Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Page Number:close

external-link copy
79 : 12

قَالَ مَعَاذَ اللّٰهِ اَنْ نَّاْخُذَ اِلَّا مَنْ وَّجَدْنَا مَتَاعَنَا عِنْدَهٗۤ ۙ— اِنَّاۤ اِذًا لَّظٰلِمُوْنَ ۟۠

எவரிடம் நம் பொருளை கண்டோமோ அவரைத் தவிர (மற்றவரை) நாம் பிடிப்பதை விட்டு அல்லாஹ் (எங்களைப்) பாதுகாப்பானாக! அப்படி செய்தால் நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்கள்தான் என்று (யூஸுஃப்) கூறினார். info
التفاسير:

external-link copy
80 : 12

فَلَمَّا اسْتَیْـَٔسُوْا مِنْهُ خَلَصُوْا نَجِیًّا ؕ— قَالَ كَبِیْرُهُمْ اَلَمْ تَعْلَمُوْۤا اَنَّ اَبَاكُمْ قَدْ اَخَذَ عَلَیْكُمْ مَّوْثِقًا مِّنَ اللّٰهِ وَمِنْ قَبْلُ مَا فَرَّطْتُّمْ فِیْ یُوْسُفَ ۚ— فَلَنْ اَبْرَحَ الْاَرْضَ حَتّٰی یَاْذَنَ لِیْۤ اَبِیْۤ اَوْ یَحْكُمَ اللّٰهُ لِیْ ۚ— وَهُوَ خَیْرُ الْحٰكِمِیْنَ ۟

அவரிடம் அவர்கள் நம்பிக்கையிழந்தபோது, அவர்கள் ஆலோசித்தவர்களாக விலகினர். அவர்களில் பெரியவர் “திட்டமாக உங்கள் தந்தை உங்களிடம் அல்லாஹ்வின் (பெயரால்) ஓர் உறுதிமானத்தை வாங்கியதையும், முன்னர் நீங்கள் யூஸுஃப் விஷயத்தில் தவறிழைத்ததையும் நீங்கள் அறியவில்லையா? ஆகவே, என் தந்தை எனக்கு அனுமதியளிக்கின்ற வரை அல்லது அல்லாஹ் எனக்கு தீர்ப்பளிக்கின்ற வரை இந்த பூமியை விட்டு நான் நகர மாட்டேன்; அவன் தீர்ப்பளிப்பவர்களில் மிக மேலானவன்” என்று கூறினார். info
التفاسير:

external-link copy
81 : 12

اِرْجِعُوْۤا اِلٰۤی اَبِیْكُمْ فَقُوْلُوْا یٰۤاَبَانَاۤ اِنَّ ابْنَكَ سَرَقَ ۚ— وَمَا شَهِدْنَاۤ اِلَّا بِمَا عَلِمْنَا وَمَا كُنَّا لِلْغَیْبِ حٰفِظِیْنَ ۟

“நீங்கள் உங்கள் தந்தையிடம் திரும்பிச் சென்று, எங்கள் தந்தையே! நிச்சயமாக உம் மகன் திருடினான். நாங்கள் அறிந்ததைக் கொண்டே தவிர நாங்கள் சாட்சி பகரவில்லை. மறைவானவற்றை பாதுகாப்பவர்களாக (அறிந்தவர்களாக) நாங்கள் இருக்கவில்லை” என்று கூறுங்கள். info
التفاسير:

external-link copy
82 : 12

وَسْـَٔلِ الْقَرْیَةَ الَّتِیْ كُنَّا فِیْهَا وَالْعِیْرَ الَّتِیْۤ اَقْبَلْنَا فِیْهَا ؕ— وَاِنَّا لَصٰدِقُوْنَ ۟

நாங்கள் இருந்த ஊரையும், நாங்கள் வந்த பயணக் கூட்டத்தையும் நீர் கேட்பீராக. நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்களே!. info
التفاسير:

external-link copy
83 : 12

قَالَ بَلْ سَوَّلَتْ لَكُمْ اَنْفُسُكُمْ اَمْرًا ؕ— فَصَبْرٌ جَمِیْلٌ ؕ— عَسَی اللّٰهُ اَنْ یَّاْتِیَنِیْ بِهِمْ جَمِیْعًا ؕ— اِنَّهٗ هُوَ الْعَلِیْمُ الْحَكِیْمُ ۟

“மாறாக! உங்கள் ஆன்மாக்கள் ஒரு காரியத்தை அலங்கரித்தன. ஆகவே, அழகிய பொறுமை(தான் நல்லது). அல்லாஹ் அவர்கள் அனைவரையும் என்னிடம் கொண்டு வரக்கூடும். நிச்சயமாக அவன்தான் நன்கறிந்தவன், மகா ஞானவான்” என்று கூறினார். info
التفاسير:

external-link copy
84 : 12

وَتَوَلّٰی عَنْهُمْ وَقَالَ یٰۤاَسَفٰی عَلٰی یُوْسُفَ وَابْیَضَّتْ عَیْنٰهُ مِنَ الْحُزْنِ فَهُوَ كَظِیْمٌ ۟

அவர்களை விட்டு விலகி (திரும்பிச் சென்று), “யூஸுஃப் மீது என் துயரமே!” என்று கூறினார். அவரது இரு கண்களும் கவலையால் (அழுதழுது) வெளுத்தன. அவர் (தன் கோபத்தையும் கவலையையும்) அடக்கிக் கொள்பவர். info
التفاسير:

external-link copy
85 : 12

قَالُوْا تَاللّٰهِ تَفْتَؤُا تَذْكُرُ یُوْسُفَ حَتّٰی تَكُوْنَ حَرَضًا اَوْ تَكُوْنَ مِنَ الْهٰلِكِیْنَ ۟

“அல்லாஹ் மீது சத்தியமாக! நீர் அழிவை நெருங்கியவராக ஆகும் வரை அல்லது இறந்தவர்களில் ஆகும் வரை யூஸுஃபை நினைவு கூர்ந்து கொண்டே இருப்பீர்” என்று (கடிந்து) கூறினர். info
التفاسير:

external-link copy
86 : 12

قَالَ اِنَّمَاۤ اَشْكُوْا بَثِّیْ وَحُزْنِیْۤ اِلَی اللّٰهِ وَاَعْلَمُ مِنَ اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ۟

“என் துக்கத்தையும் என் கவலையையும் நான் முறையிடுவதெல்லாம் அல்லாஹ்விடம்தான். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடம் நான் அறிவேன்” என்று கூறினார். info
التفاسير: