Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Page Number:close

external-link copy
38 : 2

قُلْنَا اهْبِطُوْا مِنْهَا جَمِیْعًا ۚ— فَاِمَّا یَاْتِیَنَّكُمْ مِّنِّیْ هُدًی فَمَنْ تَبِعَ هُدَایَ فَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟

நாம் கூறினோம்: "நீங்கள் அனைவரும் அதிலிருந்து இறங்குங்கள். என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி நிச்சயமாக வந்தால். ஆக, எவர்கள் என் நேர்வழியைப் பின்பற்றினார்களோ அவர்கள் மீது அச்சமில்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
39 : 2

وَالَّذِیْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰیٰتِنَاۤ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ— هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟۠

எவர்கள் நிராகரித்து, நம் வசனங்களைப் பொய்ப்பித்தார்களோ அவர்கள் நரகவாசிகள்! அவர்கள் அதில் நிரந்தரமானவர்கள். info
التفاسير:

external-link copy
40 : 2

یٰبَنِیْۤ اِسْرَآءِیْلَ اذْكُرُوْا نِعْمَتِیَ الَّتِیْۤ اَنْعَمْتُ عَلَیْكُمْ وَاَوْفُوْا بِعَهْدِیْۤ اُوْفِ بِعَهْدِكُمْ ۚ— وَاِیَّایَ فَارْهَبُوْنِ ۟

இஸ்ராயீலின் சந்ததிகளே! உங்கள் மீது நான் அருள் புரிந்த என் அருளை நினைவு கூருங்கள்; என் வாக்கை நிறைவேற்றுங்கள்; நான் உங்கள் வாக்கை நிறைவேற்றுவேன். என்னையே பயப்படுங்கள். info
التفاسير:

external-link copy
41 : 2

وَاٰمِنُوْا بِمَاۤ اَنْزَلْتُ مُصَدِّقًا لِّمَا مَعَكُمْ وَلَا تَكُوْنُوْۤا اَوَّلَ كَافِرٍ بِهٖ ۪— وَلَا تَشْتَرُوْا بِاٰیٰتِیْ ثَمَنًا قَلِیْلًا ؗ— وَّاِیَّایَ فَاتَّقُوْنِ ۟

உங்களிடமுள்ளதை உண்மைப் படுத்தக்கூடியதாக நான் இறக்கிய (இவ்வேதத்)தை நம்பிக்கை கொள்ளுங்கள்; அதை நிராகரிப்பவர்களில் முதலாமவர்களாக ஆகிவிடாதீர்கள்; என் வசனங்களுக்குப் பகரமாக சொற்ப கிரயத்தை வாங்காதீர்கள்; என்னையே அஞ்சுங்கள். info
التفاسير:

external-link copy
42 : 2

وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَاَنْتُمْ تَعْلَمُوْنَ ۟

உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள்; நீங்கள் அறிய, உண்மையை மறைக்காதீர்கள்; info
التفاسير:

external-link copy
43 : 2

وَاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَارْكَعُوْا مَعَ الرّٰكِعِیْنَ ۟

தொழுகையை நிலைநிறுத்துங்கள்; ஸகாத்தை கொடுங்கள்; பணிபவர்களுடன் (சேர்ந்து) பணியுங்கள். info
التفاسير:

external-link copy
44 : 2

اَتَاْمُرُوْنَ النَّاسَ بِالْبِرِّ وَتَنْسَوْنَ اَنْفُسَكُمْ وَاَنْتُمْ تَتْلُوْنَ الْكِتٰبَ ؕ— اَفَلَا تَعْقِلُوْنَ ۟

நீங்களோ வேதத்தை ஓதுகிறீர்கள். (அவ்வாறிருக்க), உங்களை மறந்து, மக்களுக்கு (மட்டும்) நன்மையை ஏவுகிறீர்களா? சிந்தித்து புரியமாட்டீர்களா? info
التفاسير:

external-link copy
45 : 2

وَاسْتَعِیْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ ؕ— وَاِنَّهَا لَكَبِیْرَةٌ اِلَّا عَلَی الْخٰشِعِیْنَ ۟ۙ

நீங்கள் பொறுத்திருந்தும் தொழுதும் (அல்லாஹ்விடம்) உதவி கோருங்கள். நிச்சயமாக அது பளுவானதுதான், உள்ளச்சமுடையோர் மீதே தவிர. info
التفاسير:

external-link copy
46 : 2

الَّذِیْنَ یَظُنُّوْنَ اَنَّهُمْ مُّلٰقُوْا رَبِّهِمْ وَاَنَّهُمْ اِلَیْهِ رٰجِعُوْنَ ۟۠

(அவர்கள்) தங்கள் இறைவனை நிச்சயமாக தாங்கள் சந்திப்பவர்கள்; அவனிடமே நிச்சயமாக தாங்கள் திரும்புகிறவர்கள் என்று நம்புவார்கள். info
التفاسير:

external-link copy
47 : 2

یٰبَنِیْۤ اِسْرَآءِیْلَ اذْكُرُوْا نِعْمَتِیَ الَّتِیْۤ اَنْعَمْتُ عَلَیْكُمْ وَاَنِّیْ فَضَّلْتُكُمْ عَلَی الْعٰلَمِیْنَ ۟

இஸ்ராயீலின் சந்ததிகளே! நான் உங்கள் மீது அருள்புரிந்த என் அருளையும் நிச்சயமாக நான் உலகத்தார்களைவிட உங்களை மேன்மைப்படுத்தியதையும் நினைவு கூருங்கள். info
التفاسير:

external-link copy
48 : 2

وَاتَّقُوْا یَوْمًا لَّا تَجْزِیْ نَفْسٌ عَنْ نَّفْسٍ شَیْـًٔا وَّلَا یُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَّلَا یُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَّلَا هُمْ یُنْصَرُوْنَ ۟

ஒரு நாளை அஞ்சுங்கள்: (அதில்) ஓர் ஆன்மா (வேறு) ஓர் ஆன்மாவுக்கு ஒன்றையும் பலனளிக்காது; அதனிடமிருந்து பரிந்துரை ஏற்கப்படாது; அதனிடமிருந்து பரிகாரம் (பிணைத் தொகை) வாங்கப்படாது; அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்பட மாட்டார்கள். info
التفاسير: