Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም ምዕራፍ: አል-በቀራህ   አንቀጽ:
وَاِنْ كُنْتُمْ عَلٰی سَفَرٍ وَّلَمْ تَجِدُوْا كَاتِبًا فَرِهٰنٌ مَّقْبُوْضَةٌ ؕ— فَاِنْ اَمِنَ بَعْضُكُمْ بَعْضًا فَلْیُؤَدِّ الَّذِی اؤْتُمِنَ اَمَانَتَهٗ وَلْیَتَّقِ اللّٰهَ رَبَّهٗ ؕ— وَلَا تَكْتُمُوا الشَّهَادَةَ ؕ— وَمَنْ یَّكْتُمْهَا فَاِنَّهٗۤ اٰثِمٌ قَلْبُهٗ ؕ— وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ عَلِیْمٌ ۟۠
2.283. நீங்கள் பயணத்தில் இருந்து கடன் பத்திரத்தை உங்களுக்காக எழுதக்கூடியவரைப் பெற்றுக்கொள்ளவில்லையெனில் கடனாளி கடனளிப்பவருக்கு அடமானமாக எதையாவது கொடுக்கட்டும். கடனை நிறைவேற்றும் வரை அவருக்கு அது உத்தரவாதமாக அமையும். நீங்கள் ஒருவர் மற்றவரை நம்பினால் எழுதவோ சாட்சியோ அடமானமோ தேவையில்லை. அச்சமயத்தில் கடனைப் பெற்றவரின் பொறுப்பில் அமானிதமாக அது இருக்கும். அதனை முழுமையாக நிறைவேற்றுவது அவர் மீது கடமையாகிவிடுகிறது. இந்த அமானிதத்தில் அவர் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். அதிலிருந்து எதையும் மறுத்துவிட வேண்டாம். அவ்வாறு மறுத்தால் சாட்சியாளர்கள் சாட்சியத்தை மறைக்காது அதனை நிறைவேற்றிவிட வேண்டும். சாட்சியை மறைப்பவரின் உள்ளம் பாவியின் உள்ளமாகும். நீங்கள் செய்யக்கூடியவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. உங்களின் செயல்களுக்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ— وَاِنْ تُبْدُوْا مَا فِیْۤ اَنْفُسِكُمْ اَوْ تُخْفُوْهُ یُحَاسِبْكُمْ بِهِ اللّٰهُ ؕ— فَیَغْفِرُ لِمَنْ یَّشَآءُ وَیُعَذِّبُ مَنْ یَّشَآءُ ؕ— وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
2.284. வானங்களிலும் பூமியிலும் உள்ளவை யாவும் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் மாத்திரமே அவற்றைப் படைத்துப் பரிபாளிக்கிறான். நீங்கள் உங்கள் உள்ளத்திலுள்ளதை வெளிப்படுத்தினாலும் மறைத்தாலும் அதனை அல்லாஹ் நன்கறிவான். அதற்கேற்பவே அவன் உங்களிடம் விசாரணை செய்வான். அதன் பிறகு தன் அருளால் தான் நாடியவர்களை மன்னிக்கிறான். தன் நீதியால் தான் நாடியவர்களைத் தண்டிக்கிறான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின்மீதும் பேராற்றலுடையவன்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
اٰمَنَ الرَّسُوْلُ بِمَاۤ اُنْزِلَ اِلَیْهِ مِنْ رَّبِّهٖ وَالْمُؤْمِنُوْنَ ؕ— كُلٌّ اٰمَنَ بِاللّٰهِ وَمَلٰٓىِٕكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖ ۫— لَا نُفَرِّقُ بَیْنَ اَحَدٍ مِّنْ رُّسُلِهٖ ۫— وَقَالُوْا سَمِعْنَا وَاَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَاِلَیْكَ الْمَصِیْرُ ۟
2.285. தூதர் முஹம்மது தம் இறைவனிடமிருந்து தமக்கு இறக்கப்பட்ட அனைத்தையும் நம்புகிறார். அவ்வாறே நம்பிக்கையாளர்களும் நம்புகிறார்கள். அனைவரும் அல்லாஹ்வின்மீதும் வானவர்கள் அனைவரின்மீதும் தூதர்களுக்கு இறக்கப்பட்ட அனைத்து வேதங்களின் மீதும் அல்லாஹ் அனுப்பிய தூதர்கள் அனைவரின்மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர்களிடையே நாங்கள் பாகுபாடு காட்ட மாட்டோம். மேலும் அவர்கள் கூறுகிறார்கள்: நீ எங்களுக்குக் கட்டளையிட்டதையும், தடுத்ததையும் நாங்கள் செவியேற்றோம். உனது கட்டளைகளைச் செயல்படுத்தி, நீ தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி நாங்கள் உனக்குக் கட்டுப்பட்டோம். அல்லாஹ்வே, எங்களை மன்னித்து விடுவாயாக. நாங்கள் அனைவரும் எங்களின் அனைத்து விவகாரங்களிலும் உன் பக்கமே திரும்ப வேண்டும்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
لَا یُكَلِّفُ اللّٰهُ نَفْسًا اِلَّا وُسْعَهَا ؕ— لَهَا مَا كَسَبَتْ وَعَلَیْهَا مَا اكْتَسَبَتْ ؕ— رَبَّنَا لَا تُؤَاخِذْنَاۤ اِنْ نَّسِیْنَاۤ اَوْ اَخْطَاْنَا ۚ— رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَیْنَاۤ اِصْرًا كَمَا حَمَلْتَهٗ عَلَی الَّذِیْنَ مِنْ قَبْلِنَا ۚ— رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهٖ ۚ— وَاعْفُ عَنَّا ۥ— وَاغْفِرْ لَنَا ۥ— وَارْحَمْنَا ۥ— اَنْتَ مَوْلٰىنَا فَانْصُرْنَا عَلَی الْقَوْمِ الْكٰفِرِیْنَ ۟۠
2.286. அல்லாஹ் எவருக்கும் அவர் சுமக்க முடியும் அளவே பொறுப்புகளைச் சாட்டுவான். ஏனெனில் அல்லாஹ்வின் மார்க்கம் இலகுவானது. அதில் எந்தக் கடினமும் இல்லை. எவர் நன்மையான செயலைச் செய்வாரோ அவருக்கு அவர் செய்தவற்றுக்கான கூலி எவ்விதக் குறைவுமின்றி உண்டு. எவர் தீமையைச் சம்பாதிப்பாரோ அவர் சம்பாதித்தவற்றுக்கான தண்டனை அவருக்கே நிடைக்கும். அதனை வேறு எவரும் சுமக்க மாட்டார். தூதரும் நம்பிக்கையாளர்களும் கூறினார்கள்: “எங்கள் இறைவா! எங்கள் சொலல்லிலோ செயலிலோ நாங்கள் மறந்துவிட்டாலோ அறியாமல் தவறிழைத்துவிட்டாலோ எங்களைத் தண்டித்துவிடாதே. எங்கள் இறைவா! அநியாயம் செய்ததனால் நீ தண்டித்த எங்களுக்கு முன் வாழ்ந்த யூதர்கள் போன்றோர் மீது நீ சுமத்தியதுபோன்று எங்கள்மீதும் தாங்க முடியாத சுமைகளைச் சுமத்திவிடாதே. எமக்குச் சிரமமான சுமக்க முடியாத ஏவல்களையும் விலக்கல்களையும் எங்கள் மீது சுமத்திவிடாதே! எங்கள் பாவங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவாயாக. எங்களை மன்னித்துவிடுவாயாக. எங்கள்மீது கருணை காட்டுவாயாக. நீதான் எங்களின் பொறுப்பாளன், உதவியாளன். உன்னை நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவிபுரிவாயாக.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• جواز أخذ الرهن لضمان الحقوق في حال عدم القدرة على توثيق الحق، إلا إذا وَثِقَ المتعاملون بعضهم ببعض.
1. கடனை எழுதிவைத்துக் கொள்ள முடியவில்லையெனில் உரிமைகளின் உத்தரவாதத்திற்காக அடமானப் பொருளைப் பெற்றுக் கொள்ளலாம். ஒருவர் மற்றவரை நம்பினால் அடமானமாகவும் எதையும் பெற்றுக்கொள்ளத் தேவையில்லை.

• حرمة كتمان الشهادة وإثم من يكتمها ولا يؤديها.
2. சாட்சியத்தை மறைக்கக்கூடாது. சாட்சியத்தை மறைப்பது பாவமாகும்.

• كمال علم الله تعالى واطلاعه على خلقه، وقدرته التامة على حسابهم على ما اكتسبوا من أعمال.
3. படைப்புகளைக் குறித்த அனைத்து விஷயங்களையும் அல்லாஹ் முழுமையாக அறிவான். அவர்களது செயல்களை விசாரணை செய்வதற்கும் அவன் முழு ஆற்றலுடையவன்.

• تقرير أركان الإيمان وبيان أصوله.
ஈமானின் தூண்களை உறுதிப்படுத்தி அதன் அடிப்படைகளைத் தெளிவுபடுத்தல்

• قام هذا الدين على اليسر ورفع الحرج والمشقة عن العباد، فلا يكلفهم الله إلا ما يطيقون، ولا يحاسبهم على ما لا يستطيعون.
5. மார்க்கம் இலகுவானது. அதில் அடியார்களுக்கு சிரமத்தை உண்டாக்கும் எந்த ஒன்றும் இல்லை. அவர்களால் தாங்க முடியாததை அல்லாஹ் அவர்கள் மீது சாட்டுதுமில்லை. அவர்களால் செய்ய ஆற்றலில்லாதவற்றுக்கு அவன் அவர்களிடம் கணக்குக் கேட்பதுமில்லை.

 
የይዘት ትርጉም ምዕራፍ: አል-በቀራህ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት