Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Page Number:close

external-link copy
282 : 2

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا تَدَایَنْتُمْ بِدَیْنٍ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی فَاكْتُبُوْهُ ؕ— وَلْیَكْتُبْ بَّیْنَكُمْ كَاتِبٌ بِالْعَدْلِ ۪— وَلَا یَاْبَ كَاتِبٌ اَنْ یَّكْتُبَ كَمَا عَلَّمَهُ اللّٰهُ فَلْیَكْتُبْ ۚ— وَلْیُمْلِلِ الَّذِیْ عَلَیْهِ الْحَقُّ وَلْیَتَّقِ اللّٰهَ رَبَّهٗ وَلَا یَبْخَسْ مِنْهُ شَیْـًٔا ؕ— فَاِنْ كَانَ الَّذِیْ عَلَیْهِ الْحَقُّ سَفِیْهًا اَوْ ضَعِیْفًا اَوْ لَا یَسْتَطِیْعُ اَنْ یُّمِلَّ هُوَ فَلْیُمْلِلْ وَلِیُّهٗ بِالْعَدْلِ ؕ— وَاسْتَشْهِدُوْا شَهِیْدَیْنِ مِنْ رِّجَالِكُمْ ۚ— فَاِنْ لَّمْ یَكُوْنَا رَجُلَیْنِ فَرَجُلٌ وَّامْرَاَتٰنِ مِمَّنْ تَرْضَوْنَ مِنَ الشُّهَدَآءِ اَنْ تَضِلَّ اِحْدٰىهُمَا فَتُذَكِّرَ اِحْدٰىهُمَا الْاُخْرٰی ؕ— وَلَا یَاْبَ الشُّهَدَآءُ اِذَا مَا دُعُوْا ؕ— وَلَا تَسْـَٔمُوْۤا اَنْ تَكْتُبُوْهُ صَغِیْرًا اَوْ كَبِیْرًا اِلٰۤی اَجَلِهٖ ؕ— ذٰلِكُمْ اَقْسَطُ عِنْدَ اللّٰهِ وَاَقْوَمُ لِلشَّهَادَةِ وَاَدْنٰۤی اَلَّا تَرْتَابُوْۤا اِلَّاۤ اَنْ تَكُوْنَ تِجَارَةً حَاضِرَةً تُدِیْرُوْنَهَا بَیْنَكُمْ فَلَیْسَ عَلَیْكُمْ جُنَاحٌ اَلَّا تَكْتُبُوْهَا ؕ— وَاَشْهِدُوْۤا اِذَا تَبَایَعْتُمْ ۪— وَلَا یُضَآرَّ كَاتِبٌ وَّلَا شَهِیْدٌ ؕ۬— وَاِنْ تَفْعَلُوْا فَاِنَّهٗ فُسُوْقٌ بِكُمْ ؕ— وَاتَّقُوا اللّٰهَ ؕ— وَیُعَلِّمُكُمُ اللّٰهُ ؕ— وَاللّٰهُ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟

நம்பிக்கையாளர்களே! நீங்கள் ஒரு குறிப்பிட்ட தவணை வரை (ஒருவர் மற்றவருடன்) கடனுக்கு வியாபாரம் செய்தால் அதை எழுதுங்கள். உங்களுக்கு மத்தியில் எழுதுபவர் நீதியாக எழுதவும். எழுதுபவர் அல்லாஹ் அவருக்கு கற்பித்துள்ளதால் எழுத மறுக்க வேண்டாம். ஆகவே, அவர் எழுதவும். கடன் வாங்கியவர் வாசகம் கூறவும்; தம் இறைவனான அல்லாஹ்வை அஞ்சவும்; அதில் எதையும் குறைக்க வேண்டாம். கடன் வாங்கியவர், அறிவு முதிர்ச்சியற்றவராக அல்லது பலவீனராக அல்லது வாசகம் கூற இயலாதவராக இருந்தால், அவருடைய பொறுப்பாளர் நீதியாக வாசகம் கூறவும். உங்கள் ஆண்களில் இரு சாட்சிகளை சாட்சியாக்கத் தேடுங்கள். இருவரும் ஆண்களாக இல்லையென்றால் ஓர் ஆண், இரு பெண்கள் (இருக்க வேண்டும்). ஏனெனில், அவ்விருவரில் ஒருத்தி மறந்தால் மற்றவள் அவளுக்கு நினைவூட்டுவாள். சாட்சிகளில் நீங்கள் திருப்தியடைபவர்களிலிருந்து (சாட்சிகளை அமையுங்கள்). சாட்சிகள் (சாட்சி கூற) அழைக்கப்படும் போது அவர்கள் மறுக்க வேண்டாம். (கடன்) சிறிதோ பெரிதோ அதன் தவணை வரை அதை எழுத சோம்பல் படாதீர்கள். இது அல்லாஹ்விடம் மிக நீதியானதாகவும், சாட்சியத்திற்கு அதிகம் உறுதியானதாகவும், (கடன் தொகை அல்லது தவணையைப் பற்றி) நீங்கள் சந்தேகிக்காமல் இருக்க மிக நெருக்கமாகவும் இருக்கும். (ஆனால்,) நீங்கள் உங்களுக்கிடையில் அதை ரொக்கமாக நடத்துகிற வியாபாரமாயிருந்தால் தவிர, அதை நீங்கள் எழுதாமலிருப்பது உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் வியாபாரம் செய்தால் சாட்சி ஏற்படுத்துங்கள். எழுத்தாளரோ சாட்சியோ துன்புறுத்தப்பட மாட்டார். நீங்கள் (துன்புறுத்தும் செயலைச்) செய்தால் நிச்சயமாக அது உங்களுக்குப் பெரும் பாவமாகும். அல்லாஹ்வை அஞ்சுங்கள். அல்லாஹ் உங்களுக்குக் கற்பிப்பான். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன். info
التفاسير: