Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም ምዕራፍ: አል-በቀራህ   አንቀጽ:
وَاذْكُرُوا اللّٰهَ فِیْۤ اَیَّامٍ مَّعْدُوْدٰتٍ ؕ— فَمَنْ تَعَجَّلَ فِیْ یَوْمَیْنِ فَلَاۤ اِثْمَ عَلَیْهِ ۚ— وَمَنْ تَاَخَّرَ فَلَاۤ اِثْمَ عَلَیْهِ ۙ— لِمَنِ اتَّقٰی ؕ— وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْۤا اَنَّكُمْ اِلَیْهِ تُحْشَرُوْنَ ۟
2.203. துல்ஹஜ் பதினொன்று, பன்னிரண்டு, பதிமூன்று ஆகிய நாட்களில் "அல்லாஹு அக்பர், லாஇலாஹ இல்லல்லாஹ்" ஆகிய திக்ருகளைக் கொண்டு அல்லாஹ்வை நினைவுகூருங்கள். யாரேனும் அவசரப்பட்டு பன்னிரண்டாவது நாளே கல்லெறிந்த பிறகு மினாவிலிருந்து வெளியேறிவிட்டால் அவர்மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் அவரைவிட்டும் சட்டத்தை தளர்தியுள்ளான். எவர் பதிமூன்றாம் நாள்வரை தாமதித்துச் சென்றாரோ அவர்மீதும் எந்தக் குற்றமும் இல்லை. அவர் பரிபூரணமானதைச் செய்துள்ளதோடு நபி (ஸல்) அவர்களது செயலையும் பின்பற்றியவராவார். இவையனைத்தும் ஹஜ்ஜுடைய கிரியைகளில் அல்லாஹ்வை அஞ்சி அவன் கட்டளையிட்டபடி நிறைவேற்றியவர்களுக்குத்தான். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். அவன் பக்கமே நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும், அவன் உங்களின் செயல்களுக்கேற்ப உங்களுக்கு கூலி வழங்குவான் என்பதை உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَمِنَ النَّاسِ مَنْ یُّعْجِبُكَ قَوْلُهٗ فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَیُشْهِدُ اللّٰهَ عَلٰی مَا فِیْ قَلْبِهٖ ۙ— وَهُوَ اَلَدُّ الْخِصَامِ ۟
2.204. தூதரே! மனிதர்களில் சில நயவஞ்சகர்கள் உள்ளனர். இவ்வுலகில் அவர்களின் பேச்சு உம்மை ஈர்த்துவிடும். அவர்கள் பேசும் தொனியைப் பார்த்து "அவர்கள் உண்மையாளர்கள், விசுவாசமானவர்கள்" என்று நீர் எண்ணலாம். அவர்கள் இதன்மூலம் தங்களையும், தங்கள் செல்வத்தையும் பாதுகாத்துக் கொள்ளவே விரும்புகிறார்கள். தங்களின் உள்ளத்தில் ஈமானும் நன்மையும் உள்ளதாகக்கூறி அல்லாஹ்வையே அதற்கு சாட்சியாக்குவார்கள். அவர்கள் முஸ்லிம்களுக்கு கடும் பகைவர்களாவர்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَاِذَا تَوَلّٰی سَعٰی فِی الْاَرْضِ لِیُفْسِدَ فِیْهَا وَیُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ ؕ— وَاللّٰهُ لَا یُحِبُّ الْفَسَادَ ۟
2.205. அவர்கள் உம்மை விட்டுச் சென்றுவிட்டால் பாவங்களைக் கொண்டு உலகில் குழப்பம் விளைவிக்க முயற்சி செய்கிறார்கள். விளைநிலங்களை நாசப்படுத்தி, கால்நடைகளைக் கொலை செய்கிறார்கள். குழப்பத்தையும் குழப்பவாதிகளையும் அல்லாஹ் ஒருபோதும் விரும்ப மாட்டான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَاِذَا قِیْلَ لَهُ اتَّقِ اللّٰهَ اَخَذَتْهُ الْعِزَّةُ بِالْاِثْمِ فَحَسْبُهٗ جَهَنَّمُ ؕ— وَلَبِئْسَ الْمِهَادُ ۟
2.206. "அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணி அவனுக்குப் பயந்து கொள்ளுங்கள்"என்று அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டால், அகந்தையும் ஆணவமும் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளவிடாமல் அவனைத் தடுக்கின்றன. பாவத்திலே அவன் தொடர்ந்திருக்கிறான். நரகத்தில் நுழைவதே அவர்களுக்குப் போதுமான தண்டனையாகும். அது மிகவும் மோசமான தங்குமிடமாகும்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَمِنَ النَّاسِ مَنْ یَّشْرِیْ نَفْسَهُ ابْتِغَآءَ مَرْضَاتِ اللّٰهِ ؕ— وَاللّٰهُ رَءُوْفٌۢ بِالْعِبَادِ ۟
2.207. மனிதர்களில் நம்பிக்கைகொண்ட சிலர் தனது இறைவனுக்குக் கட்டுப்பட்டு, அவனுடைய பாதையில் ஜிஹாது செய்தவாறு, அவனுடைய திருப்தியைத் தேடியவாறு தம் உயிரை வழங்குகின்றார்கள். அல்லாஹ் தன் அடியார்களின் விஷயத்தில் மிகுந்த பரிவுடையவனாகவும் கருணையாளனாகவும் இருக்கின்றான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا ادْخُلُوْا فِی السِّلْمِ كَآفَّةً ۪— وَلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّیْطٰنِ ؕ— اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِیْنٌ ۟
2.208. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள். வேதத்தின் சில பகுதிகளை ஏற்றுக்கொண்டு சில பகுதிகளை நிராகரித்த வேதக்காரர்களைப்போன்று அதில் எதையும் விட்டுவிடாதீர்கள். ஷைத்தானின் வழிகளைப் பின்பற்றாதீர்கள். ஏனெனில் அவன் உங்களுக்கு வெளிப்படையான எதிரியாவான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
فَاِنْ زَلَلْتُمْ مِّنْ بَعْدِ مَا جَآءَتْكُمُ الْبَیِّنٰتُ فَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ ۟
2.209. சந்தேகமற்ற, தெளிவான சான்றுகள் உங்களிடம் வந்தபிறகும் நீங்கள் சத்தியத்தை விட்டு சறுகிவிட்டால் அறிந்துகொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் தனது ஆற்றலில் யாவற்றையும் மிகைத்தவன்; தனது திட்டமிடலிலும் சட்டமியற்றுவதிலும் ஞானம்மிக்கவன். எனவே அவனையே அஞ்சுங்கள், கண்ணியப்படுத்துங்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
هَلْ یَنْظُرُوْنَ اِلَّاۤ اَنْ یَّاْتِیَهُمُ اللّٰهُ فِیْ ظُلَلٍ مِّنَ الْغَمَامِ وَالْمَلٰٓىِٕكَةُ وَقُضِیَ الْاَمْرُ ؕ— وَاِلَی اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ ۟۠
2.210. சத்தியப் பாதையை விட்டுவிட்டு ஷைத்தானின் வழிகளைப் பின்பற்றும் இவர்கள், மறுமைநாளில் அல்லாஹ் தன் கண்ணியத்திற்கேற்றபடி மேகத்தின் நிழல்களில் அவர்களிடையே தீர்ப்பு அளிப்பதற்காக வருவதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அப்போது வானவர்கள் எல்லா புறங்களிலிருந்தும் அவர்களைச் சூழ்ந்துவிடுவார்கள். அப்போது அல்லாஹ்வின் கட்டளை அவர்களிடையே நிறைவேற்றப்படும். படைப்புகளின் விஷயங்கள் அல்லாஹ்வின் பக்கமே திரும்புகின்றன.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• التقوى حقيقة لا تكون بكثرة الأعمال فقط، وإنما بمتابعة هدي الشريعة والالتزام بها.
1. ‘தக்வா’ அதிகமான செயல்பாடுகளால் மட்டும் உண்டாகக்கூடிய ஒன்றல்ல. அது மார்க்க போதனைகளைப் பின்பற்றி, அவற்றைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதால் ஏற்படும் ஒன்றாகும்.

• الحكم على الناس لا يكون بمجرد أشكالهم وأقوالهم، بل بحقيقة أفعالهم الدالة على ما أخفته صدورهم.
2. வெளிப்படையான தோற்றங்களைக் கொண்டோ வார்த்தைகளைக் கொண்டோ மாத்திரம் மனிதர்களை எடைபோடமுடியாது. மாறாக உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பவற்றைக் குறிக்கும் செயல்களைக் கொண்டே அறியப்படுவார்கள்.

• الإفساد في الأرض بكل صوره من صفات المتكبرين التي تلازمهم، والله تعالى لا يحب الفساد وأهله.
3. உலகில் விளைவிக்கப்படும் அனைத்துவிதமான குழப்பங்களும் கர்வம் கொண்டோரின் நிரந்தர பண்புகளாகும். குழப்பத்தையும் குழப்பம் விளைவிப்போரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.

• لا يكون المرء مسلمًا حقيقة لله تعالى حتى يُسَلِّم لهذا الدين كله، ويقبله ظاهرًا وباطنًا.
4. இந்த மார்க்கத்தின் வெளிப்படையான, அந்தரங்கமான எல்லா விஷயங்களையும் ஏற்றுக்கொண்டு அதற்கு முழுமையாகக் கட்டுப்படும்வரை எவரும் உண்மையான முஸ்லிமாகிவிட முடியாது.

 
የይዘት ትርጉም ምዕራፍ: አል-በቀራህ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት