Check out the new design

クルアーンの対訳 - クルアーン簡潔注釈(タミル語対訳) * - 対訳の目次


対訳 章: イムラーン家章   節:
اِنَّ هٰذَا لَهُوَ الْقَصَصُ الْحَقُّ ۚ— وَمَا مِنْ اِلٰهٍ اِلَّا اللّٰهُ ؕ— وَاِنَّ اللّٰهَ لَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
3.62. ஈசாவைக்குறித்து நாம் கூறிய விஷயங்கள் தான் சந்தேகமற்ற பொய்யற்ற உண்மையாகும். அல்லாஹ்வைத்தவிர உண்மையாக வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. அல்லாஹ் தன் அதிகாரத்தில் யாவற்றையும் மிகைத்தவன்; அவன் வழங்கும் சட்டங்களில், கட்டளைகளில் படைப்பில் ஞானம்மிக்கவன்.
アラビア語 クルアーン注釈:
فَاِنْ تَوَلَّوْا فَاِنَّ اللّٰهَ عَلِیْمٌۢ بِالْمُفْسِدِیْنَ ۟۠
3.63. அவர்கள் உம்மைப் பின்பற்றாமல் நீர் கொண்டு வந்ததைப் புறக்கணித்துவிட்டால் அதுதான் அவர்கள் ஏற்படுத்தும் குழப்பமாகும். பூமியில் குழப்பம் விளைவிப்போரை அல்லாஹ் நன்கறிந்தவன். அதற்காக அவன் அவர்களுக்குத் தண்டனை வழங்குவான்.
アラビア語 クルアーン注釈:
قُلْ یٰۤاَهْلَ الْكِتٰبِ تَعَالَوْا اِلٰی كَلِمَةٍ سَوَآءٍ بَیْنَنَا وَبَیْنَكُمْ اَلَّا نَعْبُدَ اِلَّا اللّٰهَ وَلَا نُشْرِكَ بِهٖ شَیْـًٔا وَّلَا یَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا اَرْبَابًا مِّنْ دُوْنِ اللّٰهِ ؕ— فَاِنْ تَوَلَّوْا فَقُوْلُوا اشْهَدُوْا بِاَنَّا مُسْلِمُوْنَ ۟
3.64. தூதரே! நீர் கூறுவீராக: “வேதம் வழங்கப்பட்ட யூதர்கள் மற்றும் கிருஸ்தவர்களே! வாருங்கள், நாம் அனைவரும் ஒன்றுபடும் பொது வார்த்தையில் நாம் ஒன்றிணைவோம்: “நாம் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும். அவனுடன் வேறு யாரையும் வணங்கக் கூடாது, அவர்கள் எவ்வளவு உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றவர்களாக இருந்தாலும் சரியே. நம்மில் சிலர் சிலரை அல்லாஹ்வைத்தவிர வணங்கப்படும் கட்டுப்படத்தக்க கடவுள்களாக ஆக்கிவிடக்கூடாது.” என்பதே அந்த வார்த்தையாகும். நம்பிக்கையாளர்களே! நீங்கள் அழைக்கும் சத்தியத்தை அவர்கள் புறக்கணித்துவிட்டால் “நாங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே கட்டுப்பட்ட முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள் என அவர்களிடம் நீங்கள் கூறுங்கள்.
アラビア語 クルアーン注釈:
یٰۤاَهْلَ الْكِتٰبِ لِمَ تُحَآجُّوْنَ فِیْۤ اِبْرٰهِیْمَ وَمَاۤ اُنْزِلَتِ التَّوْرٰىةُ وَالْاِنْجِیْلُ اِلَّا مِنْ بَعْدِهٖ ؕ— اَفَلَا تَعْقِلُوْنَ ۟
3.65. வேதக்காரர்களே! நீங்கள் இப்ராஹீமின் மார்க்கத்தைக் குறித்து ஏன் தர்க்கம் செய்கிறீர்கள்? யூதர்கள் கூறுகிறார்கள், “இப்ராஹீம் ஒரு யூதர் என்று.” கிருஸ்தவர்கள் கூறுகிறார்கள், “அவர் ஒரு கிருஸ்தவர் என்று.” யூத மதமும், கிருஸ்தவமும் அவர் இறந்து பல நூற்றாண்டு கழிந்த பின்னர்தான் தோன்றியது என்பதை நீங்கள் அறிவீர்கள்தானே! உங்களின் வாதத்திலுள்ள தவறை உங்களது புத்தியினால் புரிந்துகொள்ள முடியாதா?
アラビア語 クルアーン注釈:
هٰۤاَنْتُمْ هٰۤؤُلَآءِ حَاجَجْتُمْ فِیْمَا لَكُمْ بِهٖ عِلْمٌ فَلِمَ تُحَآجُّوْنَ فِیْمَا لَیْسَ لَكُمْ بِهٖ عِلْمٌ ؕ— وَاللّٰهُ یَعْلَمُ وَاَنْتُمْ لَا تَعْلَمُوْنَ ۟
3.66. வேதக்காரர்களே! உங்களுக்குத் தெரிந்த உங்களது மார்க்க விடயங்கள் மற்றும் உங்களுக்கு இறக்கப்பட்டதைக்குறித்து நீங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தர்க்கம் செய்துவிட்டீர்கள். உங்களுக்குத் தெரியாத இப்ராஹீமின் மார்க்கத்தைக் குறித்து ஏன் தர்க்கம் செய்கிறீர்கள்? அது பற்றி உங்கள் வேதங்களிலும் இடம்பெறவில்லை உங்கள் நபிமார்களும் கூறவில்லை. அல்லாஹ்தான் விஷயங்களின் உண்மைநிலையை நன்கறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.
アラビア語 クルアーン注釈:
مَا كَانَ اِبْرٰهِیْمُ یَهُوْدِیًّا وَّلَا نَصْرَانِیًّا وَّلٰكِنْ كَانَ حَنِیْفًا مُّسْلِمًا ؕ— وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِیْنَ ۟
3.67. இப்ராஹீம் யூதராகவோ கிருஸ்தவராகவோ இருந்ததில்லை. அவர் அசத்திய வழிகள் அனைத்தையும் விட்டு ஒதுங்கிய, அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்ட ஏகத்துவவாதியாக இருந்தார். அவரது மார்க்கத்திலே நாம் உள்ளோம் என அரபு இணைவைப்பாளர்கள் கூறுவதைப்போல அவர் என்றும் இணைவைப்பாளராக இருந்ததில்லை.
アラビア語 クルアーン注釈:
اِنَّ اَوْلَی النَّاسِ بِاِبْرٰهِیْمَ لَلَّذِیْنَ اتَّبَعُوْهُ وَهٰذَا النَّبِیُّ وَالَّذِیْنَ اٰمَنُوْا ؕ— وَاللّٰهُ وَلِیُّ الْمُؤْمِنِیْنَ ۟
3.68. இப்ராஹீமுக்கு மிகவும் நெருங்கியவர்கள் அவர் காலத்தில் அவர் கொண்டு வந்ததைப் பின்பற்றியவர்களும் இந்த நபியும் இந்த நபியின்மீது நம்பிக்கைகொண்ட இந்த சமூகத்தவர்களும்தாம். அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு உதவிசெய்யக்கூடியவன்; அவர்களைப் பாதுகாக்கக்கூடியவன்.
アラビア語 クルアーン注釈:
وَدَّتْ طَّآىِٕفَةٌ مِّنْ اَهْلِ الْكِتٰبِ لَوْ یُضِلُّوْنَكُمْ ؕ— وَمَا یُضِلُّوْنَ اِلَّاۤ اَنْفُسَهُمْ وَمَا یَشْعُرُوْنَ ۟
3.69. நம்பிக்கையாளர்களே! வேதக்காரர்களிலுள்ள அறிஞர்கள், அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய நேர்வழியிலிருந்து உங்களைப் பிறழச்செய்துவிட வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்கள் தங்களைத்தாங்களே வழிகேட்டில் ஆழ்த்திக்கொள்கிறார்கள். ஏனெனில் நம்பிக்கையாளர்களை வழிகெடுப்பதற்காக அவர்கள் செய்யும் முயற்சியால் அவர்களின் வழிகேடுதான் அதிகரிக்கும். அவர்கள் தங்களின் செயல்களால் ஏற்படும் விளைவுகளை அறிய மாட்டார்கள்.
アラビア語 クルアーン注釈:
یٰۤاَهْلَ الْكِتٰبِ لِمَ تَكْفُرُوْنَ بِاٰیٰتِ اللّٰهِ وَاَنْتُمْ تَشْهَدُوْنَ ۟
3.70. வேதம் வழங்கப்பட்ட யூதர்கள் மற்றும் கிருஸ்தவர்களே! அல்லாஹ் உங்கள்மீது இறக்கிய வசனங்களை ஏன் அறிந்துகொண்டே மறுக்கிறீர்கள்? அவற்றில் முஹம்மது நபியின் தூதுத்துவத்தை உண்மைப்படுத்தக்கூடிய தெளிவான சான்றுகள் இருக்கின்றன. உங்கள் வேதம் அறிவிக்கும் உண்மையானவர் அவர்தான் என நீங்களே சாட்சி கூறுகிறீர்களே!
アラビア語 クルアーン注釈:
本諸節の功徳:
• أن الرسالات الإلهية كلها اتفقت على كلمة عدل واحدة، وهي: توحيد الله تعالى والنهي عن الشرك.
1. அனைத்து இறைத்தூதுகளும் ஒருபொது விடயத்தில் உடன்பட்டுள்ளன. அது தான், அல்லாஹ் ஒருவனே அவனுக்கு இணையாக யாரையும் ஆக்கிவிடக்கூடாது என்பதாகும்.

• أهمية العلم بالتاريخ؛ لأنه قد يكون من الحجج القوية التي تُرَدُّ بها دعوى المبطلين.
2. வரலாறை அறிந்துவைத்திருப்பது முக்கியமானதாகும். சில வேளை அது அசத்தியவாதிகளின் வாதங்களை முறியடிப்பதற்கான வலிமையான ஆதாரமாக அமையலாம்.

• أحق الناس بإبراهيم عليه السلام من كان على ملته وعقيدته، وأما مجرد دعوى الانتساب إليه مع مخالفته فلا تنفع.
3. மக்களில் இப்ராஹீமின் மார்க்கத்தையும் கொள்கையையும் பின்பற்றுபவர்கள்தாம் அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள். அவருக்கு மாற்றம்செய்துகொண்டு நாங்கள் அவரைச் சார்ந்தவர்கள் என்று கூறுவதால் மாத்திரம் எந்தப் பயனும் இல்லை.

• دَلَّتِ الآيات على حرص كفرة أهل الكتاب على إضلال المؤمنين من هذه الأمة حسدًا من عند أنفسهم.
4. வேதக்காரர்கள் நம்பிக்கைகொண்ட இந்த சமூகத்தின் மீதுள்ள பொறாமையினால் அவர்களை வழிகெடுக்க விரும்புகிறார்கள் என்பதை இவ்வசனங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

 
対訳 章: イムラーン家章
章名の目次 ページ番号
 
クルアーンの対訳 - クルアーン簡潔注釈(タミル語対訳) - 対訳の目次

- Tafsir Center for Quranic Studies - 発行

閉じる