വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

പേജ് നമ്പർ:close

external-link copy
25 : 2

وَبَشِّرِ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ اَنَّ لَهُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ؕ— كُلَّمَا رُزِقُوْا مِنْهَا مِنْ ثَمَرَةٍ رِّزْقًا ۙ— قَالُوْا هٰذَا الَّذِیْ رُزِقْنَا مِنْ قَبْلُ وَاُتُوْا بِهٖ مُتَشَابِهًا ؕ— وَلَهُمْ فِیْهَاۤ اَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَّهُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟

நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்தவர்களுக்கு நிச்சயமாக சொர்க்கங்கள் உண்டு என்று நற்செய்தி கூறுவீராக. அவற்றின் கீழிருந்து ஆறுகள் ஓடும். அவற்றிலிருந்து (ஏதேனும்) ஒரு கனியின் உணவு அவர்களுக்கு வழங்கப்படும் போதெல்லாம் "இது முன்னர் நமக்கு வழங்கப்பட்டதுதான்" எனக் கூறுவார்கள். (பார்வைக்கு) ஒரே விதமாகத் தோன்றக்கூடியதாகவே அவர்களிடம் அதைக் கொண்டு வரப்படும். தூய்மையான மனைவிகளும் அவற்றில் அவர்களுக்கு உண்டு. அவர்கள் அவற்றில் நிரந்தரமானவர்கள். info
التفاسير:

external-link copy
26 : 2

اِنَّ اللّٰهَ لَا یَسْتَحْیٖۤ اَنْ یَّضْرِبَ مَثَلًا مَّا بَعُوْضَةً فَمَا فَوْقَهَا ؕ— فَاَمَّا الَّذِیْنَ اٰمَنُوْا فَیَعْلَمُوْنَ اَنَّهُ الْحَقُّ مِنْ رَّبِّهِمْ ۚ— وَاَمَّا الَّذِیْنَ كَفَرُوْا فَیَقُوْلُوْنَ مَاذَاۤ اَرَادَ اللّٰهُ بِهٰذَا مَثَلًا ۘ— یُضِلُّ بِهٖ كَثِیْرًا وَّیَهْدِیْ بِهٖ كَثِیْرًا ؕ— وَمَا یُضِلُّ بِهٖۤ اِلَّا الْفٰسِقِیْنَ ۟ۙ

கொசு இன்னும் (அற்பத்தில்) அதற்கு மேலுள்ளதையும் கூட உதாரணமாக கூறுவதற்கு நிச்சயமாக அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். ஆகவே, நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக அது தங்கள் இறைவனிடமிருந்து (கூறப்பட்ட) உண்மைதான் என அறிவார்கள். ஆகவே, நிராகரிப்பாளர்கள் அல்லாஹ் இதன் மூலம் என்ன உதாரணத்தை நாடினான்? எனக் கூறுவார்கள். இதன் மூலம் அதிகமானோரை வழிகெடுக்கிறான். இன்னும் இதன் மூலம் அதிகமானோரை நேர்வழி நடத்துகிறான். பாவிகளைத் தவிர (மற்றவர்களை) இதன் மூலம் வழிகெடுக்க மாட்டான். info
التفاسير:

external-link copy
27 : 2

الَّذِیْنَ یَنْقُضُوْنَ عَهْدَ اللّٰهِ مِنْ بَعْدِ مِیْثَاقِهٖ ۪— وَیَقْطَعُوْنَ مَاۤ اَمَرَ اللّٰهُ بِهٖۤ اَنْ یُّوْصَلَ وَیُفْسِدُوْنَ فِی الْاَرْضِ ؕ— اُولٰٓىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ۟

(அந்தப் பாவிகள்) அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை அது உறுதியாகிவிட்ட பின்னர் முறிக்கின்றனர். இன்னும், எது சேர்க்கப்பட வேண்டும் என்று அல்லாஹ் ஏவினானோ அதை (-உறவுகளை)த் துண்டிக்கின்றனர். பூமியில் விஷமம் செய்கின்றனர். அவர்கள்தான் நஷ்டவாளிகள்! info
التفاسير:

external-link copy
28 : 2

كَیْفَ تَكْفُرُوْنَ بِاللّٰهِ وَكُنْتُمْ اَمْوَاتًا فَاَحْیَاكُمْ ۚ— ثُمَّ یُمِیْتُكُمْ ثُمَّ یُحْیِیْكُمْ ثُمَّ اِلَیْهِ تُرْجَعُوْنَ ۟

(நீங்கள்) அல்லாஹ்வை எப்படி நிராகரிக்கிறீர்கள்? இறந்தவர்களாக இருந்தீர்களே! அவன் உங்களை உயிர்ப்பித்தான். பிறகு, உங்களை மரணிக்கச் செய்கிறான். பிறகு உங்களை உயிர்ப்பிப்பான். பிறகு, அவனிடமே திருப்பப்படுவீர்கள். info
التفاسير:

external-link copy
29 : 2

هُوَ الَّذِیْ خَلَقَ لَكُمْ مَّا فِی الْاَرْضِ جَمِیْعًا ۗ— ثُمَّ اسْتَوٰۤی اِلَی السَّمَآءِ فَسَوّٰىهُنَّ سَبْعَ سَمٰوٰتٍ ؕ— وَهُوَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟۠

அவன் பூமியிலுள்ளவற்றை உங்களுக்காகப் படைத்தான். பிறகு, வானத்தின் மேல் (தனது கண்ணியத்திற்குத் தக்கவாறு) உயர்ந்தான். அவற்றை ஏழு வானங்களாக அமைத்தான். அவன் எல்லாப் பொருளையும் நன்கறிந்தவன். info
التفاسير: