Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም ምዕራፍ: አል-በቀራህ   አንቀጽ:
مَا نَنْسَخْ مِنْ اٰیَةٍ اَوْ نُنْسِهَا نَاْتِ بِخَیْرٍ مِّنْهَاۤ اَوْ مِثْلِهَا ؕ— اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
2.106. அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்: குர்ஆனிலிருந்து ஒரு வசனத்தின் சட்டத்தை அல்லாஹ் நீக்கினால் அல்லது அதன் வார்த்தையை நீக்கி மக்கள் அதனை மறந்தால் அதைவிட பயனுள்ள ஒன்றை அல்லது அதைப்போன்ற ஒன்றை உடனடியாகவோ தாமதமாகவோ அவன் கொண்டுவருவான். இது அல்லாஹ்வின் அறிவு, ஞானத்தைக் கொண்டே நடைபெறக்கூடியதாகும். தூதரே! அல்லாஹ் ஒவ்வொரு பொருளின்மீதும் பேராற்றலுடையவன். அவன் தான் நாடியதைச் செய்கிறான் என்பதை நீர் நன்கறிவீர்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— وَمَا لَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ وَّلِیٍّ وَّلَا نَصِیْرٍ ۟
2.107. அல்லாஹ்தான் வானங்கள் மற்றும் பூமியின் அரசன். அவன் தான் நாடியதை தன் அடியார்களுக்கு கட்டளையாக இடுகின்றான்; தான் நாடியவற்றை விட்டும் அவர்களைத் தடுக்கிறான்; மார்க்கத்தின் தான் நாடியதை நிலைத்திருக்கச் செய்கிறான்; தான் நாடியதை நீக்கிவிடுகிறான். அல்லாஹ்வைத்தவிர உங்களின் விஷயங்களுக்குப் பொறுப்பேற்பக்கூடியவர் வேறு யாரும் இல்லை. அவனைத்தவிர உங்களுக்கு தீங்கைத் தடுக்கும் வேறு உதவியாளனும் இல்லை. அவனே அவை எல்லாவற்றிற்கும் பொறுப்பாளன், அவற்றின் மீது ஆற்றல்மிக்கவன் என்பதையும் தூதரே நீர் அறிவீர்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
اَمْ تُرِیْدُوْنَ اَنْ تَسْـَٔلُوْا رَسُوْلَكُمْ كَمَا سُىِٕلَ مُوْسٰی مِنْ قَبْلُ ؕ— وَمَنْ یَّتَبَدَّلِ الْكُفْرَ بِالْاِیْمَانِ فَقَدْ ضَلَّ سَوَآءَ السَّبِیْلِ ۟
2.108. அல்லாஹ்வின்மீது நம்பிக்கை கொண்டவர்களே, நீங்கள் உங்கள் தூதரிடம் இதற்கு முன்னர் மூசாவின் சமூகம் கேட்டதுபோன்று ஆட்சேபிக்கும் தொனியில் கேள்வி கேட்காதீர்கள். “அவர்கள் தங்கள் தூதரிடம் ‘அல்லாஹ்வை எங்களுக்கு வெளிப்படையாகக் காட்டு’ என்று கேட்டார்கள். (4:153) எவர் ஈமானை நிராகரிப்பாக மாற்றிக் கொண்டாரோ அவர் நேரான வழியை விட்டும் தவறிவிட்டார்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَدَّ كَثِیْرٌ مِّنْ اَهْلِ الْكِتٰبِ لَوْ یَرُدُّوْنَكُمْ مِّنْ بَعْدِ اِیْمَانِكُمْ كُفَّارًا ۖۚ— حَسَدًا مِّنْ عِنْدِ اَنْفُسِهِمْ مِّنْ بَعْدِ مَا تَبَیَّنَ لَهُمُ الْحَقُّ ۚ— فَاعْفُوْا وَاصْفَحُوْا حَتّٰی یَاْتِیَ اللّٰهُ بِاَمْرِهٖ ؕ— اِنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
2.109. வேதக்காரர்களில் பெரும்பாலோர் அவர்களுக்குள் இருக்கும் பொறாமையினால், நீங்கள் முன்னர் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்ததுபோன்று ஈமான் கொண்டபிறகும் நிராகரிப்பாளர்களாகி விட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்தத் தூதர் கொண்டு வந்தது அல்லாஹ்விடமிருந்துள்ள உண்மையாகும் என்பதை அறிந்தபிறகே அவர்கள் இவ்வாறு ஆசைகொள்கிறார்கள். அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டவர்களே, அல்லாஹ் அவர்கள் விஷயத்தில் தீர்ப்பளிக்கும்வரை, அவர்களின் செற்பாடுகளை மன்னித்துவிடுங்கள். அவர்களின் அறியாமை தீய எண்ணம் என்பவற்றைப் பொருட்படுத்தாதீர்கள். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின்மீதும் பேராற்றலுடையவன். அவர்களால் அவனை வெல்லமுடியாது. அல்லாஹ்வின் தீர்ப்பு வந்துவிட்டது, எனவே அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது ஜிஸ்யாவை அளித்துவிட வேண்டும் அல்லது போரிட வேண்டும்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ ؕ— وَمَا تُقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ مِّنْ خَیْرٍ تَجِدُوْهُ عِنْدَ اللّٰهِ ؕ— اِنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
2.110. தொழுகையை அதன் நிபந்தனைகளோடும், கடமைகளோடும், சுன்னத்துகளோடும் முழுமையாக நிறைவேற்றுங்கள். உங்கள் செல்வங்களிலிருந்து தகுதியானவர்களுக்கு ஸகாத்தை வழங்குங்கள். உங்களது வாழ்வில் நீங்கள் நற்செயல்கள் செய்து இறப்பதற்கு முன்னால் உங்களின் சேமிப்புக்காக முற்படுத்தி அனுப்பி வைத்தவைகளுக்கான கூலியை மறுமையில் உங்கள் இறைவனிடம் பெறுவீர்கள். அதனடிப்படையில் அவன் உங்களுக்கு கூலி வழங்குவான். நீங்கள் செய்கின்ற செயல்கள் அனைத்தையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான். அதனால் ஒவ்வொருவருக்கும் அவரது செயல்களுக்கேற்ப கூலி வழங்குவான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَقَالُوْا لَنْ یَّدْخُلَ الْجَنَّةَ اِلَّا مَنْ كَانَ هُوْدًا اَوْ نَصٰرٰی ؕ— تِلْكَ اَمَانِیُّهُمْ ؕ— قُلْ هَاتُوْا بُرْهَانَكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
2.111. யூதர்கள் மற்றும் கிருஸ்தவர்களில் உள்ள ஒவ்வொரு பிரிவினரும், சொர்க்கம் தங்களுக்கு மட்டுமே உரித்தானது என்று கூறுகிறார்கள். யூதர்கள் மட்டுமே சொர்க்கத்தில் நுழைவார்கள் என்று யூதர்கள் கூறுகிறார்கள். கிருஸ்தவர்கள் மட்டுமே சொர்க்கத்தில் நுழைவார்கள் என்று கிருஸ்தவர்கள் கூறுகிறார்கள். இவை அவர்களின் தவறான ஆசைகளும் ஊகங்களே. தூதரே, நீர் அவர்களிடம் “உங்களின் வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கான ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்.” எனக் கேட்பீராக.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
بَلٰی ۗ— مَنْ اَسْلَمَ وَجْهَهٗ لِلّٰهِ وَهُوَ مُحْسِنٌ فَلَهٗۤ اَجْرُهٗ عِنْدَ رَبِّهٖ ۪— وَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟۠
2.112. அல்லாஹ்வுக்காக வேண்டி என்ற உளத்தூய்மையுடன் அவனுடைய தூதர் கொண்டு வந்துள்ளதைப் பின்பற்றி தனது வணக்கத்தை சீரான முறையில் செய்பவர்கள்தாம் சொர்க்கம் செல்வார்கள். இத்தகைய மக்கள் எந்த கூட்டத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரியே. அவர்களின் இறைவன் அவர்களுக்கான கூலியை வழங்கிடுவான். மறுமையில் அவர்கள் அச்சம்கொள்ள மாட்டார்கள்; உலகில் இழந்தவற்றிற்காகவும் கவலைகொள்ள மாட்டார்கள். இத்தகைய பண்புகள் முஹம்மது நபியின் வருகைக்குப்பின் முஸ்லிம்களிடம் மாத்திரமே காணப்படும்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• أن الأمر كله لله، فيبدل ما يشاء من أحكامه وشرائعه، ويبقي ما يشاء منها، وكل ذلك بعلمه وحكمته.
1. அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வின் வசமே உள்ளது. அவன் தன்னுடைய மார்க்கத்தில் தான் விரும்பியவற்றை மாற்றுகிறான், தான் விரும்பியவற்றை நிலைத்திருக்கச் செய்கிறான். அனைத்தும் அவனுடைய அறிவு மற்றும் ஞானத்தின் பிரகாரமே நடக்கின்றன.

• حَسَدُ كثيرٍ من أهل الكتاب هذه الأمة، لما خصَّها الله من الإيمان واتباع الرسول، حتى تمنوا رجوعها إلى الكفر كما كانت.
2. ஈமானைக் கொண்டும் தூதரைப் பின்பற்றுவதைக் கொண்டும் அல்லாஹ் இந்த சமூகத்தை சிறப்பித்த காரணத்தால், வேதக்காரர்களில் பெரும்பாலோர் இந்த சமூகத்தின் மீது பொறாமை கொண்டுள்ளனர். அதனால் இந்த முஸ்லிம் சமூகம் தங்களின் முந்தைய நிலையான நிராகரிப்புக்கே திரும்பிவிட வேண்டும் என்று ஆசை கொண்டிருந்தார்கள்.

 
የይዘት ትርጉም ምዕራፍ: አል-በቀራህ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት