Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም ምዕራፍ: አል-በቀራህ   አንቀጽ:
لَا یُؤَاخِذُكُمُ اللّٰهُ بِاللَّغْوِ فِیْۤ اَیْمَانِكُمْ وَلٰكِنْ یُّؤَاخِذُكُمْ بِمَا كَسَبَتْ قُلُوْبُكُمْ ؕ— وَاللّٰهُ غَفُوْرٌ حَلِیْمٌ ۟
2.225. நீங்கள் நோக்கமின்றி வீணாகச் செய்யும் சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களிடம் கணக்குக் கேட்கமாட்டான். உதாரணமாக: "அல்லாஹ்வின்மீது சத்தியமாக"என்று பேச்சோடு பேச்சாக கூறுவது. இதற்காக நீங்கள் பரிகாரம் செய்ய வேண்டிய அவசியமில்லை. அல்லாஹ் உங்களைத் தண்டிக்கவும் மாட்டான். ஆனால் நீங்கள் சத்தியம் செய்யும் நோக்குடன் செய்யும் சத்தியங்களுக்கு அவன் உங்களிடம் கணக்குக் கேட்பான். அல்லாஹ் தன் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவன். அவன் சகிப்புத்தன்மைமிக்கவனாக இருக்கின்றான். உங்களை உடனுக்குடன் தண்டித்துவிட மாட்டான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
لِلَّذِیْنَ یُؤْلُوْنَ مِنْ نِّسَآىِٕهِمْ تَرَبُّصُ اَرْبَعَةِ اَشْهُرٍ ۚ— فَاِنْ فَآءُوْ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
2.226. "மனைவியருடன் உடலுறவு கொள்ள மாட்டேன்" என்று சத்தியம் செய்பவர்களுக்கு அவர்கள் சத்தியம் செய்ததிலிருந்து நான்கு மாதம்வரை அவகாசம் உண்டு. அவர்கள் இந்த காலத்திற்குள் சத்தியத்தை முறித்து உடலுறவு கொண்டுவிட்டால் அவர்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் அவர்களிடமிருந்து வெளிப்பட்ட தவறுகளை மன்னிக்கக்கூடியவனாக இருக்கின்றான். அவன் அவர்கள் விஷயத்தில் மிகுந்த கருணையாளன். அதனால்தான் பரிகாரத்தின் மூலம் அந்த சத்தியத்திலிருந்து வெளியேறும் வழியைக் காட்டியுள்ளான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَاِنْ عَزَمُوا الطَّلَاقَ فَاِنَّ اللّٰهَ سَمِیْعٌ عَلِیْمٌ ۟
2.227. உடலுறவுகொண்டு அந்த சத்தியத்தை முறிக்காமல் அவர்கள் விவாகரத்தை நாடிவிட்டால், விவாகரத்து உட்பட அவர்களின் பேச்சுக்களை அல்லாஹ் செவியேற்கக்கூடியவன்; அவர்களின் நோக்கங்களையும் நிலைகளையும் நன்கறிந்தவன். அதனடிப்படையில்தான் அவன் அவர்களுக்கு கூலி வழங்குகிறான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَالْمُطَلَّقٰتُ یَتَرَبَّصْنَ بِاَنْفُسِهِنَّ ثَلٰثَةَ قُرُوْٓءٍ ؕ— وَلَا یَحِلُّ لَهُنَّ اَنْ یَّكْتُمْنَ مَا خَلَقَ اللّٰهُ فِیْۤ اَرْحَامِهِنَّ اِنْ كُنَّ یُؤْمِنَّ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ ؕ— وَبُعُوْلَتُهُنَّ اَحَقُّ بِرَدِّهِنَّ فِیْ ذٰلِكَ اِنْ اَرَادُوْۤا اِصْلَاحًا ؕ— وَلَهُنَّ مِثْلُ الَّذِیْ عَلَیْهِنَّ بِالْمَعْرُوْفِ ۪— وَلِلرِّجَالِ عَلَیْهِنَّ دَرَجَةٌ ؕ— وَاللّٰهُ عَزِیْزٌ حَكِیْمٌ ۟۠
2.228. விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்வரை காத்திருக்க வேண்டும். அவர்கள் அல்லாஹ்வின்மீதும் மறுமைநாளின்மீதும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் அதற்கிடையில் அவர்கள் வேறு திருமணம் செய்துகொள்ளக்கூடாது; தங்கள் வயிற்றில் அல்லாஹ் உருவாக்கிய கருவையும் மறைத்துவிடக்கூடாது. அவர்களை விவாகரத்து செய்த கணவன்மார்கள் இணக்கத்தை நோக்கமாகக்கொண்டு அவர்களை திரும்ப அழைத்துக்கொள்ள நாடினால் காத்திருக்கும் குறிப்பிட்ட காலஇடைவெளிக்குள் அவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்வதற்கு அக்கணவன்மார்களே மிகத்தகுதியானவர்கள். கணவர்களுக்கு இருப்பதைப்போல மனைவியருக்கும் மக்களுக்கு மத்தியில் வழமையில் இருக்கும் உரிமைகளும் கடமைகளும் இருக்கின்றன. நிர்வகித்தலிலும் விவாகரத்து விஷயங்களிலும் பெண்களைவிட ஆண்களுக்கு ஒருபடி உயர்வு உண்டு. அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். அவனை யாராலும் மிகைக்க முடியாது. அவன் திட்டமிடலிலும், சட்டமியற்றுவதிலும் ஞானம்மிக்கவன்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
اَلطَّلَاقُ مَرَّتٰنِ ۪— فَاِمْسَاكٌ بِمَعْرُوْفٍ اَوْ تَسْرِیْحٌ بِاِحْسَانٍ ؕ— وَلَا یَحِلُّ لَكُمْ اَنْ تَاْخُذُوْا مِمَّاۤ اٰتَیْتُمُوْهُنَّ شَیْـًٔا اِلَّاۤ اَنْ یَّخَافَاۤ اَلَّا یُقِیْمَا حُدُوْدَ اللّٰهِ ؕ— فَاِنْ خِفْتُمْ اَلَّا یُقِیْمَا حُدُوْدَ اللّٰهِ ۙ— فَلَا جُنَاحَ عَلَیْهِمَا فِیْمَا افْتَدَتْ بِهٖ ؕ— تِلْكَ حُدُوْدُ اللّٰهِ فَلَا تَعْتَدُوْهَا ۚ— وَمَنْ یَّتَعَدَّ حُدُوْدَ اللّٰهِ فَاُولٰٓىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ ۟
2.229. கணவன் விவாகரத்து அளித்த பின்னர் காத்திருக்கும் குறிப்பிட்ட காலப்பகுதியில் மீட்டிக்கொள்வதற்கான அனுமதி இருமுறை மாத்திரம்தான். இரண்டாவது விவாகரத்தின் பின்னர் நல்லமுறையில் சேர்ந்து வாழவேண்டும். அல்லது அழகிய முறையில் மனைவியின் உரிமைகளை வழங்கி மூன்றாவது முறையும் விவாகரத்து அளித்துவிட வேண்டும். கணவர்களே! நீங்கள் அவர்களுக்கு அளித்த மணக்கொடையில்(மஹர்) எதையும் திரும்பப் பெறுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல. ஆயினும் மனைவிக்கு கணவனின் தோற்றமோ குணமோ வெறுப்பை அளித்தாலே தவிர. இந்த வெறுப்பின் காரணமாக இருவரும் தங்களின் மீதுள்ள கடமைகளை நிறைவேற்றமுடியாது என எண்ணினால் அவர்களின் விஷயங்களை நெருங்கிய உறவினரிடமோ அல்லது மற்றவர்களிடமோ எடுத்துச் செல்லட்டும். அவர்கள் இருவரும் தங்களின் மணவாழ்வை ஒழுங்காக நடத்தமுடியாது என்று பொறுப்பாளர்கள் கருதினால் பெண் தன் கணவனுக்கு வழங்கும் செல்வத்தின் மூலம் அவனிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்வதில் எவ்விதக் குற்றமுமில்லை. இச்சட்டங்கள் அனுமதிக்கப்பட்டவைக்கும் தடுக்கப்பட்டதற்கும் இடையிலுள்ள வரம்புகளாகும். இவற்றை மீறிவிடாதீர்கள். யார் அவ்விரண்டுக்கும் இடையிலுள்ள வரம்புகளை மீறிவிடுகிறார்களோ அவர்கள்தாம் தங்களுக்குத் தாங்களே அழிவையும் அல்லாஹ்வின் கோபத்தையும் தண்டனையையும் தேடிக்கொண்ட அநியாயக்காரர்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
فَاِنْ طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهٗ مِنْ بَعْدُ حَتّٰی تَنْكِحَ زَوْجًا غَیْرَهٗ ؕ— فَاِنْ طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَیْهِمَاۤ اَنْ یَّتَرَاجَعَاۤ اِنْ ظَنَّاۤ اَنْ یُّقِیْمَا حُدُوْدَ اللّٰهِ ؕ— وَتِلْكَ حُدُوْدُ اللّٰهِ یُبَیِّنُهَا لِقَوْمٍ یَّعْلَمُوْنَ ۟
2.230. கணவன் மூன்றாவது முறையும் விவாகரத்து செய்துவிட்டால் அவள் வேறொருவரை முறையாகத் திருமணம் செய்து அவருடன் உறவுகொண்ட பின்னர் அவரால் விவாகரத்து செய்யப்படும்வரை அல்லது அவர் இறந்துவிடும்வரை முந்தைய கணவனுக்கு மணமுடிக்க அனுமதிக்கப்பட்டவள் அல்ல. இரண்டாவது கணவன் விவாகரத்து செய்துவிட்டால் அல்லது மரணித்துவிட்டால் முதல் கணவனும் அவளும் மீண்டும் சேர்ந்துவாழ்ந்து அல்லாஹ்வின் சட்டங்களைக் கடைப்பிடிக்க முடியும் என்று நம்பினால் மீண்டும் புதிதாக ஒப்பந்தம் செய்து மணக்கொடையும் வழங்கி திருமணம் செய்துகொள்வதில் அவர்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ்வின் சட்டங்களை, வரம்புகளை அறிந்துகொள்ள விரும்பும் மக்களுக்கு அவன் தன் சட்டங்களைத் தெளிவுபடுத்துகிறான். ஏனெனில் அவர்களே அதன் மூலம் பயன்பெறுவர்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• بيَّن الله تعالى أحكام النكاح والطلاق بيانًا شاملًا حتى يعرف الناس حدود الحلال والحرام فلا يتجاوزونها.
1. ஹலால்,ஹராமுடைய வரம்புகளை மக்கள் அறிந்து, அவற்றை மீறாமல் இருக்கும் பொருட்டு திருமணம் மற்றும் விவாகரத்து குறித்த சட்டங்களை, அல்லாஹ் பூரணமாக தெளிவுபடுத்திவிட்டான்.

• عظَّم الله شأن النكاح وحرم التلاعب فيه بالألفاظ فجعلها ملزمة، وألغى التلاعب بكثرة الطلاق والرجعة فجعل لها حدًّا بطلقتين رجعيتين ثم تحرم عليه إلا أن تنكح زوجا غيره ثم يطلقها، أو يموت عنها.
2. திருமணத்திற்கு அல்லாஹ் மிகவும் முக்கியத்துவம் வழங்கியுள்ளான். அதனால்தான் விவாகரத்து மற்றும் அதன்பின் மீட்டிக்கொள்ளுதல் என்பவற்றில் விளையாட்டாக வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தடைசெய்துள்ளான். அவ்வாறு பயன்படுத்தினால் அதனை செல்லுபடியானதாக ஆக்கி திருமணவிடயத்தில் விளையாடாமல் இருப்பதற்கு வழிவகுத்துள்ளான். எனவேதான் மீட்டிக்கொள்ளமுடியுமான விவாகரத்துகள் இரண்டு தடவைகள் மாத்திரமே என வரையறை இட்டுள்ளான். அதனையும் மீறி மூன்றாவது தடவையும் விவாகரத்துச் செய்தால் வேறொரு கணவனைத் திருமணம் செய்து அவர் விவாகரத்துச் செய்யும் வரை அல்லது அவர் மரணிக்கும் வரை தடைசெய்யப்பட்டவளாக ஆகிவிடுகிறாள்.

• المعاشرة الزوجية تكون بالمعروف، فإن تعذر ذلك فلا بأس من الطلاق، ولا حرج على أحد الزوجين أن يطلبه.
3. திருமண வாழ்க்கை நல்லமுறையில் இருக்க வேண்டும்.அது சாத்தியமில்லையெனத் தோன்றினால் விவாகரத்து பெற்றுக் கொள்வதில் எந்தக் குற்றமும் இல்லை. அதனை வேண்டுவதும் இருவருக்கும் அனுமதிக்கப்பட்டதாகும்.

 
የይዘት ትርጉም ምዕራፍ: አል-በቀራህ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት