Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Page Number:close

external-link copy
70 : 12

فَلَمَّا جَهَّزَهُمْ بِجَهَازِهِمْ جَعَلَ السِّقَایَةَ فِیْ رَحْلِ اَخِیْهِ ثُمَّ اَذَّنَ مُؤَذِّنٌ اَیَّتُهَا الْعِیْرُ اِنَّكُمْ لَسٰرِقُوْنَ ۟

அவர்களுக்கு அவர்களுடைய பொருள்களை அவர் தயார்படுத்தியபோது தன் சகோதரனின் சுமையில் குவளையை வைத்தார். பிறகு, ஒரு அறிவிப்பாளர் “ஓ! பயணக் கூட்டத்தார்களே! நிச்சயமாக நீங்கள் திருடர்கள்தான்” என்று அறிவித்தார். info
التفاسير:

external-link copy
71 : 12

قَالُوْا وَاَقْبَلُوْا عَلَیْهِمْ مَّاذَا تَفْقِدُوْنَ ۟

இவர்கள் அ(றிவித்த)வர்கள் பக்கம் முன்னோக்கி வந்து “நீங்கள் எதை இழக்கிறீர்கள்?” என்று கூறினர். info
التفاسير:

external-link copy
72 : 12

قَالُوْا نَفْقِدُ صُوَاعَ الْمَلِكِ وَلِمَنْ جَآءَ بِهٖ حِمْلُ بَعِیْرٍ وَّاَنَا بِهٖ زَعِیْمٌ ۟

“அரசருடைய குவளையை இழக்கிறோம்” என்று கூறினர், அதைக் கொண்டு வருபவருக்கு ஓர் ஒட்டகைச் சுமை (அளவு தானியம் வெகுமதியாக) உண்டு. நான் அதற்கு பொறுப்பாளன் (என்று அவர்களில் ஒருவன் கூறினான்). info
التفاسير:

external-link copy
73 : 12

قَالُوْا تَاللّٰهِ لَقَدْ عَلِمْتُمْ مَّا جِئْنَا لِنُفْسِدَ فِی الْاَرْضِ وَمَا كُنَّا سٰرِقِیْنَ ۟

“அல்லாஹ் மீது சத்தியமாக! நாங்கள் இவ்வூரில் விஷமம் செய்வதற்கு வரவில்லை; நாங்கள் திருடர்களாக இருக்கவில்லை என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்” என்று கூறினார்கள். info
التفاسير:

external-link copy
74 : 12

قَالُوْا فَمَا جَزَآؤُهٗۤ اِنْ كُنْتُمْ كٰذِبِیْنَ ۟

“நீங்கள் (இதில்) பொய்யர்களாக இருந்தால் அ(ந்)த (திருட்டி)ன் தண்டனை என்ன?” என்று கூறினர். info
التفاسير:

external-link copy
75 : 12

قَالُوْا جَزَآؤُهٗ مَنْ وُّجِدَ فِیْ رَحْلِهٖ فَهُوَ جَزَآؤُهٗ ؕ— كَذٰلِكَ نَجْزِی الظّٰلِمِیْنَ ۟

“அதன் தண்டனை எவருடைய சுமையில் (அது) காணப்படுகிறதோ அவரே அதற்குரிய தண்டனையாவார். இவ்வாறுதான் அநியாயக்காரர்களை நாம் தண்டிப்போம்” என்று கூறினர். info
التفاسير:

external-link copy
76 : 12

فَبَدَاَ بِاَوْعِیَتِهِمْ قَبْلَ وِعَآءِ اَخِیْهِ ثُمَّ اسْتَخْرَجَهَا مِنْ وِّعَآءِ اَخِیْهِ ؕ— كَذٰلِكَ كِدْنَا لِیُوْسُفَ ؕ— مَا كَانَ لِیَاْخُذَ اَخَاهُ فِیْ دِیْنِ الْمَلِكِ اِلَّاۤ اَنْ یَّشَآءَ اللّٰهُ ؕ— نَرْفَعُ دَرَجٰتٍ مَّنْ نَّشَآءُ ؕ— وَفَوْقَ كُلِّ ذِیْ عِلْمٍ عَلِیْمٌ ۟

தன் சகோதரனின் மூட்டைக்கு முன்பாக அவர்களின் மூட்டைகளில் (சோதனையை) ஆரம்பித்தார். பிறகு, தன் சகோதரனின் மூட்டையிலிருந்து அதை வெளிப்படுத்தினார். யூஸுஃபுக்கு இப்படித்தான் காரணம் செய்தோம். அல்லாஹ் நாடினால் தவிர (எகிப்து) அரசரின் சட்டப்படி அவர் தன் சகோதரனை எடுப்பவராக இல்லை. நாம் விரும்புகின்றவர்களை பதவிகளால் உயர்த்துகின்றோம். கல்வியுடைய ஒவ்வொருவருக்கும் மேல் ஒரு கல்விமான் இருக்கிறார். info
التفاسير:

external-link copy
77 : 12

قَالُوْۤا اِنْ یَّسْرِقْ فَقَدْ سَرَقَ اَخٌ لَّهٗ مِنْ قَبْلُ ۚ— فَاَسَرَّهَا یُوْسُفُ فِیْ نَفْسِهٖ وَلَمْ یُبْدِهَا لَهُمْ ۚ— قَالَ اَنْتُمْ شَرٌّ مَّكَانًا ۚ— وَاللّٰهُ اَعْلَمُ بِمَا تَصِفُوْنَ ۟

அவர் (அதைத்) திருடினால் (யூஸுஃப் என்ற) அவருடைய ஒரு சகோதரன் முன்னர் (இப்படித்தான்) திருடிவிட்டான் என்று கூறினர். யூஸுஃப் அதை தன் உள்ளத்தில் மறைத்தார்; அதை அவர்களுக்கு வெளியாக்கவில்லை - “நீங்கள் மிகவும் தரம் கெட்டவர்கள். நீங்கள் வருணிப்பதை அல்லாஹ் மிக அறிந்தவன்” - என்று (தன் மனதில்) கூறினார். info
التفاسير:

external-link copy
78 : 12

قَالُوْا یٰۤاَیُّهَا الْعَزِیْزُ اِنَّ لَهٗۤ اَبًا شَیْخًا كَبِیْرًا فَخُذْ اَحَدَنَا مَكَانَهٗ ۚ— اِنَّا نَرٰىكَ مِنَ الْمُحْسِنِیْنَ ۟

ஓ அதிபரே! அவருக்கு “(வயதிலும் கண்ணியத்திலும்) பெரியவரான முதியவரான ஒரு தந்தை இருக்கிறார். ஆகவே, இவருடைய இடத்தில் எங்களில் ஒருவரை எடுப்பீராக. நிச்சயமாக நாம் உம்மை நல்லறம் புரிபவர்களில் காண்கிறோம்” என்று கூறினார்கள். info
التفاسير: