Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም ምዕራፍ: አል-በቀራህ   አንቀጽ:
اَلَّذِیْنَ یَاْكُلُوْنَ الرِّبٰوا لَا یَقُوْمُوْنَ اِلَّا كَمَا یَقُوْمُ الَّذِیْ یَتَخَبَّطُهُ الشَّیْطٰنُ مِنَ الْمَسِّ ؕ— ذٰلِكَ بِاَنَّهُمْ قَالُوْۤا اِنَّمَا الْبَیْعُ مِثْلُ الرِّبٰوا ۘ— وَاَحَلَّ اللّٰهُ الْبَیْعَ وَحَرَّمَ الرِّبٰوا ؕ— فَمَنْ جَآءَهٗ مَوْعِظَةٌ مِّنْ رَّبِّهٖ فَانْتَهٰی فَلَهٗ مَا سَلَفَ ؕ— وَاَمْرُهٗۤ اِلَی اللّٰهِ ؕ— وَمَنْ عَادَ فَاُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ— هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
2.275. வட்டி வியாபாரத்தில் ஈடுபடுவோர், அதனை வாங்கியோர் மறுமைநாளில் ஷைத்தானால் தீண்டப்பட்டவன் போல் தங்கள் மண்ணறைகளிலிருந்து எழுவார்கள். வலிப்பு நோய் உள்ளவர் விழுந்து எழுவதற்குத் தடுமாறுவது போல் தடுமாறியவராக தனது மண்ணறையிலிருந்து எழுவார். இதற்குக் காரணம், அவர்கள் வட்டியை அனுமதிக்கப்பட்டதாகக் கருதினார்கள்; அல்லாஹ் அனுமதித்த வியாபாரத்தின் இலாபத்திற்கும், அவன் தடுத்த வட்டிக்கும் இடையே அவர்கள் வேறுபாடு காட்டவில்லை.வியாபாரமும் வட்டியைப் போன்றதுதான். இரண்டும் செல்வத்தைப் பெருக்குவதுதானே என்று அவர்கள் கூறினார்கள். அவர்களின் இந்த ஒப்பீட்டை அல்லாஹ் மறுத்துரைத்து அவர்களை பொய்ப்பிக்கின்றான். வியாபாரத்தில் அடங்கியுள்ள பொதுவான பிரத்யேக நன்மையின் காரணமாக அவன் அதனை அனுமதிக்கப்பட்டதாகவும், வட்டியில் அடங்கியுள்ள - மக்களின் செல்வங்களை தவறான முறையில் உண்ணுதல், அநியாயம் போன்ற - தீங்குகளின் காரணமாக அதனைத் தடைசெய்யப்பட்டதாகவும் ஆக்கியுள்ளான். வட்டி தடை என்பதாக தம் இறைவனிடமிருந்து அறிவுரைவந்த பின் அதனை விட்டும் தவிர்ந்து, அதிலிருந்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரியவர் மீது முன்னர் வாங்கிய வட்டிக்காக எந்தக் குற்றமும் இல்லை. அது அவருக்கு ஆகுமானதே. எதிர்காலத்தில் அவர் செய்யும் செயல்களின் முடிவு அல்லாஹ்விடமே இருக்கின்றது. அல்லாஹ்விடமிருந்து தடைவந்து ஆதாரம் நிரூபனமாகிவிட்ட பிறகும் யாராவது மீண்டும் வட்டி வாங்கினால் அவர் நரகத்தில் நிரந்தரமாக வீழ்ந்துகிடக்க தகுதியானவராகிவிட்டார். (இங்கு நிரந்தர நரகம் என்பது வட்டியை அனுமதிக்கப்பட்டதாகக் கருதி அதனை உண்பவர்களுக்குரியதாகும் அல்லது நிரந்தரம் என்பது நீண்ட காலத்தைக் குறிப்பதாகும். ஏனெனில் அல்லாஹ்வை நிராகரிப்பவர்கள் மட்டுமே நரகத்தில் நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்கள். ஓரிறைக் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் அங்கு நிரந்தரமாக தங்க மாட்டார்கள்.)
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
یَمْحَقُ اللّٰهُ الرِّبٰوا وَیُرْبِی الصَّدَقٰتِ ؕ— وَاللّٰهُ لَا یُحِبُّ كُلَّ كَفَّارٍ اَثِیْمٍ ۟
2.276. வட்டியின் மூலம் உருவான செல்வத்தை அல்லாஹ் அழிக்கிறான். அழித்தல் என்பது வெளிரங்கமான பொருட்சேதத்தைக் கொண்டோ மறைமுகமான பரக்கத்தை நீக்குவது கொண்டோ ஏற்படலாம். தர்மங்களுக்கு பலமடங்கு நன்மைகளை அளிக்கிறான். அவற்றை பத்துமடங்கிலிருந்து எழுநூறு மடங்குவரை அவன் அதிகரிக்கச் செய்கிறான். தர்மம் சய்வோரின் சொத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்துகிறான். அல்லாஹ்வை நிராகரிக்கக்கூடிய, அவன் தடைசெய்ததை அனுமதிக்கப்பட்டதாகக் கருதக்கூடிய, பாவங்களில் உழலக்கூடிய பிடிவாதக்காரனை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ لَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ ۚ— وَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟
2.277. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றி, நற்செயல்கள் புரிந்து, அல்லாஹ் விதித்தபடி தொழுகையை முழுமையாக நிறைவேற்றி, தங்கள் செல்வங்களிலிருந்து ஸகாத்தை உரியவர்களுக்கு அளிப்பவர்களுக்கு அவர்களின் இறைவனிடம் கூலி இருக்கின்றது. அவர்கள் எதிர்காலத்தில் நிகழக்கூடியவற்றை எண்ணி அச்சம்கொள்ள மாட்டார்கள்; உலகில் இழந்துவிட்டவற்றை எண்ணி கவலைகொள்ளவும் மாட்டார்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَذَرُوْا مَا بَقِیَ مِنَ الرِّبٰۤوا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟
2.278. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! அவனுடைய கட்டளைகளை நிறைவேற்றி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். நீங்கள் அல்லாஹ்வின்மீதும் அவன் வட்டியைத் தடைசெய்திருப்பதையும் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் மக்களிடம் எஞ்சியுள்ள உங்களது வட்டிப்பணத்தை எடுக்காது விட்டுவிடுங்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
فَاِنْ لَّمْ تَفْعَلُوْا فَاْذَنُوْا بِحَرْبٍ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ ۚ— وَاِنْ تُبْتُمْ فَلَكُمْ رُءُوْسُ اَمْوَالِكُمْ ۚ— لَا تَظْلِمُوْنَ وَلَا تُظْلَمُوْنَ ۟
2.279. உங்களுக்குக் கட்டளையிட்டபடி நீங்கள் செய்யவில்லையெனில் அல்லாஹ்விடமிருந்தும் அவனுடைய தூதரிடமிருந்தும் போரை எதிர்பாருங்கள். நீங்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கோரி, வட்டியை விட்டுவிட்டால் நீங்கள் அளித்த கடனின் அசல்மூலதனம் உங்களுக்குத்தான். உங்கள் அசல்மூலதனத்திற்கு அதிகமாகப் பெற்று எவர்மீதும் அநீதி இழைத்துவிடாதீர். வழங்கிய கடனைவிட குறைத்து உங்களுக்கு அநீதி இழைக்கப்படவும் மாட்டாது.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَاِنْ كَانَ ذُوْ عُسْرَةٍ فَنَظِرَةٌ اِلٰی مَیْسَرَةٍ ؕ— وَاَنْ تَصَدَّقُوْا خَیْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۟
2.280. உங்களிடம் கடன் வாங்கியவர் கடனை செலுத்த முடியாத அளவுக்கு கஷ்டத்தில் இருந்தால் வசதி ஏற்படும் வரை அவருக்கு அவகாசம் அளியுங்கள். அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் சிறப்பினை நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் அவருடைய கடனை முழுமையாகவோ ஒரு பகுதியையோ தள்ளுபடி செய்து அதை அவருக்குத் தர்மமாக ஆக்கிவிடுவதே உங்களுக்குச் சிறந்ததாகும்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَاتَّقُوْا یَوْمًا تُرْجَعُوْنَ فِیْهِ اِلَی اللّٰهِ ۫— ثُمَّ تُوَفّٰی كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟۠
2.281. நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடம் திரும்பும் நாளின் வேதனையை அஞ்சுங்கள். அப்போது அவனுக்கு முன்னால் நிற்பீர்கள். பின்னர் ஒவ்வொருவருக்கும் அவர்கள் சம்பாதித்த நன்மை தீமை என்பவற்றுக்கான கூலி வழங்கப்படும். உங்களின் நன்மைகள் குறைக்கப்பட்டோ தீமையை விட அதிகமாக தண்டிக்கப்பட்டோ உங்கள்மீது அநீதி இழைக்கப்படாது.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• من أعظم الكبائر أكل الربا، ولهذا توعد الله تعالى آكله بالحرب وبالمحق في الدنيا والتخبط في الآخرة.
1. வட்டி வாங்கி உண்பது மிகப் பெரிய பாவமாகும். எனவேதான் அதனை உண்பவர்களை அல்லாஹ் போர், உலகில் இழப்பு, மறுமையில் தடுமாற்றம் போன்றவற்றைின் மூலம் எச்சரிக்கிறான்.

• الالتزام بأحكام الشرع في المعاملات المالية ينزل البركة والنماء فيها.
2. பொருளாதார விஷயங்களில் அல்லாஹ்வின் சட்டங்களை முறையாகக் கடைப்பிடிப்பதால் அவற்றில் பரக்கத்தும் வளர்ச்சியும் ஏற்படுகிறது.

• فضل الصبر على المعسر، والتخفيف عنه بالتصدق عليه ببعض الدَّين أو كله.
3. கடனை அடைக்கமுடியாமல் சிரமப்படுபவர் விடயத்தில் பொறுமைமேற்கொள்வதும் கடனை முழுமையாகவோ ஒரு பகுதியையோ தள்ளுபடி செய்து தர்மம் செய்வதும் சிறப்புக்குரியவைகளாகும்.

 
የይዘት ትርጉም ምዕራፍ: አል-በቀራህ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት