Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም ምዕራፍ: አል-በቀራህ   አንቀጽ:
اَوَلَا یَعْلَمُوْنَ اَنَّ اللّٰهَ یَعْلَمُ مَا یُسِرُّوْنَ وَمَا یُعْلِنُوْنَ ۟
2.77. அவர்கள் இரகசியமாகவும், வெளிப்படையாகவும் சொல்வதையும், செய்வதையும் அல்லாஹ் அறிவான். மேலும் அவற்றை தன் அடியார்களுக்கு வெளிப்படுத்தி தம்மை இழிவுபடுத்தியே தீருவான் என்பதை இந்த யூதா்கள் அறியாததைப் போன்று இந்தளவு கேடுகெட்ட விதமாக நடந்துகொள்கின்றனர்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَمِنْهُمْ اُمِّیُّوْنَ لَا یَعْلَمُوْنَ الْكِتٰبَ اِلَّاۤ اَمَانِیَّ وَاِنْ هُمْ اِلَّا یَظُنُّوْنَ ۟
2.78. தவ்ராத்தை வாசிக்க மாத்திரமே தெரிந்த ஒரு பிரிவினரும் யூதா்களில் உள்ளனர். அதில் கூறப்பட்டுள்ள எதையும் அவர்கள் அறிய மாட்டார்கள். அவர்களின் பெரியோர்களிடமிருந்து பெற்ற பொய்களைத்தான் அல்லாஹ் இறக்கிய தவ்ராத் என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
فَوَیْلٌ لِّلَّذِیْنَ یَكْتُبُوْنَ الْكِتٰبَ بِاَیْدِیْهِمْ ۗ— ثُمَّ یَقُوْلُوْنَ هٰذَا مِنْ عِنْدِ اللّٰهِ لِیَشْتَرُوْا بِهٖ ثَمَنًا قَلِیْلًا ؕ— فَوَیْلٌ لَّهُمْ مِّمَّا كَتَبَتْ اَیْدِیْهِمْ وَوَیْلٌ لَّهُمْ مِّمَّا یَكْسِبُوْنَ ۟
2.79. தங்களின் கைகளால் ஒரு நூலை எழுதிக்கொண்டு, பிறகு அபாண்டமாக, இது அல்லாஹ்விடமிருந்து வந்த வேதமாகும் என்று கூறும் இவர்களுக்கு கடுமையான வேதனையும், அழிவும் காத்திருக்கிறது. சத்தியம் மற்றும் நேர்வழியைப் பின்பற்றுவதற்குப் பதிலாக இவ்வுலகில் பணம், பதவி போன்ற அற்ப ஆதாயம் பெறுவதற்காக இவ்வாறு அவர்கள் நடந்துகொள்கின்றனர். தங்களின் கைகளால் எழுதிய நூலை அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த வேதம் என்று அல்லாஹ்வின் மீதே பொய் கூறியதற்கும், அதன் மூலம் அவர்கள் சம்பாதித்த பணம், பதவிகளின் காரணமாகவும் அவர்களுக்கு அழிவும் கடுமையான வேதனையும் உண்டு.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَقَالُوْا لَنْ تَمَسَّنَا النَّارُ اِلَّاۤ اَیَّامًا مَّعْدُوْدَةً ؕ— قُلْ اَتَّخَذْتُمْ عِنْدَ اللّٰهِ عَهْدًا فَلَنْ یُّخْلِفَ اللّٰهُ عَهْدَهٗۤ اَمْ تَقُوْلُوْنَ عَلَی اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ۟
2.80. சில நாட்கள் மாத்திரமே நரகில் நாம் நுழைந்து நரக நெருப்பு எம்மைத் தீண்டும் என அவர்கள் அபாண்டமாகவும் ஆணவத்துடனும் கூறினார்கள், தூதரே! நீர் அவர்களிடம் கேட்பீராக: இவ்வாறு நீங்கள் அல்லாஹ்விடம் வாக்குறுதி பெற்றுள்ளீர்களா? அப்படியென்றால் அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறாக செயல்பட மாட்டான். அல்லது அல்லாஹ்வின்மீது நீங்கள் அறியாத விஷயத்தை அபாண்டமாகவும் பொய்யாகவும் இட்டுக்கட்டி கூறுகிறீர்களா?.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
بَلٰی مَنْ كَسَبَ سَیِّئَةً وَّاَحَاطَتْ بِهٖ خَطِیْٓـَٔتُهٗ فَاُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ— هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
2.81. இவர்கள் நினைப்பது போலல்ல. யார் நிராகரித்து பாவங்கள் அவரை நாலாபுறத்தாலும் சூழ்ந்துகொள்கிறதோ அல்லாஹ் அவரை தண்டித்தே ஆகுவான். அவன் அவர்களை நரகத்தில் நிரந்தரமாகக் கிடத்தி தண்டனை அளித்திடுவான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَنَّةِ ۚ— هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟۠
2.82 அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிந்தவர்களுக்கு அல்லாஹ்விடம் கிடைக்கும் கூலி சுவனத்தில் நுழைந்து அதில் நிரந்தரமாக தங்கியிருப்பதாகும்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَاِذْ اَخَذْنَا مِیْثَاقَ بَنِیْۤ اِسْرَآءِیْلَ لَا تَعْبُدُوْنَ اِلَّا اللّٰهَ ۫— وَبِالْوَالِدَیْنِ اِحْسَانًا وَّذِی الْقُرْبٰی وَالْیَتٰمٰی وَالْمَسٰكِیْنِ وَقُوْلُوْا لِلنَّاسِ حُسْنًا وَّاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ ؕ— ثُمَّ تَوَلَّیْتُمْ اِلَّا قَلِیْلًا مِّنْكُمْ وَاَنْتُمْ مُّعْرِضُوْنَ ۟
2.83. இஸ்ராயீலின் மக்களே! நீங்கள் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும், அவனைத்தவிர வேறு யாரையும் வணங்கக்கூடாது; தாய்தந்தையர், உறவினர், அநாதைகள், ஏழைகள், தேவையுடையவர்கள் ஆகியோருடன் நல்லமுறையில் நடந்துகொள்ள வேண்டும்; நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும்போது மக்களிடம் கடினமான வார்த்தைகைளைப் பிரயோகிக்காமல் நல்ல வார்த்தைகளைக்கொண்டு அவர்களோடு பேசுங்கள்; நான் ஏவியமுறைப்படி தொழுகையைப் பரிபூரணமாக நிறைவேற்றுங்கள்; ஸகாத்தை உரியவர்களுக்கு முழு மனதுடன் அளித்துவிடுங்கள் என்று நாம் உங்களிடம் உறுதியான வாக்குறுதி வாங்கியதை நினைவுகூருங்கள். ஆனால் அதன் பின்னரும் நீங்கள் அளித்த வாக்குறுதியை மீறி பின்வாங்கிச் சென்றீர்கள். உங்களில் யாரை அல்லாஹ் பாதுகாத்தானோ அவர்களைத் தவிர. அவர்கள் அல்லாஹ்விடம் செய்த உடன்படிக்கையை நிறைவேற்றினார்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• بعض أهل الكتاب يدّعي العلم بما أنزل الله، والحقيقة أن لا علم له بما أنزل الله، وإنما هو الوهم والجهل.
1. வேதம் வழங்கப்பட்டவர்களில் சிலர் அல்லாஹ் இறக்கிய ஞானம் தங்களிடம் இருப்பதாகக் கூறுகிறார்கள். உண்மையில் அவர்களிடம் அல்லாஹ் இறக்கிய எந்த ஞானமும் இல்லை. அது அறியாமையும் யூகம் மாத்திரமே.

• من أعظم الناس إثمًا من يكذب على الله تعالى ورسله ؛ فينسب إليهم ما لم يكن منهم.
2. அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும், அவர்கள் கூறாத விஷயத்தை பொய்யாக புனைந்து கூறுபவரே மிகப் பெரிய பாவியாவார்.

• مع عظم المواثيق التي أخذها الله تعالى على اليهود وشدة التأكيد عليها، لم يزدهم ذلك إلا إعراضًا عنها ورفضًا لها.
3. அல்லாஹ் யூதர்களிடம் மிகவும் வலியுறுத்தி முக்கியமான உறுதிமொழிகளை எடுத்திருந்தும் அவர்கள் அவற்றை மென்மேலும் புறக்கணிப்பவர்களாகவே இருந்தனர்.

 
የይዘት ትርጉም ምዕራፍ: አል-በቀራህ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት