவமாக நீங்கள் உண்பதற்காக அவற்றை அதிகாரிகளிடம் (லஞ்சமாக) கொடுக்காதீர்கள். info
التفاسير:

external-link copy
189 : 2

یَسْـَٔلُوْنَكَ عَنِ الْاَهِلَّةِ ؕ— قُلْ هِیَ مَوَاقِیْتُ لِلنَّاسِ وَالْحَجِّ ؕ— وَلَیْسَ الْبِرُّ بِاَنْ تَاْتُوا الْبُیُوْتَ مِنْ ظُهُوْرِهَا وَلٰكِنَّ الْبِرَّ مَنِ اتَّقٰی ۚ— وَاْتُوا الْبُیُوْتَ مِنْ اَبْوَابِهَا ۪— وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟

பிறைகளைப் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். கூறுவீராக: "அவை மக்களுக்கும் ஹஜ்ஜுக்கும் காலங்களை அறிவிக்கக்கூடியவை." நீங்கள் வீடுகளுக்கு அவற்றின் பின்வழிகளில் இருந்து வருவது நன்மை இல்லை. எனினும், நன்மை அல்லாஹ்வுக்கு அஞ்சியவர்(களில்)தான் இருக்கிறது. நீங்கள் வீடுகளுக்கு அவற்றின் தலைவாசல்களில் இருந்து வாருங்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள், நீங்கள் வெற்றியடைவதற்காக. info
التفاسير:

external-link copy
190 : 2

وَقَاتِلُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ الَّذِیْنَ یُقَاتِلُوْنَكُمْ وَلَا تَعْتَدُوْا ؕ— اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الْمُعْتَدِیْنَ ۟

உங்களிடம் போர் புரிவோரிடம் அல்லாஹ்வுடைய பாதையில் நீங்களும் போர் புரியுங்கள். வரம்பு மீறாதீர்கள் நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை. info
التفاسير: