Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Page Number:close

external-link copy
87 : 12

یٰبَنِیَّ اذْهَبُوْا فَتَحَسَّسُوْا مِنْ یُّوْسُفَ وَاَخِیْهِ وَلَا تَایْـَٔسُوْا مِنْ رَّوْحِ اللّٰهِ ؕ— اِنَّهٗ لَا یَایْـَٔسُ مِنْ رَّوْحِ اللّٰهِ اِلَّا الْقَوْمُ الْكٰفِرُوْنَ ۟

என் பிள்ளைகளே! செல்லுங்கள். யூஸுஃபையும், அவரது சகோதரரையும் தேடுங்கள். அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்; நிச்சயமாக நிராகரிக்கின்ற மக்களைத் தவிர (மற்றவர்கள்) அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்” என்று கூறினார். info
التفاسير:

external-link copy
88 : 12

فَلَمَّا دَخَلُوْا عَلَیْهِ قَالُوْا یٰۤاَیُّهَا الْعَزِیْزُ مَسَّنَا وَاَهْلَنَا الضُّرُّ وَجِئْنَا بِبِضَاعَةٍ مُّزْجٰىةٍ فَاَوْفِ لَنَا الْكَیْلَ وَتَصَدَّقْ عَلَیْنَا ؕ— اِنَّ اللّٰهَ یَجْزِی الْمُتَصَدِّقِیْنَ ۟

அவர்கள் அவரிடம் (யூஸுஃபிடம்) நுழைந்து, “அதிபரே! எங்களுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் வறுமை ஏற்பட்டது. ஓர் அற்பப் பொருளை (கிரயமாக இங்கே) நாங்கள் கொண்டு வந்தோம். (அதை ஏற்று) எங்களுக்கு அளவையை முழுமைப்படுத்துவீராக! எங்கள் மீது தானம் புரிவீராக! நிச்சயமாக அல்லாஹ் தர்மசாலிகளுக்கு (நற்)கூலியளிப்பான்” என்று கூறினர். info
التفاسير:

external-link copy
89 : 12

قَالَ هَلْ عَلِمْتُمْ مَّا فَعَلْتُمْ بِیُوْسُفَ وَاَخِیْهِ اِذْ اَنْتُمْ جٰهِلُوْنَ ۟

“நீங்கள் அறியாதவர்களாக இருந்தபோது யூஸுஃபு, இன்னும் அவருடைய சகோதரருக்கு என்ன செய்தீர்கள் என்பதை நீங்கள் அறிந்தீர்களா?” என்று கூறினார். info
التفاسير:

external-link copy
90 : 12

قَالُوْۤا ءَاِنَّكَ لَاَنْتَ یُوْسُفُ ؕ— قَالَ اَنَا یُوْسُفُ وَهٰذَاۤ اَخِیْ ؗ— قَدْ مَنَّ اللّٰهُ عَلَیْنَا ؕ— اِنَّهٗ مَنْ یَّتَّقِ وَیَصْبِرْ فَاِنَّ اللّٰهَ لَا یُضِیْعُ اَجْرَ الْمُحْسِنِیْنَ ۟

“நிச்சயமாக நீர்தான் யூஸுஃபா?” என்று கூறினர். “நான் யூஸுஃப்! இவர் என் சகோதரர். திட்டமாக அல்லாஹ் எங்கள் மீது அருள்புரிந்தான். நிச்சயமாக எவர் (அல்லாஹ்வை) அஞ்சி, (சோதனையில்) பொறு(த்திரு)ப்பாரோ,நிச்சயமாக அல்லாஹ் நல்லறம் புரிபவர்களின் கூலியை வீணாக்க மாட்டான்” என்று கூறினார். info
التفاسير:

external-link copy
91 : 12

قَالُوْا تَاللّٰهِ لَقَدْ اٰثَرَكَ اللّٰهُ عَلَیْنَا وَاِنْ كُنَّا لَخٰطِـِٕیْنَ ۟

“அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ் எங்களைவிட உம்மை மேன்மைப் படுத்திவிட்டான். நிச்சயமாக நாங்கள் தவறிழைப்பவர்களாகத்தான் இருந்தோம்”என்று கூறினர். info
التفاسير:

external-link copy
92 : 12

قَالَ لَا تَثْرِیْبَ عَلَیْكُمُ الْیَوْمَ ؕ— یَغْفِرُ اللّٰهُ لَكُمْ ؗ— وَهُوَ اَرْحَمُ الرّٰحِمِیْنَ ۟

(அதற்கவர்) “இன்றைய தினம் உங்கள் மீது அறவே பழிப்பில்லை. அல்லாஹ் உங்களை மன்னிப்பான்! அவன் கருணையாளர்களில் மகா கருணையாளன்”என்று கூறினார். info
التفاسير:

external-link copy
93 : 12

اِذْهَبُوْا بِقَمِیْصِیْ هٰذَا فَاَلْقُوْهُ عَلٰی وَجْهِ اَبِیْ یَاْتِ بَصِیْرًا ۚ— وَاْتُوْنِیْ بِاَهْلِكُمْ اَجْمَعِیْنَ ۟۠

“நீங்கள் எனது இந்த சட்டையைக் கொண்டு சென்று, என் தந்தையின் முகத்தில் அதைப் போடுங்கள். அவர் பார்வையுடையவராக வருவார். நீங்கள் உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் என்னிடம் கொண்டு வாருங்கள்.” info
التفاسير:

external-link copy
94 : 12

وَلَمَّا فَصَلَتِ الْعِیْرُ قَالَ اَبُوْهُمْ اِنِّیْ لَاَجِدُ رِیْحَ یُوْسُفَ لَوْلَاۤ اَنْ تُفَنِّدُوْنِ ۟

(அவர்களின்) பயணக் கூட்டம் (எகிப்திலிருந்து) பிரியவே, அவர்களின் தந்தை (“இதோ) யூஸுஃபுடைய வாடையை நிச்சயமாக நான் பெறுகிறேன்; என்னை நீங்கள் அறிவீனனாக்காமல் (பழிக்காமல்) இருக்கவேண்டுமே!” என்று கூறினார். info
التفاسير:

external-link copy
95 : 12

قَالُوْا تَاللّٰهِ اِنَّكَ لَفِیْ ضَلٰلِكَ الْقَدِیْمِ ۟

“அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயமாக நீர் உம் பழைய தவறில்தான் (அப்படியே) இருக்கிறீர்” என்று கூறினர். info
التفاسير: