Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Page Number:close

external-link copy
246 : 2

اَلَمْ تَرَ اِلَی الْمَلَاِ مِنْ بَنِیْۤ اِسْرَآءِیْلَ مِنْ بَعْدِ مُوْسٰی ۘ— اِذْ قَالُوْا لِنَبِیٍّ لَّهُمُ ابْعَثْ لَنَا مَلِكًا نُّقَاتِلْ فِیْ سَبِیْلِ اللّٰهِ ؕ— قَالَ هَلْ عَسَیْتُمْ اِنْ كُتِبَ عَلَیْكُمُ الْقِتَالُ اَلَّا تُقَاتِلُوْا ؕ— قَالُوْا وَمَا لَنَاۤ اَلَّا نُقَاتِلَ فِیْ سَبِیْلِ اللّٰهِ وَقَدْ اُخْرِجْنَا مِنْ دِیَارِنَا وَاَبْنَآىِٕنَا ؕ— فَلَمَّا كُتِبَ عَلَیْهِمُ الْقِتَالُ تَوَلَّوْا اِلَّا قَلِیْلًا مِّنْهُمْ ؕ— وَاللّٰهُ عَلِیْمٌۢ بِالظّٰلِمِیْنَ ۟

மூஸாவுக்குப் பின்னர் இஸ்ராயீலின் சந்ததிகளைச் சேர்ந்த தலைவர்களை நீர் கவனிக்கவில்லையா? "எங்களுக்கு ஓர் அரசரை அனுப்புவீராக! அல்லாஹ்வுடைய பாதையில் நாங்கள் போர் புரிவோம்" என்று தங்களுக்குரிய நபிக்கு அவர்கள் கூறியபோது. "போர் உங்கள் மீது கடமையாக்கப்பட்டால் நீங்கள் போர் புரியாமல் இருக்கக்கூடுமா?" என்று கூறினார். "அல்லாஹ்வுடைய பாதையில் நாங்கள் போர் புரியாதிருக்க எங்களுக்கு என்ன (நேர்ந்தது)? நாங்கள் எங்கள் இல்லங்கள் இன்னும் எங்கள் சந்ததிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளோம்" என்று கூறினார்கள். போர் அவர்கள் மீது கடமையாக்கப்பட்டபோது அவர்களில் குறைவானவர்களைத் தவிர (மற்றவர்கள் போரை விட்டு) விலகினார்கள். அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிந்தவன். info
التفاسير:

external-link copy
247 : 2

وَقَالَ لَهُمْ نَبِیُّهُمْ اِنَّ اللّٰهَ قَدْ بَعَثَ لَكُمْ طَالُوْتَ مَلِكًا ؕ— قَالُوْۤا اَنّٰی یَكُوْنُ لَهُ الْمُلْكُ عَلَیْنَا وَنَحْنُ اَحَقُّ بِالْمُلْكِ مِنْهُ وَلَمْ یُؤْتَ سَعَةً مِّنَ الْمَالِ ؕ— قَالَ اِنَّ اللّٰهَ اصْطَفٰىهُ عَلَیْكُمْ وَزَادَهٗ بَسْطَةً فِی الْعِلْمِ وَالْجِسْمِ ؕ— وَاللّٰهُ یُؤْتِیْ مُلْكَهٗ مَنْ یَّشَآءُ ؕ— وَاللّٰهُ وَاسِعٌ عَلِیْمٌ ۟

அவர்களுடைய நபி, "நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசராக அனுப்பியிருக்கிறான்" என்று அவர்களுக்குக் கூறினார். "எங்கள் மீது ஆட்சி (செலுத்த) அவருக்கு (தகுதி) எப்படி இருக்கும்? அவரைவிட நாங்கள் ஆட்சிக்கு மிகவும் தகுதியுடையவர்கள். அவர் செல்வத்தின் வசதி கொடுக்கப்படவில்லையே" என்று (அம்மக்கள்) கூறினார்கள். "நிச்சயமாக அல்லாஹ், உங்கள் மீது (ஆட்சி புரிய) அவரைத் தேர்ந்தெடுத்தான். (போர்க்) கல்வியிலும், உடலிலும் ஆற்றலை அவருக்கு அதிகம் கொடுத்திருக்கிறான். "அல்லாஹ், தான் நாடியவருக்கே தனது ஆட்சியைத் தருவான். அல்லாஹ் விசாலமானவன். மிக அறிபவன்" என்று (தூதர்) கூறினார். info
التفاسير:

external-link copy
248 : 2

وَقَالَ لَهُمْ نَبِیُّهُمْ اِنَّ اٰیَةَ مُلْكِهٖۤ اَنْ یَّاْتِیَكُمُ التَّابُوْتُ فِیْهِ سَكِیْنَةٌ مِّنْ رَّبِّكُمْ وَبَقِیَّةٌ مِّمَّا تَرَكَ اٰلُ مُوْسٰی وَاٰلُ هٰرُوْنَ تَحْمِلُهُ الْمَلٰٓىِٕكَةُ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لَّكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟۠

"நிச்சயமாக அவருடைய ஆட்சிக்கு அத்தாட்சி பேழை உங்களிடம் வருவதாகும். அதில் உங்கள் இறைவனிடமிருந்து ஆறுதலும் மூஸாவின் குடும்பத்தார் மற்றும் ஹாரூனுடைய குடும்பத்தார் விட்டுச் சென்றதிலிருந்து மீதப்பொருட்களும் இருக்கும். அதை வானவர்கள் சுமப்பார்கள். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் நிச்சயமாக உங்களுக்கு அதில் ஓர் அத்தாட்சி திட்டமாக உண்டு" என்று அவர்களுடைய நபி அவர்களுக்குக் கூறினார். info
التفاسير: