Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Page Number:close

external-link copy
104 : 12

وَمَا تَسْـَٔلُهُمْ عَلَیْهِ مِنْ اَجْرٍ ؕ— اِنْ هُوَ اِلَّا ذِكْرٌ لِّلْعٰلَمِیْنَ ۟۠

இதற்காக நீர் அவர்களிடம் ஒரு கூலியையும் கேட்பதில்லை. இது அகிலத்தார்களுக்கு அறிவுரையே தவிர (வேறு) இல்லை. info
التفاسير:

external-link copy
105 : 12

وَكَاَیِّنْ مِّنْ اٰیَةٍ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ یَمُرُّوْنَ عَلَیْهَا وَهُمْ عَنْهَا مُعْرِضُوْنَ ۟

வானங்கள், பூமியில் எத்தனையோ அத்தாட்சிகள் இருக்கின்றன, அவர்களோ அவற்றை புறக்கணிப்பவர்களாகவே அவற்றின் அருகே (கடந்து) செல்கின்றனர். info
التفاسير:

external-link copy
106 : 12

وَمَا یُؤْمِنُ اَكْثَرُهُمْ بِاللّٰهِ اِلَّا وَهُمْ مُّشْرِكُوْنَ ۟

அவர்களில் அதிகமானவர்கள் அவர்கள் இணைவைப்பவர்களாக இருந்தே தவிர அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
107 : 12

اَفَاَمِنُوْۤا اَنْ تَاْتِیَهُمْ غَاشِیَةٌ مِّنْ عَذَابِ اللّٰهِ اَوْ تَاْتِیَهُمُ السَّاعَةُ بَغْتَةً وَّهُمْ لَا یَشْعُرُوْنَ ۟

அல்லாஹ்வின் வேதனையிலிருந்து சூழக்கூடியது அவர்களுக்கு வருவதை அல்லது அவர்கள் அறியாமல் இருக்க திடீரென முடிவு காலம் அவர்களுக்கு வருவதை அவர்கள் அச்சமற்று விட்டனரா? (சூழக்கூடியது: அனைத்தையும் அழிக்கக் கூடியது) info
التفاسير:

external-link copy
108 : 12

قُلْ هٰذِهٖ سَبِیْلِیْۤ اَدْعُوْۤا اِلَی اللّٰهِ ؔ۫— عَلٰی بَصِیْرَةٍ اَنَا وَمَنِ اتَّبَعَنِیْ ؕ— وَسُبْحٰنَ اللّٰهِ وَمَاۤ اَنَا مِنَ الْمُشْرِكِیْنَ ۟

(நபியே!) கூறுவீராக: “இது என் வழி. நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான அறிவின் மீது இருந்து கொண்டு அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறோம். அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். நான் இணைவைப்பவர்களில் இல்லை.” info
التفاسير:

external-link copy
109 : 12

وَمَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ اِلَّا رِجَالًا نُّوْحِیْۤ اِلَیْهِمْ مِّنْ اَهْلِ الْقُرٰی ؕ— اَفَلَمْ یَسِیْرُوْا فِی الْاَرْضِ فَیَنْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ— وَلَدَارُ الْاٰخِرَةِ خَیْرٌ لِّلَّذِیْنَ اتَّقَوْا ؕ— اَفَلَا تَعْقِلُوْنَ ۟

உமக்கு முன்னர் ஊர்வாசிகளில் ஆண்களைத் தவிர (பெண்களையோ வானவர்களையோ தூதர்களாக) நாம் அனுப்பவில்லை. நாம் அ(ந்த ஆட)வர்களுக்கு வஹ்யி அறிவிப்போம். (வேதத்தை மறுக்கும்) அவர்கள் பூமியில் (பயணம்) செல்லவில்லையா? (அப்படி சென்றால்) இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எப்படி இருந்தது? என்பதைப் பார்ப்பார்கள். மறுமையின் வீடுதான் (அல்லாஹ்வை) அஞ்சியவர்களுக்கு மிக மேலானது. நீங்கள் சிந்தித்துப் புரிய வேண்டாமா? info
التفاسير:

external-link copy
110 : 12

حَتّٰۤی اِذَا اسْتَیْـَٔسَ الرُّسُلُ وَظَنُّوْۤا اَنَّهُمْ قَدْ كُذِبُوْا جَآءَهُمْ نَصْرُنَا ۙ— فَنُجِّیَ مَنْ نَّشَآءُ ؕ— وَلَا یُرَدُّ بَاْسُنَا عَنِ الْقَوْمِ الْمُجْرِمِیْنَ ۟

இறுதியாக, (மக்கள் நம்பிக்கை கொள்வார்கள் என்பதிலிருந்து) நம் தூதர்கள் நிராசையடைய, நிச்சயமாக அவர்கள் (-தூதர்கள்) பொய்ப்பிக்கப்பட்டனர் என்று (மக்கள்) எண்ணியபோது, நம் உதவி அவர்களை (-தூதர்களை) வந்த(டைந்த)து. நாம் நாடுகின்றவர்கள் பாதுகாக்கப்பட்டனர். நம் தண்டனை பாவிகளான சமுதாயத்தை விட்டு (ஒரு போதும்) திருப்பப்படாது. info
التفاسير:

external-link copy
111 : 12

لَقَدْ كَانَ فِیْ قَصَصِهِمْ عِبْرَةٌ لِّاُولِی الْاَلْبَابِ ؕ— مَا كَانَ حَدِیْثًا یُّفْتَرٰی وَلٰكِنْ تَصْدِیْقَ الَّذِیْ بَیْنَ یَدَیْهِ وَتَفْصِیْلَ كُلِّ شَیْءٍ وَّهُدًی وَّرَحْمَةً لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟۠

அறிவுடையவர்களுக்கு இவர்களுடைய சரித்திரங்களில் ஒரு படிப்பினை திட்டவட்டமாக இருக்கிறது. (இது) புனையப்படுகின்ற ஒரு செய்தியாக இருக்கவில்லை. எனினும் தனக்கு முன்னுள்ளதை உண்மைப்படுத்துவதாகவும் எல்லாவற்றையும் விவரிப்பதாகவும் நேர்வழியாகவும் நம்பிக்கை கொள்கிற மக்களுக்கு (விசேஷமான) ஓர் அருளாகவும் இருக்கின்றது. info
التفاسير: