Check out the new design

クルアーンの対訳 - クルアーン簡潔注釈(タミル語対訳) * - 対訳の目次


対訳 章: イムラーン家章   節:
لَقَدْ سَمِعَ اللّٰهُ قَوْلَ الَّذِیْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ فَقِیْرٌ وَّنَحْنُ اَغْنِیَآءُ ۘ— سَنَكْتُبُ مَا قَالُوْا وَقَتْلَهُمُ الْاَنْۢبِیَآءَ بِغَیْرِ حَقٍّ ۙۚ— وَّنَقُوْلُ ذُوْقُوْا عَذَابَ الْحَرِیْقِ ۟
3.181. “அல்லாஹ் எங்களிடம் கடன் கேட்கும் ஏழை. எங்களிடம் சொத்துக்கள் இருப்பதனால் நாங்கள் செல்வந்தர்கள்” என்று கூறிய யூதர்களின் பேச்சை அல்லாஹ் செவியுற்றுவிட்டான். தமது இறைவன் மீது கூறிய இந்த அவதூறையும் இறைத்தூதர்களை அநியாயமாக அவர்கள் கொலைசெய்ததையும் நாம் எழுதிவைப்போம். “நரகத்தில் சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்” என்றும் நாம் அவர்களிடம் கூறுவோம்.
アラビア語 クルアーン注釈:
ذٰلِكَ بِمَا قَدَّمَتْ اَیْدِیْكُمْ وَاَنَّ اللّٰهَ لَیْسَ بِظَلَّامٍ لِّلْعَبِیْدِ ۟ۚ
3.182. யூதர்களே! இந்த வேதனை நீங்கள் சேர்த்துவைத்த பாவங்கள், இழிவான செயற்பாடுகளின் விளைவேயாகும். அல்லாஹ் தன் அடியார்களில் எவர்மீதும் அநீதி இழைப்பதில்லை என்பதும் அதற்குக் காரணமாகும்.
アラビア語 クルアーン注釈:
اَلَّذِیْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ عَهِدَ اِلَیْنَاۤ اَلَّا نُؤْمِنَ لِرَسُوْلٍ حَتّٰی یَاْتِیَنَا بِقُرْبَانٍ تَاْكُلُهُ النَّارُ ؕ— قُلْ قَدْ جَآءَكُمْ رُسُلٌ مِّنْ قَبْلِیْ بِالْبَیِّنٰتِ وَبِالَّذِیْ قُلْتُمْ فَلِمَ قَتَلْتُمُوْهُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
3.183. “அல்லாஹ் எங்கள் வேதங்களில் எங்களின் தூதர்களின்மூலம் எங்களிடம் ஒரு கட்டளையிட்டுள்ளான். அது எங்களிடம் வருகின்ற எந்த தூதரானாலும் அவர் அல்லாஹ்வுக்காக வழங்கும் தர்மத்தை வானத்திலிருந்து வரும் நெருப்பு பொசுக்காத வரை நாம் அவரை நம்பிக்கை கொள்ளக்கூடாது என்பதாகும்” என்று அவர்கள் அல்லாஹ்வின்மீது அபாண்டமாகவும் பொய்யாகவும் கூறுகிறார்கள். இக்கட்டளை அல்லாஹ் கூறியது, தூதர்களின் உண்மைக்கு ஆதாரம் நெருப்பு எரிக்கும் தர்மம் என்பவைகள் அனைத்துமே அல்லாஹ்வின் மீது அவர்கள் கூறிய பொய்களாகும். எனவேதான் அல்லாஹ் தன் தூதர் முஹம்மதிடம் பின்வருமாறு அவர்களிடம் கேட்குமாறு கட்டளையிடுகிறான்: “எனக்கு முன்னால் வந்த பல தூதர்கள் அவர்களின் தூதுத்துவத்தை உண்மைப்படுத்தக்கூடிய தெளிவான ஆதாரங்களையும் நீங்கள் கூறும், வானத்திலிருந்து நெருப்பு பொசுக்கக்கூடிய ஒரு பலிப்பிராணியையும் கொண்டு வந்தார்களே! நீங்கள் கூறும் விஷயத்தில் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை ஏன் பொய்ப்பித்தீர்கள்? ஏன் கொலை செய்தீர்கள்?
アラビア語 クルアーン注釈:
فَاِنْ كَذَّبُوْكَ فَقَدْ كُذِّبَ رُسُلٌ مِّنْ قَبْلِكَ جَآءُوْ بِالْبَیِّنٰتِ وَالزُّبُرِ وَالْكِتٰبِ الْمُنِیْرِ ۟
3.184. தூதரே! அவர்கள் உம்மைப் பொய்யர் என்று கூறினால் அதற்காக நீர் கவலைப்பட வேண்டாம். இது நிராகரிப்பாளர்களின் வழக்கம்தான். உமக்கு முன்னால் ஏராளமான தூதர்கள் இவ்வாறே பொய்யர் என்று தூற்றப்பட்டுள்ளார்கள். அவர்கள் தெளிவான ஆதாரங்களையும், அறிவுரைகளையும் உபதேசங்களையும் உள்ளடக்கிய வேதங்களையும் சட்ட திட்டங்களை உள்ளடக்கிய நேர்வழிகாட்டக்கூடிய வேதத்தையும் கொண்டு வந்தார்கள்.
アラビア語 クルアーン注釈:
كُلُّ نَفْسٍ ذَآىِٕقَةُ الْمَوْتِ ؕ— وَاِنَّمَا تُوَفَّوْنَ اُجُوْرَكُمْ یَوْمَ الْقِیٰمَةِ ؕ— فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَاُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ ؕ— وَمَا الْحَیٰوةُ الدُّنْیَاۤ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ ۟
3.185. எல்லா உயிரும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும். எனவே இவ்வுலக வாழ்வைக்கொண்டு எவரும் ஏமாந்துவிட வேண்டாம். மறுமைநாளில்தான் குறைவின்றி முழுமையாக நீங்கள் கூலிவழங்கப்படுவீர்கள். யாரை அல்லாஹ் நரகத்திலிருந்து தூரமாக்கி சுவனத்தில் நுழைவித்தானோ அவர் தாம் விரும்பும் நன்மைகளைப் பெற்றுவிட்டார்; தாம் அஞ்சும் தீங்குகளிலிருந்து பாதுகாப்புபெற்றுவிட்டார். இவ்வுலக வாழ்க்கை அழியக்கூடிய இன்பங்கள்தாம். ஏமாறுபவனே இதன்மீது மோகம்கொள்வான்.
アラビア語 クルアーン注釈:
لَتُبْلَوُنَّ فِیْۤ اَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْ ۫— وَلَتَسْمَعُنَّ مِنَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَمِنَ الَّذِیْنَ اَشْرَكُوْۤا اَذًی كَثِیْرًا ؕ— وَاِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا فَاِنَّ ذٰلِكَ مِنْ عَزْمِ الْاُمُوْرِ ۟
3.186. நம்பிக்கையாளர்களே! உங்களின் செல்வங்களில் கட்டாயக் கடமைகளை நிறைவேற்றுவதைக்கொண்டோ அதில் ஏற்படும் ஆபத்துகளைக்கொண்டோ நிச்சயம் நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். மார்க்கத்தின் கடமைகளை நிறைவேற்றுவதைக்கொண்டோ பலவிதமான சோதனைகளைக்கொண்டோ உங்கள் உயிர்களிலும் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்குமுன் வேதம் வழங்கப்பட்டவர்களிடமிருந்தும் இணைவைப்பாளர்களிடமிருந்தும் உங்களின் மார்க்கத்தைக் குறித்தோ உங்களைக் குறித்தோ நோவினைதரும் ஏராளமான விஷயங்களைச் செவியுறுவீர்கள். உங்களுக்கு ஏற்படும் துன்பங்களிலும் சோதனைகளிலும் நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்து, அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சினால் நிச்சயமாக அதுதான் உறுதிமிக்க காரியமும் போட்டியிடுபவர்கள் போட்டியிடும் விடயமுமாகும்.
アラビア語 クルアーン注釈:
本諸節の功徳:
• من سوء فعال اليهود وقبيح أخلاقهم اعتداؤهم على أنبياء الله بالتكذيب والقتل.
1. யூதர்கள் அல்லாஹ்வின் தூதர்களை மறுத்தும் கொலை செய்தும் வரம்புமீறியமை அவர்களது மோசமான செயற்பாடுகளிலும், கெட்டகுணங்களிலும் ஒன்றாகும்.

• كل فوز في الدنيا فهو ناقص، وإنما الفوز التام في الآخرة، بالنجاة من النار ودخول الجنة.
2. உலக வெற்றிகள் அனைத்துமே குறையுள்ளதே. பரிபூரண வெற்றி மறுமையில்தான். நரகிலிருந்து தப்பி சுவனத்தில் நுழைவதே அவ்வெற்றியாகும்.

• من أنواع الابتلاء الأذى الذي ينال المؤمنين في دينهم وأنفسهم من قِبَل أهل الكتاب والمشركين، والواجب حينئذ الصبر وتقوى الله تعالى.
3. வேதக்காரர்கள் இணைவைப்பாளர்கள் மூலம் முஃமின்களுக்கு அவர்களது மார்க்கத்திலும் அவர்களது சொந்தவிடயத்திலும் ஏற்படும் நோவினைகள் சோதனைகளில் ஒரு வகையே. இது போன்ற நிலமைகளில் பொறுமையைக் கடைபிடித்து அல்லாஹ்வை அஞ்சுவதே கடமையாகும்.

 
対訳 章: イムラーン家章
章名の目次 ページ番号
 
クルアーンの対訳 - クルアーン簡潔注釈(タミル語対訳) - 対訳の目次

- Tafsir Center for Quranic Studies - 発行

閉じる