വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

പേജ് നമ്പർ:close

external-link copy
234 : 2

وَالَّذِیْنَ یُتَوَفَّوْنَ مِنْكُمْ وَیَذَرُوْنَ اَزْوَاجًا یَّتَرَبَّصْنَ بِاَنْفُسِهِنَّ اَرْبَعَةَ اَشْهُرٍ وَّعَشْرًا ۚ— فَاِذَا بَلَغْنَ اَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَیْكُمْ فِیْمَا فَعَلْنَ فِیْۤ اَنْفُسِهِنَّ بِالْمَعْرُوْفِ ؕ— وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرٌ ۟

உங்களில் மனைவிகளை விட்டு விட்டு இறப்பவர்கள் அவர்(களின் மனைவி)கள் நான்கு மாதங்கள், பத்து (நாள்கள்) தங்களுக்கு (இத்தா) எதிர்பார்ப்பார்கள். அவர்கள் தங்கள் தவணையை அடைந்து விட்டால் நல்ல முறையில் அவர்கள் தங்களுக்கு (எதையும்) செய்வதில் உங்கள் மீது குற்றமே இல்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் ஆழ்ந்தறிபவன் ஆவான். info
التفاسير:

external-link copy
235 : 2

وَلَا جُنَاحَ عَلَیْكُمْ فِیْمَا عَرَّضْتُمْ بِهٖ مِنْ خِطْبَةِ النِّسَآءِ اَوْ اَكْنَنْتُمْ فِیْۤ اَنْفُسِكُمْ ؕ— عَلِمَ اللّٰهُ اَنَّكُمْ سَتَذْكُرُوْنَهُنَّ وَلٰكِنْ لَّا تُوَاعِدُوْهُنَّ سِرًّا اِلَّاۤ اَنْ تَقُوْلُوْا قَوْلًا مَّعْرُوْفًا ؕ۬— وَلَا تَعْزِمُوْا عُقْدَةَ النِّكَاحِ حَتّٰی یَبْلُغَ الْكِتٰبُ اَجَلَهٗ ؕ— وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ یَعْلَمُ مَا فِیْۤ اَنْفُسِكُمْ فَاحْذَرُوْهُ ۚ— وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ غَفُوْرٌ حَلِیْمٌ ۟۠

அப்பெண்களை திருமணம் பேசுவதற்காக நீங்கள் சூசகமாக எடுத்துக் கூறியதில் அல்லது உங்கள் உள்ளங்களில் மறைத்(து வைத்)ததில் உங்கள் மீது குற்றமே இல்லை. நிச்சயமாக நீங்கள் அவர்களை நினைப்பீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான். நல்ல கூற்றைக் கூறுவதைத் தவிர (இத்தாவுடைய காலத்தில்) அவர்களுக்கு இரகசியமாக வாக்குறுதி அளிக்காதீர்கள். விதிக்கப்பட்ட சட்டம் அதன் தவணையை அடையும் வரை திருமண ஒப்பந்தத்தை உறுதி செய்யாதீர்கள். உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை நிச்சயமாக அல்லாஹ் அறிவான் என்பதை அறியுங்கள். எனவே, அவனைப் பயப்படுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் சகிப்பாளன் என்பதையும் அறியுங்கள். info
التفاسير:

external-link copy
236 : 2

لَا جُنَاحَ عَلَیْكُمْ اِنْ طَلَّقْتُمُ النِّسَآءَ مَا لَمْ تَمَسُّوْهُنَّ اَوْ تَفْرِضُوْا لَهُنَّ فَرِیْضَةً ۖۚ— وَّمَتِّعُوْهُنَّ ۚ— عَلَی الْمُوْسِعِ قَدَرُهٗ وَعَلَی الْمُقْتِرِ قَدَرُهٗ ۚ— مَتَاعًا بِالْمَعْرُوْفِ ۚ— حَقًّا عَلَی الْمُحْسِنِیْنَ ۟

பெண்களை நீங்கள் விவாகரத்து செய்தால் - அவர்களை நீங்கள் தொடாமல் இருக்கும்போது அல்லது அவர்களுக்கு மஹ்ரை நிர்ணயிக்காமல் இருக்கும்போது - (அது) உங்கள் மீது குற்றமே இல்லை. அவர்களுக்கு நல்ல முறையில் பொருள் கொடுங்கள். செல்வந்தர் மீது அவருடைய அளவு(க்கு)ம் ஏழை மீது அவருடைய அளவு(க்கு)ம் கடமையாகும். நல்லறம் புரிவோர் மீது (இது) கடமையாகும். info
التفاسير:

external-link copy
237 : 2

وَاِنْ طَلَّقْتُمُوْهُنَّ مِنْ قَبْلِ اَنْ تَمَسُّوْهُنَّ وَقَدْ فَرَضْتُمْ لَهُنَّ فَرِیْضَةً فَنِصْفُ مَا فَرَضْتُمْ اِلَّاۤ اَنْ یَّعْفُوْنَ اَوْ یَعْفُوَا الَّذِیْ بِیَدِهٖ عُقْدَةُ النِّكَاحِ ؕ— وَاَنْ تَعْفُوْۤا اَقْرَبُ لِلتَّقْوٰی ؕ— وَلَا تَنْسَوُا الْفَضْلَ بَیْنَكُمْ ؕ— اِنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟

அவர்களுக்கு மஹ்ரை நீங்கள் நிர்ணயித்து விட்டிருக்க, அவர்களைத் தொடுவதற்கு முன்னதாகவே அவர்களை நீங்கள் விவாகரத்து செய்தால் நீங்கள் நிர்ணயித்ததில் பாதி (அப்பெண்களுக்கு கொடுக்க வேண்டும்). அவர்கள் (மனைவிகள்) மன்னித்தால் அல்லது எவனுடைய கையில் திருமண ஒப்பந்தம் இருக்கிறதோ அவன் (கணவன்) மன்னித்தால் தவிர. (கணவன் முழு மஹ்ரையும் கொடுக்கலாம் அல்லது மனைவி பாதி மஹ்ரையும் வாங்காமல் விடலாம்.) ஆயினும், நீங்கள் (ஆண்கள்) மன்னிப்பது அல்லாஹ்வை அஞ்சுவதற்கு மிக நெருக்கமானதாகும். உங்களுக்கு மத்தியில் உபகாரம் செய்வதை மறக்காதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்குபவன். info
التفاسير: