Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Page Number:close

external-link copy
96 : 12

فَلَمَّاۤ اَنْ جَآءَ الْبَشِیْرُ اَلْقٰىهُ عَلٰی وَجْهِهٖ فَارْتَدَّ بَصِیْرًا ۚؕ— قَالَ اَلَمْ اَقُلْ لَّكُمْ ۚ— اِنِّیْۤ اَعْلَمُ مِنَ اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ۟

நற்செய்தியாளர் வந்தபோது, அதை அவருடைய முகத்தில் போட்டார். அவர் பார்வையுடையவராக திரும்பினார். “நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடம் நிச்சயமாக நான் அறிவேன் என்று நான் உங்களுக்குக் கூறவில்லையா?” என்று கூறினார். info
التفاسير:

external-link copy
97 : 12

قَالُوْا یٰۤاَبَانَا اسْتَغْفِرْ لَنَا ذُنُوْبَنَاۤ اِنَّا كُنَّا خٰطِـِٕیْنَ ۟

“ஓ எங்கள் தந்தையே! எங்களுக்கு எங்கள் பாவங்களை மன்னிக்கக் கோருவீராக! நிச்சயமாக நாங்கள் தவறிழைப்பவர்களாக இருந்தோம்” என்று கூறினர். info
التفاسير:

external-link copy
98 : 12

قَالَ سَوْفَ اَسْتَغْفِرُ لَكُمْ رَبِّیْ ؕ— اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِیْمُ ۟

“நான் என் இறைவனிடம் உங்களுக்காக மன்னிப்புக் கோருவேன். நிச்சயமாக அவன்தான் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்”என்று கூறினார். info
التفاسير:

external-link copy
99 : 12

فَلَمَّا دَخَلُوْا عَلٰی یُوْسُفَ اٰوٰۤی اِلَیْهِ اَبَوَیْهِ وَقَالَ ادْخُلُوْا مِصْرَ اِنْ شَآءَ اللّٰهُ اٰمِنِیْنَ ۟ؕ

அவர்கள் யூஸுஃபிடம் நுழைந்தபோது அவர் தன்பக்கம் தன் பெற்றோரை அரவணைத்தார். இன்னும், “அல்லாஹ் நாடினால்... நீங்கள் அச்சமற்றவர்களாக எகிப்தில் நுழையுங்கள்!” என்று கூறினார். info
التفاسير:

external-link copy
100 : 12

وَرَفَعَ اَبَوَیْهِ عَلَی الْعَرْشِ وَخَرُّوْا لَهٗ سُجَّدًا ۚ— وَقَالَ یٰۤاَبَتِ هٰذَا تَاْوِیْلُ رُءْیَایَ مِنْ قَبْلُ ؗ— قَدْ جَعَلَهَا رَبِّیْ حَقًّا ؕ— وَقَدْ اَحْسَنَ بِیْۤ اِذْ اَخْرَجَنِیْ مِنَ السِّجْنِ وَجَآءَ بِكُمْ مِّنَ الْبَدْوِ مِنْ بَعْدِ اَنْ نَّزَغَ الشَّیْطٰنُ بَیْنِیْ وَبَیْنَ اِخْوَتِیْ ؕ— اِنَّ رَبِّیْ لَطِیْفٌ لِّمَا یَشَآءُ ؕ— اِنَّهٗ هُوَ الْعَلِیْمُ الْحَكِیْمُ ۟

அவர் தன் பெற்றோரை அரச கட்டில் மேல் உயர்த்தினார். அவருக்கு (முன்) அவர்கள் சிரம் பணிந்தவர்களாக விழுந்தனர். (யூஸுஃப்) “என் தந்தையே! முன்னர் (நான் கண்ட) என் கனவின் விளக்கம் இது. என் இறைவன் அதை உண்மையாக ஆக்கி விட்டான். சிறையிலிருந்து என்னை அவன் வெளியேற்றியபோதும், எனக்கும், என் சகோதரர்களுக்கு இடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டு பண்ணிய பின்னர், உங்களை கிராமத்திலிருந்து (என்னிடம்) கொண்டு வந்தபோதும் அவன் எனக்கு நன்மை புரிந்திருக்கிறான். நிச்சயமாக என் இறைவன், தான் நாடியதை செய்வதற்கு மகா நுட்பமானவன். நிச்சயமாக அவன்தான் நன்கறிந்தவன், மகா ஞானவான்.” info
التفاسير:

external-link copy
101 : 12

رَبِّ قَدْ اٰتَیْتَنِیْ مِنَ الْمُلْكِ وَعَلَّمْتَنِیْ مِنْ تَاْوِیْلِ الْاَحَادِیْثِ ۚ— فَاطِرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۫— اَنْتَ وَلِیّٖ فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ۚ— تَوَفَّنِیْ مُسْلِمًا وَّاَلْحِقْنِیْ بِالصّٰلِحِیْنَ ۟

“என் இறைவா! திட்டமாக நீ எனக்கு ஆட்சியை தந்தாய். (கனவு சம்பந்தமான) பேச்சுகளின் விளக்கத்தை எனக்கு கற்பித்தாய். வானங்களையும் பூமியையும் படைத்தவனே, நீதான் இம்மையிலும் மறுமையிலும் என் பாதுகாவலன். என்னை முஸ்லிமாக உயிர் கைப்பற்றிக்கொள்! நல்லவர்களுடன் என்னை சேர்த்து விடு!” info
التفاسير:

external-link copy
102 : 12

ذٰلِكَ مِنْ اَنْۢبَآءِ الْغَیْبِ نُوْحِیْهِ اِلَیْكَ ۚ— وَمَا كُنْتَ لَدَیْهِمْ اِذْ اَجْمَعُوْۤا اَمْرَهُمْ وَهُمْ یَمْكُرُوْنَ ۟

(நபியே) இவை மறைவான விஷயங்களில் உள்ளவையாகும். இவற்றை உமக்கு வஹ்யி அறிவிக்கிறோம். அவர்கள் (யூஸுஃபை கிணற்றில் போடுவதற்காக) தங்கள் காரியத்தில் ஒருமித்து முடிவெடுத்தபோது நீர் அவர்களிடம் இருக்கவில்லை. info
التفاسير:

external-link copy
103 : 12

وَمَاۤ اَكْثَرُ النَّاسِ وَلَوْ حَرَصْتَ بِمُؤْمِنِیْنَ ۟

நீர் பேராசைப்பட்டாலும் மக்களில் அதிகமானவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை. info
التفاسير: