വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

പേജ് നമ്പർ:close

external-link copy
231 : 2

وَاِذَا طَلَّقْتُمُ النِّسَآءَ فَبَلَغْنَ اَجَلَهُنَّ فَاَمْسِكُوْهُنَّ بِمَعْرُوْفٍ اَوْ سَرِّحُوْهُنَّ بِمَعْرُوْفٍ ۪— وَلَا تُمْسِكُوْهُنَّ ضِرَارًا لِّتَعْتَدُوْا ۚ— وَمَنْ یَّفْعَلْ ذٰلِكَ فَقَدْ ظَلَمَ نَفْسَهٗ ؕ— وَلَا تَتَّخِذُوْۤا اٰیٰتِ اللّٰهِ هُزُوًا ؗ— وَّاذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَیْكُمْ وَمَاۤ اَنْزَلَ عَلَیْكُمْ مِّنَ الْكِتٰبِ وَالْحِكْمَةِ یَعِظُكُمْ بِهٖ ؕ— وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟۠

நீங்கள் பெண்களை விவாகரத்து செய்து, அவர்கள் தங்கள் தவணையை அடைந்தால் நல்ல முறையில் அவர்களைத் தடுத்துக் கொள்ளுங்கள். அல்லது நல்ல முறையில் விட்டுவிடுங்கள். நீங்கள் தீங்கிழைத்து (அவர்கள் மீது) அநியாயம் செய்வதற்காக அவர்களைத் தடுக்காதீர்கள். எவர் அதைச் செய்வாரோ திட்டமாக அவர் தனக்கே தீங்கிழைத்தார். அல்லாஹ்வின் வசனங்களை கேலியாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளையும் வேதத்திலிருந்தும் ஞானத்திலிருந்தும் உங்கள் மீது அவன் இறக்கியதையும் நினைவுகூருங்கள். அவன் இதன் மூலம் உங்களுக்கு உபதேசிக்கிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் என்பதை அறியுங்கள். info
التفاسير:

external-link copy
232 : 2

وَاِذَا طَلَّقْتُمُ النِّسَآءَ فَبَلَغْنَ اَجَلَهُنَّ فَلَا تَعْضُلُوْهُنَّ اَنْ یَّنْكِحْنَ اَزْوَاجَهُنَّ اِذَا تَرَاضَوْا بَیْنَهُمْ بِالْمَعْرُوْفِ ؕ— ذٰلِكَ یُوْعَظُ بِهٖ مَنْ كَانَ مِنْكُمْ یُؤْمِنُ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ ؕ— ذٰلِكُمْ اَزْكٰی لَكُمْ وَاَطْهَرُ ؕ— وَاللّٰهُ یَعْلَمُ وَاَنْتُمْ لَا تَعْلَمُوْنَ ۟

நீங்கள் பெண்களை விவாகரத்து செய்து, அவர்கள் தங்கள் தவணையை (முழுமையாக) அடைந்தால் அவர்கள் தங்கள் கணவர்களை மணப்பதை தடுக்காதீர்கள், அவர்கள் தங்களுக்கு மத்தியில் (ஒருவருக்கொருவர்) திருப்தியடைந்தால். உங்களில் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டிருப்பவர் இதன் மூலம் உபதேசிக்கப்படுகிறார். இதுதான் உங்களுக்கு மிகத் தூய்மையானது; மிகப் பரிசுத்தமானது. அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள். info
التفاسير:

external-link copy
233 : 2

وَالْوَالِدٰتُ یُرْضِعْنَ اَوْلَادَهُنَّ حَوْلَیْنِ كَامِلَیْنِ لِمَنْ اَرَادَ اَنْ یُّتِمَّ الرَّضَاعَةَ ؕ— وَعَلَی الْمَوْلُوْدِ لَهٗ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوْفِ ؕ— لَا تُكَلَّفُ نَفْسٌ اِلَّا وُسْعَهَا ۚ— لَا تُضَآرَّ وَالِدَةٌ بِوَلَدِهَا وَلَا مَوْلُوْدٌ لَّهٗ بِوَلَدِهٖ ۗ— وَعَلَی الْوَارِثِ مِثْلُ ذٰلِكَ ۚ— فَاِنْ اَرَادَا فِصَالًا عَنْ تَرَاضٍ مِّنْهُمَا وَتَشَاوُرٍ فَلَا جُنَاحَ عَلَیْهِمَا ؕ— وَاِنْ اَرَدْتُّمْ اَنْ تَسْتَرْضِعُوْۤا اَوْلَادَكُمْ فَلَا جُنَاحَ عَلَیْكُمْ اِذَا سَلَّمْتُمْ مَّاۤ اٰتَیْتُمْ بِالْمَعْرُوْفِ ؕ— وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟

எவர் (எந்த தந்தை) பாலூட்டுவதை முழுமைப்படுத்த விரும்புகிறாரோ அவருக்காக, தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முழுமையான ஈராண்டுகள் பாலூட்டுவார்கள். நல்ல முறையில் அவர்களுக்கு உணவளிப்பதும் ஆடை கொடுப்பதும் எவருக்காக குழந்தை பெற்றெடுக்கப்பட்டதோ அவர் (தந்தை) மீது கடமையாகும். ஓர் ஆத்மா அதன் வசதிக்கு மேல் நிர்பந்திக்கப்படாது. ஒரு தாய் தன் குழந்தைகளுக்காக துன்புறுத்தப்பட மாட்டாள். இன்னும் தந்தையும் தன் குழந்தைக்காக (துன்புறுத்தப்பட மாட்டார்). அது போன்றே வாரிசு தாரர் மீதும் (கடமையாகும்).அவ்விருவரும் தங்கள் பரஸ்பர திருப்தியுடனும் பரஸ்பர ஆலோசனையுடனும் பால்குடியை நிறுத்த நாடினால் அவ்விருவர் மீது(ம்) குற்றமே இல்லை. நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு (பிற பெண் மூலம்) பாலூட்டுவதை விரும்பினால் நீங்கள் கொடுப்பதை நல்ல முறையில் ஒப்படைத்தால் (அது) உங்கள் மீது குற்றமில்லை. அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் என்பதையும் அறியுங்கள். info
التفاسير: