Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Page Number:close

external-link copy
38 : 12

وَاتَّبَعْتُ مِلَّةَ اٰبَآءِیْۤ اِبْرٰهِیْمَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ ؕ— مَا كَانَ لَنَاۤ اَنْ نُّشْرِكَ بِاللّٰهِ مِنْ شَیْءٍ ؕ— ذٰلِكَ مِنْ فَضْلِ اللّٰهِ عَلَیْنَا وَعَلَی النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَشْكُرُوْنَ ۟

என் மூதாதைகளாகிய இப்ராஹீம், இஸ்ஹாக், யஅகூப் உடைய மார்க்கத்தை பின்பற்றினேன். அல்லாஹ்விற்கு எதையும் நாங்கள் இணைவைப்பது எங்களுக்குத் தகுமானதல்ல. இது எங்கள் மீதும் (மற்ற) மக்கள் மீதும் அல்லாஹ்வின் அருளிலிருந்து உள்ளதாகும். எனினும், மக்களில் அதிகமானவர்கள், (அல்லாஹ்விற்கு) நன்றி செலுத்த மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
39 : 12

یٰصَاحِبَیِ السِّجْنِ ءَاَرْبَابٌ مُّتَفَرِّقُوْنَ خَیْرٌ اَمِ اللّٰهُ الْوَاحِدُ الْقَهَّارُ ۟ؕ

என் (இரு) சிறைத் தோழர்களே! (பலவீனமான) பிரிந்துள்ள (பல) தெய்வங்கள் மேலானவர்களா? அல்லது ஒருவனான, அடக்கி ஆளுபவனான அல்லாஹ்வா? info
التفاسير:

external-link copy
40 : 12

مَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِهٖۤ اِلَّاۤ اَسْمَآءً سَمَّیْتُمُوْهَاۤ اَنْتُمْ وَاٰبَآؤُكُمْ مَّاۤ اَنْزَلَ اللّٰهُ بِهَا مِنْ سُلْطٰنٍ ؕ— اِنِ الْحُكْمُ اِلَّا لِلّٰهِ ؕ— اَمَرَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِیَّاهُ ؕ— ذٰلِكَ الدِّیْنُ الْقَیِّمُ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟

நீங்களும் உங்கள் மூதாதைகளும் பெயர் சூட்டிய பெயர்களைத் தவிர அவனை அன்றி (வேறு எதையும்) நீங்கள் வணங்குவதில்லை. அல்லாஹ் இவற்றுக்கு எவ்வித ஆதாரத்தையும் இறக்கவில்லை. அதிகாரம் அல்லாஹ்விற்கே தவிர (வேறு எவருக்கும்) இல்லை. அவனைத் தவிர (மற்றவற்றை) நிச்சயமாக வணங்காதீர்கள் என்று அவன் கட்டளையிட்டான். இதுதான் நேரான மார்க்கம். எனினும், மக்களில் அதிகமானவர்கள் (இதை) அறிய மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
41 : 12

یٰصَاحِبَیِ السِّجْنِ اَمَّاۤ اَحَدُكُمَا فَیَسْقِیْ رَبَّهٗ خَمْرًا ۚ— وَاَمَّا الْاٰخَرُ فَیُصْلَبُ فَتَاْكُلُ الطَّیْرُ مِنْ رَّاْسِهٖ ؕ— قُضِیَ الْاَمْرُ الَّذِیْ فِیْهِ تَسْتَفْتِیٰنِ ۟ؕ

“என் இரு சிறைத் தோழர்களே!” ஆக, உங்களில் ஒருவன் தன் எஜமானனுக்கு மதுவை புகட்டுவான். ஆக, மற்றவன் கழுமரத்தில் அறையப்படுவான். அவனுடைய தலையில் பறவைகள் (கொத்தித்) தின்னும். நீங்கள் விளக்கம் கேட்டது விதிக்கப்பட்(டு விட்)டது. info
التفاسير:

external-link copy
42 : 12

وَقَالَ لِلَّذِیْ ظَنَّ اَنَّهٗ نَاجٍ مِّنْهُمَا اذْكُرْنِیْ عِنْدَ رَبِّكَ ؗ— فَاَنْسٰىهُ الشَّیْطٰنُ ذِكْرَ رَبِّهٖ فَلَبِثَ فِی السِّجْنِ بِضْعَ سِنِیْنَ ۟۠

அவ்விருவரில் நிச்சயமாக எவர் தப்பிப்பவர் என்று தான் எண்ணினாரோ அவரிடம், நீ உன் எஜமானனிடம் என்னைப் பற்றி கூறு! என்று கூறினார். (யூஸுஃப்) தன் இறைவனை நினைவு கூருவதை ஷைத்தான் அவருக்கு மறக்கடித்தான். ஆகவே, அவர் சிறையில் (மேலும்) சில ஆண்டுகள் தங்கினார். info
التفاسير:

external-link copy
43 : 12

وَقَالَ الْمَلِكُ اِنِّیْۤ اَرٰی سَبْعَ بَقَرٰتٍ سِمَانٍ یَّاْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَّسَبْعَ سُنْۢبُلٰتٍ خُضْرٍ وَّاُخَرَ یٰبِسٰتٍ ؕ— یٰۤاَیُّهَا الْمَلَاُ اَفْتُوْنِیْ فِیْ رُءْیَایَ اِنْ كُنْتُمْ لِلرُّءْیَا تَعْبُرُوْنَ ۟

(எகிப்தின்) அரசர் கூறினார்: “கொழுத்த ஏழு பசுக்களை, அவற்றை இளைத்த ஏழு பசுக்கள் புசிப்பதாகவும், பசுமையான ஏழு கதிர்களையும் காய்ந்த வேறு (கதிர்களையும்) நிச்சயமாக என் கனவில் கண்டேன். என் பிரமுகர்களே! நீங்கள் கனவுக்கு வியாக்கியானம் கூறுபவர்களாக இருந்தீர்களானால் என் கனவிற்கு எனக்கு விளக்கம் தாருங்கள்,” info
التفاسير: