Check out the new design

クルアーンの対訳 - クルアーン簡潔注釈(タミル語対訳) * - 対訳の目次


対訳 章: イムラーン家章   節:
وَاِذْ اَخَذَ اللّٰهُ مِیْثَاقَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ لَتُبَیِّنُنَّهٗ لِلنَّاسِ وَلَا تَكْتُمُوْنَهٗ ؗۗ— فَنَبَذُوْهُ وَرَآءَ ظُهُوْرِهِمْ وَاشْتَرَوْا بِهٖ ثَمَنًا قَلِیْلًا ؕ— فَبِئْسَ مَا یَشْتَرُوْنَ ۟
3.187. தூதரே! வேதம்வழங்கப்பட்ட யூத மற்றும் கிருஸ்தவ அறிஞர்களிடம், “அல்லாஹ்வின் வேதத்தை நீங்கள் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்; அதிலுள்ள நேர்வழியையும் முஹம்மதின் தூதுத்துவத்தை அறிவிக்கக்கூடியதையும் மறைத்துவிடக்கூடாது” என்று அல்லாஹ் உறுதியான ஒப்பந்தம் வாங்கியதை நினைவுகூர்வீராக. அவர்கள் அந்த ஒப்பந்தத்தைப் பொருட்படுத்தாமல் புறக்கணித்துவிட்டார்கள். சத்தியத்தை மறைத்து அசத்தியத்தை வெளிப்படுத்தினார்கள். அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை அவர்களுக்கு சில வேளை கிடைக்கும் பணம், பதவி போன்ற அற்ப கிரயத்திற்காக விற்றுவிட்டார்கள். அல்லாஹ்வின் ஒப்பந்ததிற்குப் பகரமாக இவர்கள் பெற்றுக்கொண்ட இந்தக் கிரயம் மோசமானதாகும்.
アラビア語 クルアーン注釈:
لَا تَحْسَبَنَّ الَّذِیْنَ یَفْرَحُوْنَ بِمَاۤ اَتَوْا وَّیُحِبُّوْنَ اَنْ یُّحْمَدُوْا بِمَا لَمْ یَفْعَلُوْا فَلَا تَحْسَبَنَّهُمْ بِمَفَازَةٍ مِّنَ الْعَذَابِ ۚ— وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
3.188. தூதரே! அருவருப்பான காரியங்களைச் செய்துவிட்டு சந்தோஷப்பட்டு தாங்கள் செய்யாத நற்செயல்களுக்காக மக்கள் தங்களைப் புகழ வேண்டும் என்று விரும்புபவர்கள் அல்லாஹ்வின் வேதனையை விட்டும் தப்பி விடுவார்கள் என்று நீர் எண்ண வேண்டாம். அவர்களின் இருப்பிடம் நரகமாகும். அங்கு அவர்களுக்கு வேதனைமிக்க தண்டனை உண்டு.
アラビア語 クルアーン注釈:
وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟۠
3.189. வானங்களையும், பூமியையும், அவ்விரண்டிலும் உள்ளவற்றையும் படைத்து நிர்வகிக்கும் உரிமை அல்லாஹ்வுக்கே உரியது. அவன் ஒவ்வொரு பொருளின்மீதும் பேராற்றலுடையவன்.
アラビア語 クルアーン注釈:
اِنَّ فِیْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافِ الَّیْلِ وَالنَّهَارِ لَاٰیٰتٍ لِّاُولِی الْاَلْبَابِ ۟ۚۖ
3.190. வானங்களும் பூமியும் முன்மாதிரியின்றி இல்லாமையிலிருந்து படைக்கப்பட்டிருப்பதிலும் இரவும் பகலும் மாறிமாறி வருவதிலும், அவ்விரண்டின் நீண்ட, குறுகிய நேர ஏற்றத்தாழ்விலும் அறிவுடைய மக்களுக்கு தெளிவான அத்தாட்சிகள் இருக்கின்றன. அவை, அல்லாஹ் ஒருவன்தான் பிரபஞ்சத்தைப் படைத்தவன். அவன் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதை தெளிவாக எடுத்துரைக்கின்றன.
アラビア語 クルアーン注釈:
الَّذِیْنَ یَذْكُرُوْنَ اللّٰهَ قِیٰمًا وَّقُعُوْدًا وَّعَلٰی جُنُوْبِهِمْ وَیَتَفَكَّرُوْنَ فِیْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۚ— رَبَّنَا مَا خَلَقْتَ هٰذَا بَاطِلًا ۚ— سُبْحٰنَكَ فَقِنَا عَذَابَ النَّارِ ۟
3.191. அவர்கள் நின்றவாறும், அமர்ந்தவாறும், படுத்தவாறும் என எல்லா சூழ்நிலைகளிலும் அல்லாஹ்வை நினைவுகூருகிறார்கள். வானங்கள் மற்றும் பூமியின் படைப்பில் சிந்தனை செலுத்தி பின்வருமாறு கூறுவார்கள்: “அல்லாஹ்வே! நீ இந்தப் பெரும் படைப்புகளையெல்லாம் வீணாகப் படைக்கவில்லை. வீணாகப் படைப்பதை விட்டும் நீ தூய்மையானவன். நற்செயல்கள் செய்வதற்கு பாக்கியம் அளித்து தீய செயல்களிலிருந்து எங்களைப் பாதுகாத்து நரக வேதனையை விட்டும் எங்களைக் காத்தருள்வாயாக”.
アラビア語 クルアーン注釈:
رَبَّنَاۤ اِنَّكَ مَنْ تُدْخِلِ النَّارَ فَقَدْ اَخْزَیْتَهٗ ؕ— وَمَا لِلظّٰلِمِیْنَ مِنْ اَنْصَارٍ ۟
3.192. எங்கள் இறைவா! உன் படைப்புகளில் யாரை நீ நரகத்தில் நுழைவித்தாயோ அவரை நீ இழிவுபடுத்தி அம்பலப்படுத்திவிட்டாய். மறுமைநாளில் அநியாயக்காரர்களுக்கு அல்லாஹ்வின் வேதனையை விட்டும் தடுக்கக்கூடிய உதவியாளர்கள் இருக்க மாட்டார்கள்.
アラビア語 クルアーン注釈:
رَبَّنَاۤ اِنَّنَا سَمِعْنَا مُنَادِیًا یُّنَادِیْ لِلْاِیْمَانِ اَنْ اٰمِنُوْا بِرَبِّكُمْ فَاٰمَنَّا ۖۗ— رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَكَفِّرْ عَنَّا سَیِّاٰتِنَا وَتَوَفَّنَا مَعَ الْاَبْرَارِ ۟ۚ
3.193. எங்கள் இறைவா! "ஒரே இறைவனான அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொள்ளுங்கள்" என்று ஈமானின் பக்கம் அழைக்கக்கூடிய அழைப்பாளரான முஹம்மத் (ஸல்) அவர்களது அழைப்பைச் செவியுற்று நாங்கள் அவர் அழைக்கும் விஷயத்தின்மீது நம்பிக்கைகொண்டோம். அவருடைய மார்க்கத்தைப் பின்பற்றினோம். எனவே எங்கள் பாவங்களை மறைத்துவிடுவாயாக. எமது குறைகளை அம்பலப்படுத்திவிடாதே. எங்களின் குறைகளை கண்டும்காணாமல் விட்டுவிடுவாயாக. அதற்காக எங்களைத் தண்டித்துவிடாதே. நற்செயல்கள் செய்வதற்கும் தீமைகளை விடுவதற்கும் வாய்ப்பை வழங்கி நல்லவர்களுடன் எங்களை மரணிக்கச் செய்வாயாக.
アラビア語 クルアーン注釈:
رَبَّنَا وَاٰتِنَا مَا وَعَدْتَّنَا عَلٰی رُسُلِكَ وَلَا تُخْزِنَا یَوْمَ الْقِیٰمَةِ ؕ— اِنَّكَ لَا تُخْلِفُ الْمِیْعَادَ ۟
3.194. எங்கள் இறைவா! உன் தூதர்கள் மூலமாக வாக்களித்த, வழிகாட்டலையும் இவ்வுலகில் உதவியையும் எங்களுக்கு வழங்குவாயாக. மறுமைநாளில் நரகத்தில் நுழைத்து எங்களை அவமானப்படுத்திவிடாதே. எங்கள் இறைவா!நீ ஒருபோதும் வாக்குறுதிக்கு மாறாகச் செயல்படாத கொடையாளன்.
アラビア語 クルアーン注釈:
本諸節の功徳:
• من صفات علماء السوء من أهل الكتاب: كتم العلم، واتباع الهوى، والفرح بمدح الناس مع سوء سرائرهم وأفعالهم.
1. கல்வியை மறைத்தல், மனஇச்சையைப் பின்பற்றுதல், தீய எண்ணங்களுடனும் தீய செயல்களுடனும் இருந்துகொண்டு மக்களின் பாராட்டால் மகிழ்ச்சியடைதல் போன்றன வேதக்காரர்களிலுள்ள தீய அறிஞர்களின் பண்புகளில் சிலவாகும்.

• التفكر في خلق الله تعالى في السماوات والأرض وتعاقب الأزمان يورث اليقين بعظمة الله وكمال الخضوع له عز وجل.
2. அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதையும் காலங்கள் மாறிமாறி வருவதையும் சிந்தனை செய்வது அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கையையும் முழுமையான அடிபணிதலையும் ஏற்படுத்துகின்றது.

• دعاء الله وخضوع القلب له تعالى من أكمل مظاهر العبودية.
3. அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிவது, உளமாற அவனுக்கு அடிபணிவது அடிமைத்தனத்தின் பரிபூரண வெளிப்பாடுகளில் ஒன்றாகும்.

 
対訳 章: イムラーン家章
章名の目次 ページ番号
 
クルアーンの対訳 - クルアーン簡潔注釈(タミル語対訳) - 対訳の目次

- Tafsir Center for Quranic Studies - 発行

閉じる