Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም ምዕራፍ: አል-በቀራህ   አንቀጽ:
وَاِذَا قِیْلَ لَهُمُ اتَّبِعُوْا مَاۤ اَنْزَلَ اللّٰهُ قَالُوْا بَلْ نَتَّبِعُ مَاۤ اَلْفَیْنَا عَلَیْهِ اٰبَآءَنَا ؕ— اَوَلَوْ كَانَ اٰبَآؤُهُمْ لَا یَعْقِلُوْنَ شَیْـًٔا وَّلَا یَهْتَدُوْنَ ۟
2.170. இந்த நிராகரிப்பாளர்களிடம்:அல்லாஹ் இறக்கிய வழிகாட்டுதலைப் பின்பற்றுங்கள் என்று கூறப்பட்டால், "எங்கள் முன்னோர்களின் கொள்கைகளையும் பழக்கவழக்கங்களையும்தான் பின்பற்றுவோம்" என்று பிடிவாதத்துடன் கூறுகிறார்கள். அந்த முன்னோர்கள் நேர்வழியைக் குறித்து எதுவும் அறியாதவர்களாகவும், அல்லாஹ் விரும்பும் சத்தியத்தை அடைய முடியாதவர்களாகவும் இருந்தாலும் அவர்களைப் பின்பற்றுவார்களா என்ன?
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَمَثَلُ الَّذِیْنَ كَفَرُوْا كَمَثَلِ الَّذِیْ یَنْعِقُ بِمَا لَا یَسْمَعُ اِلَّا دُعَآءً وَّنِدَآءً ؕ— صُمٌّۢ بُكْمٌ عُمْیٌ فَهُمْ لَا یَعْقِلُوْنَ ۟
2.171. நிராகரிப்பாளர்கள் தங்களின் முன்னோர்களைப் பின்பற்றுவதற்கான உதாரணம், தனது கால்நடையைக் கத்திக்கத்தி அழைக்கும் இடையனைப் போன்றது. அவை அவனுடைய சப்தத்தை செவியுறுகின்றன. ஆனால் அவனுடைய பேச்சை புரிந்துகொள்வதில்லை. அவர்கள் சத்தியத்தை செவியுற்று அதைக்கொண்டு பயனடைய முடியாத செவிடர்கள். உண்மையைப் பேச முடியாத ஊமைகள். அதனைக் காணமுடியாத குருடர்கள். எனவே நீர் அழைக்கும் நேர்வழியை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا كُلُوْا مِنْ طَیِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ وَاشْكُرُوْا لِلّٰهِ اِنْ كُنْتُمْ اِیَّاهُ تَعْبُدُوْنَ ۟
2.172. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய, ஆகுமாக்கிய தூய்மையான உணவுகளை உண்ணுங்கள். அவன் உங்கள்மீது பொழிந்த அருட்கொடைகளுக்கு வெளிப்படையாகவும் அந்தரங்கமாகவும் நன்றி செலுத்துங்கள். நீங்கள் உண்மையாகவே அவனை மட்டுமே வணங்கி, அவனுக்கு யாரையும் இணையாக்காமல் இருந்தால் அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றை விட்டு விலகியிருப்பதும் அவனுக்கு நன்றி செலுத்துவதில் உள்ளவைதாம்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
اِنَّمَا حَرَّمَ عَلَیْكُمُ الْمَیْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِیْرِ وَمَاۤ اُهِلَّ بِهٖ لِغَیْرِ اللّٰهِ ۚ— فَمَنِ اضْطُرَّ غَیْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَلَاۤ اِثْمَ عَلَیْهِ ؕ— اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
2.173. அல்லாஹ் உங்கள்மீது பின்வரும் உணவுப்பொருட்களைத் தடைசெய்துள்ளான்: "இஸ்லாமிய முறைப்படி அறுக்கப்படாமல் செத்தவை, வழிந்தோடிய இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதவர்களின் பெயர்கூறி அறுக்கப்பட்டது."யாரேனும் நிர்பந்தத்தினால் - விரும்பாமலும், தேவையான அளவைத் தாண்டாமலும் - இவ்வகையான பொருள்களை உண்டுவிட்டால் அவர்மீது எந்தக் குற்றமும் இல்லை. பாவமன்னிப்புக்கோரும் தன் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான். நிர்ப்பந்தமான சமயங்களில் தடைசெய்யப்பட்டவற்றை உண்பதை மன்னித்துவிடுவதும் அவனுடைய கருணையின் வெளிப்பாடுதான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
اِنَّ الَّذِیْنَ یَكْتُمُوْنَ مَاۤ اَنْزَلَ اللّٰهُ مِنَ الْكِتٰبِ وَیَشْتَرُوْنَ بِهٖ ثَمَنًا قَلِیْلًا ۙ— اُولٰٓىِٕكَ مَا یَاْكُلُوْنَ فِیْ بُطُوْنِهِمْ اِلَّا النَّارَ وَلَا یُكَلِّمُهُمُ اللّٰهُ یَوْمَ الْقِیٰمَةِ وَلَا یُزَكِّیْهِمْ ۖۚ— وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
2.174. யூதர்களும் கிருஸ்தவர்களும் செய்வது போன்று அல்லாஹ் இறக்கிய வேதங்களையும் அவற்றில் உள்ள சத்தியம் மற்றும் முஹம்மது நபியைக் குறித்து உள்ளவற்றையும் பணம், பதவி போன்ற அற்ப ஆதாயங்களுக்காக மறைப்போர் உண்மையில் அவர்கள் நரக வேதனைக்கு காரணமாக அமையக்கூடியவற்றைத்தான் தங்கள் வயிறுகளில் நிரப்பிக் கொள்கிறார்கள். மறுமைநாளில் அவர்கள் விரும்பும் விஷயத்தைக் கொண்டு அல்லாஹ் அவர்களுடன் பேசமாட்டான்; மாறாக கவலையூட்டும் விதமாகவே பேசுவான். அவர்களைத் தூய்மைப்படுத்தவோ பாராட்டவோ மாட்டான். அவர்களுக்கு வேதனைமிக்க தண்டனைதான் உண்டு.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ اشْتَرَوُا الضَّلٰلَةَ بِالْهُدٰی وَالْعَذَابَ بِالْمَغْفِرَةِ ۚ— فَمَاۤ اَصْبَرَهُمْ عَلَی النَّارِ ۟
2.175. மக்களுக்குத் தேவையான கல்வியை மறைக்கக்கூடிய இவர்கள் உண்மையான கல்வியை மறைத்தபோது, நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டையும் அல்லாஹ்வின் மன்னிப்பிற்குப் பதிலாக அவனுடைய தண்டனையையும் வாங்கிக் கொண்டார்கள். அவர்களை நரகத்தில் தள்ளுவதற்கு காரணமான விஷயங்களில் ஈடுபடுவதை எவ்வளவு அருமையாக சகித்துக் கொள்கிறார்கள்!? தம்மால் சகித்துக்கொள்ள முடியும் என்பதால் அவர்களுக்கு ஏற்படப்போகும் வேதனையை அவர்கள் பொருட்படுத்தவில்லைபோலும்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ نَزَّلَ الْكِتٰبَ بِالْحَقِّ ؕ— وَاِنَّ الَّذِیْنَ اخْتَلَفُوْا فِی الْكِتٰبِ لَفِیْ شِقَاقٍ بَعِیْدٍ ۟۠
2.176. இந்த வேதனை நேர்வழியையும் கல்வியையும் மறைத்தனால் ஏற்பட்ட விளைவாகும். ஏனெனில் மறைக்கப்படாமல் தெளிவுபடுத்தப்படுவதற்காகவே வேதங்களை உண்மையாகவே அல்லாஹ் இறக்கியருளியுள்ளான். இறைவேதங்களில் கருத்துவேறுபாடு கொண்டு, அவற்றில் சிலவற்றை ஏற்றுக்கொண்டு சிலவற்றை மறைத்தவர்கள் சத்தியத்தை விட்டு தூரமாகச் சென்றுவிட்டார்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• أكثر ضلال الخلق بسبب تعطيل العقل، ومتابعة من سبقهم في ضلالهم، وتقليدهم بغير وعي.
1. அறிவைப் பயன்படுத்தாமல் வழிகேட்டில் தமக்கு முன்னுள்ளவர்களை குருட்டுத்தனமாக பின்பற்றியதனால்தான் பெரும்பாலான மக்கள் வழிதவறினார்கள்.

• عدم انتفاع المرء بما وهبه الله من نعمة العقل والسمع والبصر، يجعله مثل من فقد هذه النعم.
2. அல்லாஹ் வழங்கிய அறிவு, செவிப்புலன், பார்வை போன்ற அருட்கொடைகளைக் கொண்டு பயனடையாதவர்கள் அவற்றைத் இழந்தவர்களைப் போலாவர்.

• من أشد الناس عقوبة يوم القيامة من يكتم العلم الذي أنزله الله، والهدى الذي جاءت به رسله تعالى.
3. மறுமையில் மனிதர்களில் கடுமையான தண்டனைக்கு ஆளாகக்கூடியவர்கள் அல்லாஹ் இறக்கிய கல்வியையும் தூதர்கள் கொண்டுவந்த வழிகாட்டுதலையும் மறைத்தவர்கள்தாம்.

• من نعمة الله تعالى على عباده المؤمنين أن جعل المحرمات قليلة محدودة، وأما المباحات فكثيرة غير محدودة.
4. தடைசெய்யப்பட்டதை குறைவாகவும் அனுமதிக்கப்பட்டதை அதிகமாகவும் அல்லாஹ் ஆக்கியுள்ளது, தன்மீது நம்பிக்கைகொண்ட அடியார்களுக்கு அவன் வழங்கிய அருட்கொடையாகும்.

 
የይዘት ትርጉም ምዕራፍ: አል-በቀራህ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት