Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም ምዕራፍ: አል-በቀራህ   አንቀጽ:
اَلَمْ تَرَ اِلَی الْمَلَاِ مِنْ بَنِیْۤ اِسْرَآءِیْلَ مِنْ بَعْدِ مُوْسٰی ۘ— اِذْ قَالُوْا لِنَبِیٍّ لَّهُمُ ابْعَثْ لَنَا مَلِكًا نُّقَاتِلْ فِیْ سَبِیْلِ اللّٰهِ ؕ— قَالَ هَلْ عَسَیْتُمْ اِنْ كُتِبَ عَلَیْكُمُ الْقِتَالُ اَلَّا تُقَاتِلُوْا ؕ— قَالُوْا وَمَا لَنَاۤ اَلَّا نُقَاتِلَ فِیْ سَبِیْلِ اللّٰهِ وَقَدْ اُخْرِجْنَا مِنْ دِیَارِنَا وَاَبْنَآىِٕنَا ؕ— فَلَمَّا كُتِبَ عَلَیْهِمُ الْقِتَالُ تَوَلَّوْا اِلَّا قَلِیْلًا مِّنْهُمْ ؕ— وَاللّٰهُ عَلِیْمٌۢ بِالظّٰلِمِیْنَ ۟
2.246. தூதரே! இஸ்ராயீலின் மக்களில் மூசாவின் காலத்திற்குப்பின் வாழ்ந்த கண்ணியமானவர்களின் செய்தி உமது அறிவுக்கு எட்டவில்லையா? அவர்கள் தங்களின் தூதரிடம் கூறினார்கள்: எங்களுக்காக ஒரு அரசனை ஏற்படுத்துங்கள். நாங்கள் அவருடன் சேர்ந்து அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோம். அதற்கு அவர்களின் தூதர் கூறினார்: அல்லாஹ் உங்கள்மீது போரை கடமையாக்கி, நீங்கள் அவனுடைய பாதையில் போரிடாமல் இருக்கலாம் அல்லவா? அவருடைய எண்ணத்தை மறுத்தவர்களாகக் கூறினார்கள், அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்கான காரணிகள் அனைத்தையும் நாங்கள் பெற்றிருந்தும் எது அவனுடைய பாதையில் போரிடுவதை விட்டும் எங்களைத் தடுக்கும்? எங்களின் எதிரிகள் எங்களின் நாட்டை விட்டு எங்களை வெளியேற்றியுள்ளார்கள்; எங்களின் பிள்ளைகளைக் கைதிகளாகப் பிடித்துள்ளார்கள். எங்களின் நாட்டையும் பிள்ளைகளையும் மீட்டுவதற்காக நாங்கள் போரிடுவோம். அல்லாஹ் அவர்கள்மீது போரைக் கடமையாக்கியபோது அவர்களில் சிலரைத்தவிர மற்றவர்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்றாது புறக்கணித்துவிட்டார்கள். அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதியை முறித்து அவனுடைய கட்டளைகளைப் புறக்கணித்த அநியாயக்காரர்களை அல்லாஹ் நன்கறிந்தவன். அதற்கான தண்டனையை அவன் அவர்களுக்கு வழங்கிடுவான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَقَالَ لَهُمْ نَبِیُّهُمْ اِنَّ اللّٰهَ قَدْ بَعَثَ لَكُمْ طَالُوْتَ مَلِكًا ؕ— قَالُوْۤا اَنّٰی یَكُوْنُ لَهُ الْمُلْكُ عَلَیْنَا وَنَحْنُ اَحَقُّ بِالْمُلْكِ مِنْهُ وَلَمْ یُؤْتَ سَعَةً مِّنَ الْمَالِ ؕ— قَالَ اِنَّ اللّٰهَ اصْطَفٰىهُ عَلَیْكُمْ وَزَادَهٗ بَسْطَةً فِی الْعِلْمِ وَالْجِسْمِ ؕ— وَاللّٰهُ یُؤْتِیْ مُلْكَهٗ مَنْ یَّشَآءُ ؕ— وَاللّٰهُ وَاسِعٌ عَلِیْمٌ ۟
2.247. அவர்களின் தூதர் கூறினார்: அல்லாஹ் உங்களுக்கு தாலூத்தை அரசராக நியமித்துள்ளான். நீங்கள் அவருடைய தலைமையில் போர்புரிய வேண்டும். அவர்களின் தலைவர்கள் இதனை ஆட்சேபித்தவர்களாகக் கூறினார்கள்: அவர் எப்படி எங்களை ஆட்சிசெலுத்த முடியும்? அவரைவிட நாங்கள்தாம் அரசாட்சிக்குத் தகுதியானவர்கள். அவர் அரச வாரிசுகளில் உள்ளவராகவும் இல்லை; ஆட்சிசெய்யும் அளவு பெருஞ்செல்வம் படைத்தவராகவும் இல்லையே!. அவர்களின் தூதர் கூறினார்: அல்லாஹ் அவரைத் தேர்ந்தெடுத்துள்ளான். உங்களைவிட அவருக்கு விசாலமான கல்வியையும் உடல்பலத்தையும் வழங்கியிருக்கிறான். அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு தன் அருளால், அறிவால் ஆட்சியதிகாரத்தை வழங்குகிறான். அல்லாஹ் விசாலமான அருளாளன். தான் நாடியவர்களுக்கு அதனை வழங்குகிறான். தன் படைப்புகளில் அதற்குத் தகுதியானவர்களையும் அவன் நன்கறிந்தவன்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَقَالَ لَهُمْ نَبِیُّهُمْ اِنَّ اٰیَةَ مُلْكِهٖۤ اَنْ یَّاْتِیَكُمُ التَّابُوْتُ فِیْهِ سَكِیْنَةٌ مِّنْ رَّبِّكُمْ وَبَقِیَّةٌ مِّمَّا تَرَكَ اٰلُ مُوْسٰی وَاٰلُ هٰرُوْنَ تَحْمِلُهُ الْمَلٰٓىِٕكَةُ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لَّكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟۠
2.248. அவர்களின் தூதர் கூறினார்: அவர்தான் உங்களுக்கு அரசராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதற்கான அடையாளம், இஸ்ராயீலின் மக்கள் புனிதமாக கருதிவந்த, அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பெட்டியை அல்லாஹ் உங்களுக்குத் திரும்பத் தருவதாகும். அதில் நிம்மதியும் மூசா மற்றும் ஹாரூனின் வழிவந்தவர்கள் விட்டுச் சென்ற தடி, சில ஏடுகள் போன்றவையும் இருக்கும். நீங்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் இதில் தெளிவான சான்று இருக்கின்றது.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• التنبيه إلى أهم صفات القائد التي تؤهله لقيادة الناس؛ وهي العلم بما يكون قائدًا فيه، والقوة عليه.
1. தலைமை வகிக்கும் விடயத்தைப் பற்றிய அறிவும் அதற்குரிய பலமும் மக்களை வழிநடத்தும் தகுதியுடைய தலைவருக்கான மிக முக்கியமான பண்புகளாகும்.

• إرشاد من يتولى قيادة الناس إلى ألا يغتر بأقوالهم حتى يبلوهم، ويختبر أفعالهم بعد أقوالهم.
2. தலைமைப் பொறுப்பிலுள்ளவர்கள் மக்களை செயல்பாடுகளைக் கொண்டு பரீட்சிக்க முன் அவர்களின் பேச்சை நம்பி ஏமாந்துவிடக்கூடாது.

• أن الاعتبارات التي قد تشتهر بين الناس في وزن الآخرين والحكم عليهم قد لا تكون هي الموازين الصحيحة عند الله تعالى، بل هو سبحانه يصطفي من يشاء من خلقه بحكمته وعلمه.
3. பிறரை மதிப்பீடு செய்வதற்கு மக்களுக்கு மத்தியில் பிரபல்யமாகக் கருதப்படும் அளவீடுகள் சில வேளை அல்லாஹ்விடத்தில் சரியான அளவீடாகக் கருதப்படமாட்டாது. அல்லாஹ் தனது ஞானம் மற்றும் அறிவு ஆகிவற்றுக்கு ஏற்ப தான் நாடுவோரை தெரிவுசெய்கிறான்.

 
የይዘት ትርጉም ምዕራፍ: አል-በቀራህ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት