Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Page Number:close

external-link copy
211 : 2

سَلْ بَنِیْۤ اِسْرَآءِیْلَ كَمْ اٰتَیْنٰهُمْ مِّنْ اٰیَةٍ بَیِّنَةٍ ؕ— وَمَنْ یُّبَدِّلْ نِعْمَةَ اللّٰهِ مِنْ بَعْدِ مَا جَآءَتْهُ فَاِنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ ۟

எத்தனை தெளிவான அத்தாட்சியை அவர்களுக்குக் கொடுத்தோம் என இஸ்ராயீலின் சந்ததிகளைக் கேட்பீராக! எவர் அல்லாஹ்வின் அருட்கொடையை அது தம்மிடம் வந்த பின்னர் மாற்றுவாரோ, நிச்சயமாக அல்லாஹ் (அவரைத்) தண்டிப்பதில் மிகக் கடுமையானவன். info
التفاسير:

external-link copy
212 : 2

زُیِّنَ لِلَّذِیْنَ كَفَرُوا الْحَیٰوةُ الدُّنْیَا وَیَسْخَرُوْنَ مِنَ الَّذِیْنَ اٰمَنُوْا ۘ— وَالَّذِیْنَ اتَّقَوْا فَوْقَهُمْ یَوْمَ الْقِیٰمَةِ ؕ— وَاللّٰهُ یَرْزُقُ مَنْ یَّشَآءُ بِغَیْرِ حِسَابٍ ۟

நிராகரிப்பவர்களுக்கு உலக வாழ்க்கை அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நம்பிக்கையாளர்களைப் பரிகசிக்கிறார்கள். அல்லாஹ்வை அஞ்சியவர்கள் மறுமை நாளில் அவர்களுக்கு மேல் இருப்பார்கள். அல்லாஹ், தான் நாடுகிறவர்களுக்கு கணக்கின்றி வழங்குவான். info
التفاسير:

external-link copy
213 : 2

كَانَ النَّاسُ اُمَّةً وَّاحِدَةً ۫— فَبَعَثَ اللّٰهُ النَّبِیّٖنَ مُبَشِّرِیْنَ وَمُنْذِرِیْنَ ۪— وَاَنْزَلَ مَعَهُمُ الْكِتٰبَ بِالْحَقِّ لِیَحْكُمَ بَیْنَ النَّاسِ فِیْمَا اخْتَلَفُوْا فِیْهِ ؕ— وَمَا اخْتَلَفَ فِیْهِ اِلَّا الَّذِیْنَ اُوْتُوْهُ مِنْ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَیِّنٰتُ بَغْیًا بَیْنَهُمْ ۚ— فَهَدَی اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا لِمَا اخْتَلَفُوْا فِیْهِ مِنَ الْحَقِّ بِاِذْنِهٖ ؕ— وَاللّٰهُ یَهْدِیْ مَنْ یَّشَآءُ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟

மக்கள் ஒரேஒரு சமுதாயமாக இருந்தனர். அல்லாஹ் நபிமார்களை நற்செய்தியாளர்களாகவும் (அச்சமூட்டி) எச்சரிப்பவர்களாகவும் அனுப்பினான். மக்கள் மத்தியில் அவர்கள் கருத்து வேறுபட்டவற்றில் (வேதம்) தீர்ப்பளிப்பதற்காக அவர்களுடன் உண்மையான வேதத்தையும் இறக்கினான். தெளிவான சான்றுகள் தங்களுக்கு வந்த பின்னர் தங்களுக்கு மத்தியில் பொறாமையின் காரணமாக, அதை (வேதம்) கொடுக்கப்பட்டவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதில் கருத்து வேறுபடவில்லை. ஆகவே, அவர்கள் உண்மையிலிருந்து எதில் கருத்து வேறுபட்டார்களோ அதற்கு அல்லாஹ் தனது கட்டளையினால் நம்பிக்கையாளர்களை நேர்வழிப்படுத்தினான். அல்லாஹ், தான் நாடியவருக்கு நேரான பாதையின் பக்கம் நேர்வழி காட்டுகிறான். info
التفاسير:

external-link copy
214 : 2

اَمْ حَسِبْتُمْ اَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا یَاْتِكُمْ مَّثَلُ الَّذِیْنَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ ؕ— مَسَّتْهُمُ الْبَاْسَآءُ وَالضَّرَّآءُ وَزُلْزِلُوْا حَتّٰی یَقُوْلَ الرَّسُوْلُ وَالَّذِیْنَ اٰمَنُوْا مَعَهٗ مَتٰی نَصْرُ اللّٰهِ ؕ— اَلَاۤ اِنَّ نَصْرَ اللّٰهِ قَرِیْبٌ ۟

உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு (வந்தது) போன்று உங்களுக்கு வராத நிலையில் நீங்கள் சொர்க்கத்தில் நுழையலாமென்று நினைத்துக் கொண்டீர்களா? அவர்களை கொடிய வறுமையும் நோயும் பீடித்தன. "அல்லாஹ்வுடைய உதவி எப்போது...?" என்று தூதரும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் கூறும் வரை அவர்கள் (எதிரிகளால்) அச்சுறுத்தப்பட்டார்கள். அறிந்து கொள்ளுங்கள்: "நிச்சயமாக அல்லாஹ்வுடைய உதவி சமீபமானதாகும்." info
التفاسير:

external-link copy
215 : 2

یَسْـَٔلُوْنَكَ مَاذَا یُنْفِقُوْنَ ؕ— قُلْ مَاۤ اَنْفَقْتُمْ مِّنْ خَیْرٍ فَلِلْوَالِدَیْنِ وَالْاَقْرَبِیْنَ وَالْیَتٰمٰی وَالْمَسٰكِیْنِ وَابْنِ السَّبِیْلِ ؕ— وَمَا تَفْعَلُوْا مِنْ خَیْرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِیْمٌ ۟

அவர்கள் "எதைத் தர்மம் புரியவேண்டும்?" என்று உம்மிடம் கேட்கிறார்கள். கூறுவீராக: "செல்வத்திலிருந்து நீங்கள் எதைத் தர்மம் செய்தாலும் (அது) பெற்றோர், உறவினர்கள், அநாதைகள், ஏழைகள், வழிப்போக்கர்களுக்கு (செய்யவேண்டும்). நன்மையிலிருந்து நீங்கள் எதைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை மிக அறிபவன் ஆவான்." info
التفاسير: